பாப்கார்ன்: திறன்பேசியே கதி!

By செய்திப்பிரிவு

‘திறன்பேசி இன்றி அமையாது உலகு’ எனும் அளவுக்கு இன்று எல்லோருடைய கைகளிலும் தவழ்கிறது திறன்பேசி. காலையில் கண் விழிப்பது முதல் இரவில் உறங்கச் செல்லும் வரை திறன்பேசியோடு கணிசமான நேரத்தைச் செலவிடுவோர் அதிகம். இந்நிலையில் திறன்பேசிகளின் பயன்பாடு குறித்து எக்ஸ்ப்ளோடிங் டாபிக்ஸ் என்கிற நிறுவனம் ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி உலகில் ஒருவர் சராசரியாக தினமும் 3.15 மணி நேரம் திறன்பேசியில் செலவழிப்பதாக அந்த ஆய்வு சொல்கிறது.

57 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகளவில் திறன்பேசியில் நேரத்தை செலவிடுவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஒருவர் தினமும் சராசரியாக 58 முறை தன்னுடைய திறன்பேசியை அவ்வப்போது எடுத்துப் பார்க்கிறாராம். வேலை நேரத்தில் மட்டும் 30 முறை பார்க்கிறாராம். திறன்பேசி அதிகப் பயன்பாட்டில் பிலிப்பைன்ஸ் முதலிடத்தில் உள்ளது. ஒரு பிலிப்பைன்ஸ் குடிமகன் தினமும் 5.47 மணி நேரம் திறன்பேசியில் மூழ்கிக் கிடக்கிறாராம். இந்தியர்கள் சராசரியாக 4.05 மணி நேரம் செலவிடுகிறார்கள்.

நம்பர் ஒன் பிரியாணி! - உணவு உள்ளிட்ட டெலிவரி சேவையை வழங்கி வரும் ஸ்விக்கி ஒவ்வோர் ஆண்டும் ஆர்டர் பட்டியலில் முதலிடம் பிடித்த உணவு பற்றி தகவல்களைப் பகிர்வது வழக்கம். 2023ஆம் ஆண்டில் ஸ்விக்கி ஆர்டர் பட்டியலில் பிரியாணி முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. பிரியாணி இப்படி முதலிடத்தைப் பிடிப்பது இது முதல் முறையல்ல, எட்டாவது முறை! விநாடிக்கு 2.5 பிரியாணிகள் ஸ்விக்கியில் ஆர்டர் செய்யப்பட்டிருக்கின்றன. நிமிடத்துக்கு 137 பிரியாணிகளின் ஆர்டர் குவிந்திருக்கிறது.

இதேபோல புதிதாக ஸ்விக்கியில் ஆர்டர் செய்தவர்களில் 25 லட்சம் பேர் பிரியாணியையே முதல் ஆர்டராக கொடுத்திருக்கிறார்கள். 2023இல் மட்டும் சுமார் 40 லட்சம் பேர் பிரியாணியை ஸ்விக்கியில் தேடியிருக்கிறார்கள். இந்தியாவில் வாங்கப்பட்ட 6 பிரியாணிகளில் ஒன்று ஹைதராபாத்தில் வாங்கப்பட்டிருக்கிறது. இதேபோல ஒரு நிமிடத்துக்கு 188 பீட்சாக்கள் ஆர்டர் செய்யப்பட்டிருக்கின்றன.

சாக்கு ஜாக்கெட்! - சாக்குப் பையை நாம் என்ன செய்வோம்? தேவையில்லாத பொருட்களை போட்டு மூட்டைக் கட்டி வைப்போம். ஆனால், நியூயார்க்கைச் சேர்ந்த ஃபேஷன் டிசைனர் கிறிஸ் மேனா சற்று வித்தியாசமானவர். சாக்குப் பையில் ஜாக்கெட்டைத் தைத்து சமூக வலைதளங்களில் வைரல் ஆகியிருக்கிறார்.

தூக்கி எறியப்பட்ட சணல் சாக்கு பை, தோல் பொருட்கள், பழைய பொருட்களைக் கொண்டு புதிய ஜாக்கெட்டை வடிவமைத்திருக்கிறார் கிறிஸ். சுமார் ஒரு மாதக் காலம் பொறுமையாக இருந்து இந்த ஜாக்கெட்டை உருவாகியிருக்கிறார் அவர். அண்மையில் தான் உருவாக்கிய சாக்கு ஜாக்கெட்டை தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் கிறிஸ் பகிர்ந்தார்.

அவருடைய ஜாக்கெட்டைப் பற்றி புகழ்ந்து தள்ளிவிட்டனர் நெட்டிசன்கள். மேலும் சமூக வலைத்தளம் வழியாகவே பலரும் ஆர்டரையும் கொடுத்து அசத்தியிருக்கின்றனர். இந்திய மதிப்பில் இந்த ஜாக்கெட்டின் விலை ரூ. 2 லட்சமாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்