பெயர்: லியோ
வசிப்பிடம்: அடியாட்களை ஐ.சி.யு.வுக்கு பொட்டலம் கட்டும் எல்.சி.யு.
எண்ணக்கூடியது: பட்ஜெட்டும் வசூலும்
எண்ணில் அடங்காதது: அடித்து வீழ்த்தப்படும் அடியாள்களும் கேமியோவில் வீணடிக்கப்பட்ட பிரபலங்களும்.
எப்போதும் வெடிப்பது: லியோ / பார்த்திபனின் துப்பாக்கி
மருந்துக்கும் வெடிக்காதது: காவலர்களின் துப்பாக்கி
பரிதாபத்துக்குரியது: ஹயீனா (கழுதைப் புலி)
பரலோகத்துக்கு அனுப்ப வேண்டியவர்கள்: தொழிலுக்குத் தடையாக இருக்கும் காவலர்களும் நண்பர்களும்
தேவைப்படுவது: லிட்டர் கணக்கில் ரத்தம்
மறைக்க முடிந்தது: கடந்த காலக் குற்றங்களை
மறைக்க முடியாதது: குறிபார்த்து சுடும் திறமையை
விடை கிடைத்த கேள்வி: லியோ இறந்துவிட்டானா?
விடை கிடைக்காத கேள்வி: லியோ திருந்திவிட்டானா?
சோஷியல் சர்வீஸ்: கழுதைப் புலியை வீட்டு விலங்காக மாற்றியது,
சோஷியல் மெசேஜ்: தொழிலுக்குக் கொலை செய்யலாம்; மூடநம்பிக்கைக்குக் கொலை செய்யக் கூடாது
நண்பர்கள்: மோசமான கதைக்கும் முட்டுக்கொடுக்கும் ரசிகர்கள்.
எதிரிகள்: பாயின்ட் பிடித்து பேசும் விமர்சகர்கள்
எதிர்பார்த்த ட்விஸ்ட்: லியோதான் பார்த்திபன் என்பது.
எதிர்பாராத ட்விஸ்ட்: லியோவின் முன்கதையே பொய் என லோகேஷ் உருட்டுவது.
சமீபத்திய சாதனை: ரூ. 500 கோடியைக் கடந்த வசூல்
நீண்டகால சாதனை: சர்ச்சைகளாலும் ஃபேன் தியரிகளாலும் சமூக ஊடக ட்ரெண்டிங்கில் இருப்பதை திட்டமிட்டு உருவாக்குவது. - காட்டுப்பூச்சி
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago