தோள் உயரத்துக்கும் மேலாக வளர்ந்த மகனின் மரணம், நடுத்தர வயதைக் கடந்த பெற்றோருக்கு எவ்வளவு வலியானது என்பதை அவல நகைச்சுவை மூலம் சித்தரிக்கிறது ‘ஒன் வீக் எ டே’ (One Week and a Day/Shavua ve Yom/2016) திரைப்படம். இஸ்ரேலின் புதிய தலைமுறை இயக்குனர் ஆசாப் பொலோன்ஸ்கியின் இயக்கத்தில் வெளியான இந்தப் படம், இழப்பு என்பதும் வாழ்வின் நிலையாமை என்பதும் எல்லா கலாச்சாரத்திலும் மனிதர்களிடம் ஒரே மாதிரியான தாக்கத்தை உருவாக்கக் கூடியதுதான்; ஆனால், அதிலிருந்து மீண்டு வர ஒரு கால அவகாசம் எடுக்கும் என்பதை அவல நகைச்சுவை கலந்து எடுத்துக்காட்டினார்.
நடுத்தர வயதைக் கடந்த யூதப் பெற்றோர், தங்களுடைய மகன்தான் எல்லாமும் என்று வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவன் திடீரென இறந்து போகிறான். மகனின் இழப்புக்குப் பிறகு வாழ்வுக்கு ஏதேனும் அர்த்தம் இருக்க முடியுமா என்று நினைக்கிறார்கள். குறிப்பாக இறந்தவனின் அப்பா, துக்கம் கேட்க வரும் அக்கம் பக்கத்து வீட்டின் ஆட்களைக் கூட சந்திக்காமல், தனது அலுலவகப் பணிக்கும் செல்ல மனமில்லாமல், தனிமையில் சித்த பிரம்மையாளரைப்போல் அல்லாடுகிறார். அவரை அவருடைய மனைவி மீட்டுகொண்டுவர என்னவெல்லாம் செய்கிறார் என்பதை இந்தப் படத்தில் காணலாம்.
மரணம் பற்றிய உலக சினிமாக்களின் பெரும் பட்டியலில், இது புத்தாயிரத்துக்குப் பிறகான அசல் படைப்புகளில் ஒன்று எனலாம். முக்கிய உறவின் இழப்புக்காக கண்ணீரைப் பொழிந்தபடி இருத்தல், வாழ்க்கையே முடிந்துவிட்டது என நினைத்தல் என பல விதங்களில் பெருதுக்கம் வெளிப்படுகிறது. இதில் கண்ணீர் முட்டாத தருணங்களுடன் சிரிப்பதற்கு அதிக இடங்களை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.
» தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22
» போட்டித் தேர்வர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?
சென்னையில் நாளை தொடங்கி (மார்ச் 23 முதல் 25 வரை) 3 நாட்கள் நடைபெறவிருக்கும் இஸ்ரேலிய உலகப் படவிழாவில் ‘ஓபனிங் பிலிம்’ ஆகத் திரையிடப்படவிருக்கிறது ‘ஒன் வீக் எ டே’. பெங்களூருவில் உள்ள தென்னிந்தியாவுக்கான துணைத் தூதரகத்துடன் (Consulate General of Israel to South India, Bengaluru) இணைந்து, சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவை ஆண்டுதோறும் ஒருங்கிணைத்துவரும் இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தாகூர் திரைப்பட மையத்தில் (Tagore Film Centre) நாளை மாலை 7 மணிக்கு தொடக்க விழாவுக்குப் பின் முதல் படம் திரையிடப்பட விருக்கிறது.
தனக்கான வழி
பட விழாவிn இரண்டாம் நாள் மாலை 6 மணிக்கும் அதன்பின்னர் 7.30 மணிக்கும் இரண்டு 2 படங்கள் திரையிடப்படுகின்றன. அதில் முதலாவதாக ‘ஸ்காஃப்ஃபோல்டிங்’ (Scaffolding/Pigumim/2017) திரையிடப்படவிருக்கிறது. புத்தாயிரத்துக்குப் பிறகான இஸ்ரேலின் புதிய தலைமுறை இளைஞர்களின் மனவோட்டத்தையும் கட்டுடைப்பையும் காட்சிப்படுத்தியிருக்கிறது இப்படம்.
17 வயதான ஆஷர் இளங்கலை பயின்று வருகிறான். எப்போதும் மனக்கிளர்ச்சியுடன் துறுதுறுவென திரிந்து பலரது வம்பை விலைக்கு வாங்கிகொண்டு வருபவன். அவனுடைய கண்டிப்பான தந்தை, ஆஷர் தனது தொழிலைக் கற்றுகொண்டு நிறைய சம்பாதிக்க வேண்டும் என நினைக்கிறார். ஆஷரின் தந்தை, கட்டுமானத் தொழிலுக்கு அவசியமான சாரங்கட்டுதலில் ஆண்டு முழுவதும் பிஸியாக இருப்பவர். அத்தொழிலுக்கு ஆட்கள் கிடைக்காத நிலையில் தன்னைப்போல் மகனும் இத்தொழிலில் நிறைய சம்பாதிக்கலாம் என்பது அவரது எண்ணம். ஆனால், ஆஷர் ரசனை மிகுந்தவன். கல்லூரியில் தனது இலக்கிய ஆசிரியர் ராமியுடன் உணர்வுபூர்வமான ஒரு நட்பை உருவாக்கிக் கொள்கிறான். ராமி, ஆஷருக்குக் காட்டும் உலகம், சாரங்கட்டுவதைப் போல ஒற்றைத் தன்மை கொண்ட கடினமான உடல் உழைப்பைக் கோருவது அல்ல. அது கற்பனைகள், கதை சொல்லல், கவிதை, இலக்கிய என விரிகிறது. அந்த உலகில் தனக்கான புதிய சாத்தியங்களைக் காணத் தொடங்குகிறான் ஆஷர்.
குழந்தை அரக்கன்
இரண்டாம் நாளின் இரண்டாவது படமாக ’அபுலேலே’ (Abulele/2015) திரையிடப்படுகிறது. யூத கலாச்சாரத்தில் அபுலேலே ஒரு ‘மோன்ஸ்டர்’. குழந்தைகளை சாப்பிட வைக்கவும், மிரட்டவும் பயன்படுத்தப்பட்ட ஒரு நாட்டர் கதை. இந்தப் படத்தில் 12 வயது ஆடம், தனது அண்ணனை இழந்த துக்கத்தில் இருக்கிறான். அண்ணன் என்பதைத் தாண்டி, நல்ல நண்பனாகவும் பள்ளியில் தன்னை துன்புறுத்தும் மாணவர்களிடமிருந்து தன்னைப் பாதுகாக்கும் அரணாகவும் இருந்த அண்ணனின் இழப்பு அவனை முடக்குகிறது. இந்த சமயத்தில் புராணக்கதையாக தனக்குச் சொல்லப்பட்ட அபுலேலேவை சந்திக்கிறான் ஆடம். அபுலேலேவுக்கு தனது அறையில் அடைக்கலம் கொடுகிறான். பெற்றோருக்கும் மற்றவர்களும் சொன்னதுபோல் அபுலேலே பயமுறுத்தும் அரக்கன் அல்ல; குழந்தை மனம் கொண்ட மோன்ஸ்டர். அண்ணனை இழந்த துக்கத்திலிருந்தும் இன்னபிற கஷ்டங்களிலிருந்தும் ஆடம் வெளியே வர அபுலேலே எப்படி அவனுக்கு உதவியது என்பதுதான் படம்.
மூன்றாம் நாள் படவிழாவில் திரையிடப்படவுள்ள ‘தி டெஸ்டாமெண்ட்’ (The Testament/Svedectvo/2017), ‘ஃபர்கிவ்நெஸ்’ (Forgiveness/Mechila/2019) ஆகிய இரண்டு படங்களும் பல சர்வதேசப் படவிழாக்களில் நாமினேட் செய்ப்பட்டப் படங்கள் ஆகும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago