ஜீவாவின் உடலைச் சுற்றி அழுதுகொண்டிருந்தார்கள் அவருடைய நண்பர்கள்.
ராம்சேகர் கேள்விக்குறியுடன் பார்க்க, இன்ஸ்பெக்டர் விக்ரம் பின்னணியை விளக்கினார்.
அகிலனுக்கு அழகான ஒரு தங்கை உண்டு. அவளைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டான் ஜீவா. தன் விருப்பத்தை அவளிடம் கூற, “எனக்கும் உங்களைப் பிடிச்சிருக்கு. ஆனா, அண்ணன் இதுக்குச் சம்மதிக்கமாட்டார்” என்று அவள் கூறியிருக்கிறாள்.
அகிலனை நேரில் சந்தித்துத் தன் விருப்பத்தைக் கூறினான் ஜீவா. அகிலனுக்குத் தாங்க முடியாத கோபம். “எந்த முகத்தை வச்சுக்கிட்டு என் தங்கையைக் கல்யாணம் செய்துக்கறேன்னு சொல்றே. எங்களுக்குன்னு சொந்தமா ரெண்டு வீடு இருக்கு. உனக்கு என்ன இருக்கு?’’ என்று கத்தினான். அதற்கு ஜீவா, “பணம் இல்லேன்னாலும் நான் படிச்சவன். ஒரு நல்ல வேலை கிடைக்காமல் போகாது. பணம் சேராமல் போகாது. ஆனால் உனக்குப் படிப்பு வாசனையே கிடையாது. ஏன், உங்க குடும்பத்தில யாருமே படிச்சவங்க இல்லே” என்று கூற வார்த்தைகள் தடித்தன. ஒருவழியாக மற்றவர்கள் அவர்களை விலக்கினார்கள். ஜீவா அதன் பிறகும் அகிலனைத் தொடர்ந்து அணுக அகிலன் தொடர்ந்து அவன் கோரிக்கையை மறுத்தான்.
ஜீவா அந்தப் பெண்ணை ஒருமுறை சந்தித்து, “நீயும் என்னை விரும்புறேன்னு எனக்குத் தெரியும். வீட்டை விட்டு வா, பதிவுத் திருமணம் செய்துக்கலாம்” என்று கேட்க, அவள் மறுத்திருக்கிறாள். கோபம் தலைக்கு ஏற, என்ன பேசுகிறோம் என்பதே புரியாமல், அன்று குடி வெறியிலும் இருந்த ஜீவா, அவள் ஒழுக்கத்தைப் பற்றிப் பலர் பார்க்கத் தவறாகப் பேசியிருக்கிறான். அந்தப் பெண் உணர்ச்சிவசப்பட்டுத் தற்கொலை செய்துகொண்டுவிட்டாள்.
தங்கையின் இறப்புக்கு எதிரொலியாகக் கையில் அரிவாளுடன் ஜீவாவைக் கொல்லப் புறப்பட்டான் அகிலன். ஆனால், இடையே குறுக்கிட்ட ஜீவாவின் நண்பனின் கழுத்தில் அந்த அரிவாள் பாய, அவன் குத்துயிரும் குலையுயிருமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். காவல் துறை அகிலனைக் கைதுசெய்தது. வழக்கில் அகிலனுக்கு நான்கு வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது. சிறையில் அடிக்கடி, “எப்படியும் அந்த ஜீவாவை நான் கொன்றே தீருவேன்” என்று அகிலன் உரக்கக் குரல் கொடுத்துக்கொண்டிருந்தான்.
“இதெல்லாம் நடந்து ஒரு வருடம் ஆயிடுச்சு ராம்சேகர். ஜீவா வெளிநாட்டில் ஒரு வேலையில் சேர முயன்றான். விசாவும் கிடைச்சிடுச்சு. அடுத்த வாரம் கிளம்புவதாக ஏற்பாடு. அதற்குள் இந்தக் கொலை நடந்துடுச்சு. நான் விசாரித்தவரையில் ஜீவாவைக் கொல்லக்கூடிய நோக்கம் அகிலனுக்கு மட்டும்தான் இருந்திருக்கு. இவன் வெளிநாடு போகும் தகவலும் அவனுக்குத் தெரிந்திருக்கு” என்றார் விக்ரம்.
“அகிலன் இப்பவும் சிறையிலேதானே இருக்கான். அதை உறுதி செய்துகிட்டீங்களா?”.
“உறுதி செய்துட்டேன். கொலை நடந்த நேரத்தில் அவன் சிறையில்தான் இருந்திருக்கிறான். எனவே, அவன் வேறு யார் மூலமாகவோ இந்தக் கொலையை நடத்தியிருக்க வேண்டுமென்று சந்தேகம் இருக்கு” என்ற விக்ரம், சுதந்திர தினத்தன்று அந்தச் சிறை வளாகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் வீடியோவைப் போட்டுக் காட்டினார்.
மைதானத்தில் கைதிகள் அமர்ந்திருக்க, சிறைக் கைதி ஒருவர் மைக்கைப் பிடித்தபடி உரையாற்றிக்கொண்டிருந்தார். “சிறையில் இருப்பவர்கள் எல்லாம் பாவிகள் என்றும் வெளியில் இருப்பவர்கள் எல்லாம் நல்லவர்கள் என்றும் கூறிவிட முடியாது. சிறைக்குள்ளேயிருந்து பார்க்கும்போது வெளியில் இருப்பவர்கள்தாம் சிறையில் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. சிறையிலிருந்து வெளியே வருபவர்களை ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற அடிப்படையில் கருணையுடன் அணுக வேண்டும்”.
அப்படிப் பேசியவரை சுட்டிக்காட்டி “இவன்தான் அகிலன்” என்றார் விக்ரம்.
அடுத்த சில நொடிகளில் விக்ரமும் ராம்சேகரும் சிறையை நோக்கிப் புறப்பட்டார்கள். இருவரும் தனித்தனி திசைகளில் விசாரணைகளைத் தொடங்கினர்.
சிறைக் கண்காணிப்பாளரை ராம்சேகர் விசாரித்தபோது, “எனக்கு கட்டப்பா என்பவன் மீது சந்தேகம். அகிலனின் அடுத்த செல்லில் சிறைப்பட்டிருக்கிறான் அவன். அவன் அம்மா இறந்ததற்காக அவனை பரோலில் அனுப்பியிருக்கிறோம். நாளைக்குத்தான் அவன் வந்து சேர வேண்டும். கட்டப்பாவும் அகிலனும் நண்பர்கள்” என்றார்.
சற்று நேரம் பொறுத்து இன்ஸ்பெக்டர் வந்தார். “சிறை நூலகர் என் நண்பர். அவரிடம் விசாரித்தபோது தாஸ் என்ற ஒருவனை அவர் சந்தேகிக்கிறார். சிறையில் சாப்பிடும்போதெல்லாம் அகிலனும் அவனும் ஒன்றாகத்தான் சாப்பிடுவார்களாம். “நீ சொல்றது நியாயம்தான். எனக்கே அந்த ஜீவாவைக் கொல்லணும்போல இருக்கு” என்று தாஸ் ஒருமுறை கூறியதை நூலகர் கேட்டிருக்கிறார். ஆனால், அந்த தாஸ் வெளியேறியதற்கு எந்த ஆதாரமும் இல்லை” என்றார்.
பின்னர் “சிறையில் இருக்கும் ஒருத்தர் மூலமாகத்தான் ஜீவாவை அகிலன் தீர்த்துக் கட்டியிருக்கணும். அந்தக் கோணத்தில் பார்த்தால் கட்டப்பா, தாஸ் ஆகிய இரண்டு பேர் நம்ம விசாரணை வட்டத்துக்குள் வராங்க. இந்த ரெண்டு பேரிலே யாரிடம் நாம் விசாரணையைத் தொடங்கலாம்?” என்று ராம்சேகரைக் கேட்டார் விக்ரம்.
ராம்சேகரின் பதில் விக்ரமுக்கு வியப்பை அளித்தது. பின்னர் அதிலுள்ள லாஜிக்கைப் புரிந்துகொண்ட போது மிகவும் பாராட்டுதலுடன் ராம்சேகரிடம் கைகுலுக்கினார் அவர். ராம்சேகரின் ஊகம் என்னவாக இருக்கும்?
சென்ற வார விடை
‘கொலை முயற்சியின் சூத்திரதாரி’ யார்? பட்டேலிடம் விசாரித்த பிறகு எதற்காக ராம்சேகர் மீண்டும் அந்த வீட்டுக்குள் நுழைய வேண்டும்?
அந்த வீட்டில் தந்தையும் மகனும் வசிக்கிறார்கள். வட இந்தியர்கள் தங்கள் பெயரின் பிற் பகுதியாக தங்கள் குடும்பப் பெயரைச் சேர்த்துக்கொள்வது வழக்கம். ஆக, படேல் என்பது அப்பா, மகன் ஆகிய இருவரின் பெயர்களிலும் உள்ளது. பத்மினியிடம் தொடர்புக்கொண்டு பின் அவரைத் தாக்கியது அப்பாவான சந்திரகுமார் படேல். அவர் மனைவியை இழந்தவர். எனவே மகனோடு வசிக்கிறார். மகன் ராஜ்குமார் படேல் குற்றமற்றவர். அவர் பெங்க
(துப்பறியலாம்)
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago