சொகுசான வெஸ்பா எக்ஸ்க்ளுஸிவோ

By ரோஹின்

இந்தியச் சாலைகளில் மட்டுமல்ல இந்தியர்களின் மனங்களிலும் ஸ்கூட்டருக்குத் தனியிடம் உண்டு. ஸ்கூட்டர் ஆண்களுக்கென்றால் பெண்களுக்கு ஸ்கூட்டி. டிவிஎஸ் நிறுவனம் தயாரித்த ஸ்கூட்டியில் இளம் பெண்கள் விரையும் அழகே அழகு.

காதல் சந்தியாவுக்குப் பின்னர் ஸ்கூட்டி எத்தனையோ பெண்களின் கனவு வாகனமானதுக்குக் காதல் மட்டுமா காரணம், ஸ்கூட்டியும்தானே காரணம். எப்படியோ ஸ்கூட்டரும் ஸ்கூட்டியும் இந்திய இளைஞரின் மனசுக்குப் பிடித்த வாகனங்கள்.

இந்தியர்களிடம் ஸ்கூட்டருக்கு இருக்கும் மவுசை அறிந்து பியாஜியோ வாகனத் தயாரிப்பு நிறுவனம் வெஸ்பா எக்ஸ்க்ளுஸிவோ என்னும் புது மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் வெஸ்பா மாடல் ஏற்கெனவே அநேக இந்தியர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டுள்ளது. அதற்குக் கிடைத்த வரவேற்பால் வெஸ்பா விஎக்ஸ் மாடலில் சில வசதிகளைக் கூட்டி, மிகவும் ஸ்டைலிஷாக உருவாகியுள்ள இந்த மாடல் இளைஞர்களைக் குறிவைத்தே தயாரிக்கப்பட்டுள்ளது.

இப்போதைக்கு வெறும் ஆயிரம் ஸ்கூட்டர்கள் மட்டுமே இந்த மாடலில் தயாராகியுள்ளன. இந்த லிமிடெட் எடிஷன் ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் பேட்ஜ் ஒன்றைப் பொருத்தியுள்ளார்கள். இதில் ஒன்று முதல் ஆயிரம் வரையான எண்கள் பொறிக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளருக்குப் பிடித்த எண்ணை வாங்கிக்கொள்ளலாம்.

கறுப்பு, சிவப்பு, வெள்ளை ஆகிய வண்ணங்களில் இந்த புதிய வெஸ்பா எக்ஸ்க்ளுஸிவோ கிடைக்கிறது. கறுப்பு கலர் வண்டியில் முன்புறத்திலும் பக்கவாட்டிலும் சீட்டிலும் சிவப்பு நிறப் பட்டை ஒன்று வசீகரிக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. இதைப் போல் வெவ்வேறு கலர் கொண்ட வண்டியில் வெவ்வேறு பட்டைகள் உள்ளன. புனே, ஹைதராபாத், பெங்களூர் ஆகிய நகரங்களில் உள்ள ஷோ ரூம்களில் வெஸ்பா எக்ஸ்க்ளுஸிவோ மாடலை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அதிக எடையைத் தாங்கும் உறுதிமிக்க ஸ்டீல் பாடி கொண்ட இந்த ஸ்கூட்டர் பவர்ஃபுல்லான 3 வால்வ், 125சிசி 4 ஸ்ட்ரோக் இஞ்ஜின் சக்தியில் இயங்குகிறது. ஸ்கூட்டரில் டியூப் இல்லாத கறுப்பு நிற அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டர் ஒரு லிட்டர் பெட்ரோலில் 50 கிமீ தூரம் ஓடும். இந்த மாடலில் ஆயிரம் ஸ்கூட்டர்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைக்கும் என எதிர்பாக்கப்படுகிறது. இதன் விலை ஷோ ரூமில் ரூ. 74,355, சாலையில் ஓடும் நிலைக்கு வர ரூ. 81,100.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்