பொ
ய் பேசுவது தவறான பழக்கம். ஆனால், காதலிப்பவர்கள், காதலிக்க விரும்புபவர்கள், எப்போதும் உண்மையைச் சொல்லிக்கொண்டிருந்தால் சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள் என்பது உலகறிந்த உண்மை. காதல் உறவை வெற்றிகரமாகத் தொடர நினைப்பவர்கள், ‘வாய்மை என்பது யாதொன்றும் தீமையிலாத சொல்’ என்பதை நினைவில் வைத்துக்கொள்வது நல்லது. ‘நான் எப்போதும் உண்மையை மட்டுமே பேசுவேன்’ என்று முடிவெடுத்துவிட்டு நடந்தால், காதலில் நிச்சயம் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
காதலிப்பவர்கள் பாய் ஃபிரெண்டு, கேர்ள் ஃபிரெண்டிடம் சிக்கலில் சிக்காமல் இருப்பதற்காகச் சொல்ல வேண்டிய, சொல்லக்கூடிய சில ‘ஒயிட்’ லைஸ்.
புரியுது டியர்
உங்கள் காதலர், உங்களிடம் பிடிக்காத ஒரு விஷயத்தைப் பற்றித் தொடர்ந்து புலம்பித் தீர்க்கிறார் என்றால், அப்போது நீங்கள் சொல்ல வேண்டியது, ‘ஐ அண்டர்ஸ்டான்ட் டியர்’. இந்த வாசகம் பொய்யாக இருந்தாலும், வலிமையானது. இதைச் சொல்வதால் உங்கள் காதல் ஒன்றும் குடிமூழ்கிப் போகாது.
உன் ஃபிரெண்டைப் போல வருமா
உங்கள் காதலருடைய ‘பெஸ்டீஸ்’ஸிடம் நீங்களும் நட்பாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதற்காக அவர்களை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதைச் சொல்லவும் தேவையில்லை. காதலரிடம் ‘உன் ஃபிரெண்ட்ஸைப் போல நல்லவங்க யாருமே கிடையாது’ என்ற பொய்யைத் தாராளமாகச் சொல்லாம். இதனால் உங்களுடைய ரிலேஷன்ஷிப், ஃபிரெண்ட்ஷிப் என இரண்டையும் ‘பேலன்ஸ்’ செய்ததுபோலவும் இருக்கும்.
பரிசு பிடிச்சிருக்கு
உங்கள் காதலர் பரிசு கொடுத்தால், அதைத் திறந்த மனதுடன் பாராட்டுங்கள். உங்களுக்கு அந்தப் பரிசு பிடிக்கவில்லை என்றாலும், “எனக்குப் பிடிச்சிருக்கு! தேங்க் யூ சோ மச்!”என்று சொல்லும் பொய்யால் பெரிய ஆபத்து ஏதும் ஏற்படப்போவதில்லை.
நீ அழகாய் இருக்கிறாய்
‘இந்த டிரெஸ்ஸில் நீ அழகாய் இருக்கிறாய்!’ என்ற இந்தப் பொய்யை நம்பும்படி கூறினால், பல தேவையில்லாத காட்சிகளைத் தவிர்க்கலாம். உங்கள் காதலர் புது டிரெஸ் அணிந்து வந்து, நன்றாக இருக்கிறதா என்று கேட்டால், அந்த டிரெஸ் அவருக்குப் பிடித்திருப்பதால்தான் கேட்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள். அது உங்களுக்கும் பிடித்திருக்கிறது எனச் சொல்ல வேண்டும் என்பதை மட்டுமே அவர் எதிர்பார்க்கிறார் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். மாறாக, “டிரெஸ் நல்லா இல்லை” என்று உண்மையைச் சொன்னால், அது உங்கள் காதலைச் சொதப்பி விடவும் வாய்ப்பிருக்கிறது.
அம்மாகிட்ட பேசினேன்
நீங்கள் உங்கள் பெஸ்டீயிடம் சுவாரசியமான ‘கிசுகிசு’களைப் பேசிக்கொண்டிருக்கும்போது, பல தடவை உங்கள் காதலரின் மொபைல் அழைப்பு ஹோல்டில் போயிருக்கும். அதை நீங்கள் அலட்சியப்படுத்தியிருப்பீர்கள். ஆனால், நிச்சயம் மறுபடியும் காதலரிடம் பேசும்போது மறக்காமல், இவ்வளவு நேரம் யாரிடம் பேசிக்கொண்டிருந்தீர்கள் என்ற கேள்வியை எதிர்கொள்வீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அப்போது அவரிடம் ஃபிரெண்ட்கிட்ட பேசிக்கொண்டு இருந்தேன் என்று உண்மையைச் சொன்னால் தீர்ந்தது கதை. அம்மா/அப்பா/அக்கா/தங்கை/ தம்பி/அண்ணா என குடும்பத்தில் இருக்கும் யார் பெயரையாவது சொல்லி தப்பித்துக்கொள்வதுதான் சிறந்தது.
ஐ மிஸ் யூ
நீங்கள் உங்கள் குடும்பத்தினருடனோ நண்பர்களுடனோ வெளியே சென்று ஜாலியாகப் பொழுதைக் கழித்திருப்பீர்கள். உங்கள் காதலரை அங்கிருக்கும்வரை மறந்துகூடப் போயிருப்பீர்கள். ஆனால், திரும்பிவந்து காதலரிடம் பேசும்போது, கட்டாயம் ‘மிஸ்டு யூ சோ மச்’ என்று சொல்வார். பதிலுக்கு நீங்களும் ‘ஐ மிஸ் யூ டூ!’ என்பதை மட்டும் சொல்லுங்கள். ‘ஐ ஹேடு கிரேட் டைம் வித் மை ஃபிரெண்ட்ஸ்’ என்று சொன்னால் தொலைந்தீர்கள்.
பெரிய பொய் வேண்டாம்
“நான் பொய்யே சொன்னதில்லை!” என்ற பொய்யைக்கூட உங்கள் காதலர் நம்பும்படி சொல்லி வையுங்கள். இவற்றையெல்லாம் கடைப்பிடித்தால் உங்கள் ரிலேஷன்ஷிப்பில் வரும் பிரச்சினைகளைக் கொஞ்சம் சமாளிக்கலாம். ஆனால், காதலில் ‘ஒயிட் லைஸ்’ எனப்படும் ஆபத்தில்லாத இந்தப் பொய்களை மட்டுமே சொல்லலாம். பெரிய பொய்களைச் சொன்னால், உங்கள் காதல் மோசமான எதிர் விளைவுகளைச் சந்திக்கும் என்பதை எப்போதும் மறக்காதீர்கள்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago