புதுமைப் பயணம்: நடுக்காட்டில் ஒரு நட்சத்திர உலா!

By கனி

ர் அடர்ந்த காடு. அந்தக் காட்டுக்குள் அச்சமின்றி இரவில் தங்க வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வீர்கள்? என்னது, இரவில் காட்டுக்குள் இருப்பதா என்றுதானே எதிர்க்கேள்வி கேட்பீர்கள். ஆனால், பிரான்சில் அப்படி ஒரு வாய்ப்பை விரும்பி கேட்டுச் செல்கிறார்கள். எதற்காகத் தெரியுமா? நள்ளிரவில் நட்சத்திரங்களையும் முழுநிலவையும் ரசிப்பதற்காக செல்பவர்களின் பட்டியல் பிரான்சில் அதிகரித்து வருகிறது. இப்படி வருபவர்களின் கனவை நனவாக்க ‘தி பப்பிள்ஸ் ஆஃப் போர்தோ’ (The Bubbles of Bordeaux) என்ற புதிய ‘அவுட்டோர் கேம்பிங்’ யோசனையும் பிரான்சில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த ‘கேம்பிங்’ பயணம் என்பது குமிழுக்குள் வசித்தபடி இயற்கையை ரசிப்பது. குமிழுக்குள் வசிப்பதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறது இந்தப் புதுமையான பயணம். பிரான்ஸ் நாட்டின் போர்தோ, செயின்ட் எமிலியோன் காட்டுப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் புதுமை கேம்பிங், வெளிப்புறம் முழுமையாகத் தெரியும்படியான குமிழுக்குள் இருந்தபடி நட்சத்திரங்களை ரசிக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு பாதுகாப்பாகத் தூங்கும் வசதியும் செய்யப்பட்டிருக்கிறது. குளியலறை, மின்சாரம் போன்ற வசதிகளும் இந்தக் குமிழ்களுக்குள் இருக்கின்றன. சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் ஆடம்பர வசதிகளுடன் இவை வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

இந்தக் குமிழ்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதியில், சுவையான ஒயின்களும் திராட்சைகளும் பிரபலம். அதனால், இங்கு அமைக்கப்பட்டுள்ள ஐந்து குமிழ்களுக்கும் ‘காபர்நெட்’, ‘மெர்லோட்’, ‘முஸ்காடெல்’, ‘வெர்டோட்’, ‘செமிலோன்’ என்ற பிரபல ஒயின்கள், திராட்சை வகைகளின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாமல், பாதி வெளிப்படைத் தன்மைவாய்ந்த குமிழ்களும் உள்ளன. இரண்டில் விருப்பமானவற்றைப் பயணிகள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இங்கு தங்கும் பயணிகளுக்குச் சுவையான பிரெஞ்சு உணவுகள் பரிமாறப்படுகின்றன. இந்த போர்தோ குமிழ்களில் ஒரு நாள் தங்குவதற்கான கட்டணம் 180 யூரோ (1.37 லட்சம் ரூபாய்).

பிரான்சில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் குமிழ்களில் நட்சத்திரங்களை ரசிக்கும் பயணம் பிரபலமாகிக்கொண்டிருக்கிறது. தெற்கு பிரான்சில் போன்ட்-செயின்ட்-எஸ்ப்ரிட்டில் அமைந்திருக்கும் ‘மேஸோன் புல்’ (Maison Bulles) குமிழ்களில் தொலைநோக்கியில் நட்சத்திரங்களை ரசிக்கிறார்கள். ஐஸ்லாந்தில் பயணிகள் ‘பப்பிள் லாட்ஜ்’ஜில் (Bubble Lodge) ‘அரோரா பொரியலிஸ்’ என்னும் துருவ ஒளித் தோற்றத்தை ரசிக்கிறார்கள். தெற்கு பின்லாந்தில் அமைந்திருக்கும் நெல்லிம் வைல்டர்நெஸ் ஹோட்டலில், பயணிகள் கண்ணாடிக் குமிழ்களில் துருவ ஒளித் தோற்றத்தை ரசிக்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்