பொங்கல், கரும்பு, விடுமுறை குதூகலம் இவற்றைத் தாண்டி பாரம்பரிய உடைகளும் ஜல்லிக்கட்டும் இன்றைய இளைய தலைமுறையினரின் பொங்கல் விருப்பப் பட்டியலில் சேர்ந்துவிட்டன. எப்போதும் ஜீன்ஸ் சகிதம் காட்சியளிக்கும் இளைஞர்கள் அன்றைய தினம் ‘அரும்பாடுபட்டு’ வேட்டிக்கு மாறிவிடுகிறார்கள். விதம்விதமாக மாடர்ன் உடைகளில் வலம் வரும் யுவதிகளும் பாரம்பரிய உடையான சேலைக்குத் தாவி விடுகிறார்கள்.
சென்ற ஆண்டு இளைஞர்கள் முன்னின்று நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்தால், ஜல்லிக்கட்டு விளையாட்டு மீதான ஆர்வமும் இந்த ஆண்டு இளைஞர்களிடம் அதிகரித்திருக்கிறது. இந்த ஆண்டு பொங்கலை எப்படிக் கொண்டாடப் போகிறீர்கள் என்று சில இளைஞர்களிடம் கேட்டோம்.
ஒட்டுற வேட்டி
“சில வருஷமா பொங்கல் அன்னைக்கு வேட்டிக் கட்டுறதுல ஆர்வம் வந்துடுச்சி. வேட்டிக் கட்டிட்டுப் போனாவே தனி கெத்துதான். வேட்டி கட்டினா அவிழ்ந்துக்குமோன்னு பயந்திருக்கேன். இப்போதான் ஒட்டுற வேட்டி வந்துட்டதால, வேட்டி கட்டிக்கிறதும் ஈஸியாடுச்சு.
போன வருஷம் மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தப்போ, நண்பர்களோட போய் கலந்துகிட்டேன். பாரம்பரியத்தை மீட்பதற்காக நடந்த போராட்டம் என்பதால, ஜல்லிக்கட்டு மீதும் ஆர்வம் வந்துடுச்சு. சென்னையில இருக்குற மக்கள் ஜல்லிக்கட்டை நேர்ல பார்த்திருக்கமாட்டாங்க. இதுவரைக்கும் டி.வி.யில்தான் நான் ஜல்லிக்கட்டைப் பார்த்திருக்கேன். இந்த வருஷம் சென்னையில ஜல்லிக்கட்டு நடக்கும்ணு சொல்லியிருக்கதால, ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. ஜல்லிக்கட்டைப் பார்க்க ஆர்வமா இருக்கேன்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஜேஷுருண் சார்லஸ்.
ஜல்லிக்கட்டு ஆர்வம்
“முன்பெல்லாம் பொங்கல் திருநாள் வரப்போ, சேர்ந்தாப்ல 4 நாள் லீவு கிடைக்குமேன்னு சந்தோஷமா இருக்கும். இப்போ என்ன கலர் புடவை கட்டலாம்கிறதுல ஆர்வம் வந்துடுச்சு. பார்க்குற எல்லோரும் புடவையில இருக்குறப்ப, நாம மட்டும் மாடர்ன் டிரஸ்ல இருந்தா நல்லாவா இருக்கும்? போன வருஷம் ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி எப்டியோ ஜெயிச்சுட்டோம். இந்த வருஷம் ஜல்லிக்கட்டு பார்க்க ஆர்வமா காத்திருக்கேன்” என்கிறார் திருச்சியைச் சேர்ந்த ஹரிணி பார்த்தசாரதி.
புடவை சாய்ஸ்
“தினமும் புடவை கட்ட முடியாதுங்கிறதால பொங்கல் அன்னைக்கு என்னோட சாய்ஸ் புடவைதான். அழகா கட்டிக்கிட்டு கரும்பு சாப்பிட்டுட்டு, அம்மா ஆசையா செய்யுற சக்கர பொங்கலை சுடச்சுடச் சாப்பிட்டுட்டு டி.வி.யில புது படம் பார்ப்பேன். சென்னை மெரினா பீச்சில நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்துல கலந்துகிட்ட பிறகு, ஜல்லிக்கட்டை நேர்ல பார்த்தே தீருவதுன்னு தீர்மானமா இருக்கேன். சென்னையில் ஜல்லிக்கட்டு நடக்கப்போறதா ஃபேஸ்புக்குல பார்த்தேன். அப்படி நடந்துச்சுன்னா ஃபிரெண்ட்ஸோடு சேர்ந்து அதை பார்க்குறத்துன்னு இருக்கேன்” என்று புன்னைகைக்கிறார் சென்னையைச் சேர்ந்த சரண்யா .
ஜல்லிக்கட்டு குடும்பம்
“எங்க வீட்டுல எப்பவுமே தமிழர் மரபை மறந்திடக் கூடாதுங்கிறதல உறுதியா இருப்போம். அதனால, எங்க வீட்டுல ஆண்கள் எல்லோருமே வேட்டியிலும் பெண்கள் புடவையிலும் இருப்போம். 16 வகையான காய்கறிகள போட்டு சமைக்குற பொங்கலுக்காக அன்னைக்கு காலைலேர்ந்தே காத்திருப்பேன். அப்புறம், ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தப்போ, எங்க வீட்டுல என்னை அனுப்பி வைச்சாங்க. ஏன்னா, எங்க தாத்தா ஜல்லிக்கட்டுல கலந்துக்கிட்டு பரிசெல்லாம் ஜெயிச்சிருக்காரு. ஆனா, பாருங்க நான் ஒரு தடவைக்கூட ஜல்லிக்கட்டை நேர்ல பார்த்ததில்ல. இந்த வருஷம் எப்படியும் பார்க்கணும்னு இருக்கேன். அதனால என்னோட சொந்த ஊரான மதுரைக்குப் போய் ஜல்லிக்கட்டுப் பார்க்க திட்டம் போட்டிருக்கேன்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஐஸ்வர்யா.
மீசைய முறுக்கிட்டு
“என்னதான் ஜீன்ஸ், டிசர்ட் போட்டாலும், வேட்டிக்கு இருக்குற மதிப்பே தனிதான். வேட்டி கட்டிக்கிட்டு மீசைய முறுக்கிட்டு நடந்தா, அது தனி ஸ்டைலா இருக்கும். வேட்டி கட்டவே முன்னாடி பயந்தேன். இப்போ அந்தப் பிரச்சினையே இல்ல. பொங்கல் அன்னைக்கு வேட்டிய மடிச்சுக் கட்டிகிட்டு ஃபிரெண்ட்ஸோட சுத்துவேன். இந்த வருஷம் பொங்கலுக்கு மதுரைக்கு போலாம்னு இருக்கேன். ஏன்னா, மதுரையில ஜல்லிக்கட்டே ஒரு திருவிழா போல நடக்கும். நானும் ஜல்லிக்கட்டுல கலந்துக்கலாம்னு இருக்கேன். அப்புறம், சொந்தமா ஒரு காளை மாடு வாங்கி அதுக்குப் பயிற்சி தரலாம்னு இருக்கேன்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த வேலு.
நீங்க எப்படி கொண்டாடப் போறீங்க?
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago