இந்தியா தாண்டிச் சென்று சிம்பொனி இசை வழங்கிய இளையராஜா, பான் இந்தியன் சினிமா ஒன்றுக்கு இசையமைத்துள்ளார். யாமினி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் அந்தப் பன்மொழித் திரைப்படம் ’மியூசிக் ஸ்கூல்’. தமிழ் மொழிப் பதிப்பை பி.வி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
முழுவதும் இசையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் ஸ்ரேயா சரண், ஷர்மன் ஜோஷி, ஷாம், பிரகாஷ் ராஜ் ஆகியோருடன் அறிமுக நடிகர்களான ஓசு பருவா, கிரேசி கோஸ்வாமி உட்படப் பல பிறமொழித் திரைப்பட நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். “இத்தலைமுறையில் மன அழுத்தத்தில் தவிக்கும் மாணவர்களுக்கு இசை எப்படி மருந்தாக அமைகிறது என்பதைக் கூறும் படத்தில், இசையை ஒரு கதாபாத்திரம் ஆக்கியிருக்கிறார் ராஜா சார் ” என்கிறார் இயக்குநர்.
‘கிடாரி’ இயக்குநரின் தொடர்! - ‘தாராள பிரபு’ உட்பட பல வெற்றிப் படங்களைத் தயாரித்தும் விநியோகித்து வரும் நிறுவனம் ‘ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட். முதல் முறையாக இந்நிறுவனம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாருடன் இணைந்து ஒரிஜினல் இணையத் தொடர் ஒன்றைத் தயாரித்திருக்கிறது. இதில் அதர்வா முரளி, மணிகண்டன், நிகிலா விமல் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரகளை ஏற்றிருக்கிறார்கள்.
» கோவை, சென்னையில் உள்ள லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
இதை ‘கிடாரி’ படப் புகழ் பிரசாத் முருகேசன் இயக்கியிருக்கிறார். ‘மத்தகம்’ என்று தலைப்புச் சூட்டியுள்ளனர். “மத்தகம் என்பது யானையின் முன்நெற்றியை குறிக்கும் சொல். யானை தும்பிக்கையுடன் இணைந்த தனது மத்தகத்தைத் தன்னைக் காத்துக் கொள்ளவும், தாக்கவும் பயன்படுத்தும். இத்தொடரின் நாயகனும் அப்படிப்பட்டவன் தான். 30 மணி நேரத்தில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களின் தொகுப்பே இத்தொடர்” என்கிறார் இயக்குநர். இதற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.
கூடைப்பந்தின் உணர்வு!
கூடைப்பந்தினைக் கதைக் களமாகக் கொண்ட விளையாட்டுத் திரைப்படங்களுக்கு மொழி கடந்த வரவேற்பு உண்டு. ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர், ஆஸ்கர் விருது பெற்ற திரைக்கதை ஆசிரியர் பென் அஃப்லெக் இயக்கத்தில், கடந்த மாதம் ஐரோப்பா முழுவதும் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் ‘ஏஐஆர்’ (AIR). நம்பிக்கை அனைத்தையும் இழந்த நிலையில் இருக்கும் ஒரு கூடைப்பந்து விளையாட்டுக் குழு மேற்கொள்ளும் சவாலான போட்டிதான் கதைக் களம்.
தன் மகனது மகத்தான திறமையின் மதிப்பை அறிந்திருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாத ஒரு தாயின் நம்பிக்கையும் அதை உள்ளுணர்வால் அறிந்துகொண்டு போராடும் அந்த அணியின் முக்கிய வீரராக இருக்கும் மகனும் என உணர்வையும் திறமையையும் ஓரிழையில் இணைக்கும் திரைப்படம் என்று விமர்சகர்கள் பாராட்டியுள்ள இதை, அமேசன் பிரைம் வீடியோவில் காணலாம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago