கோலிவுட் ஜங்ஷன்: விநோதப் பிரச்சினையில் சிக்கிய வெற்றி!

By செய்திப்பிரிவு

‘சிகை’, ‘பக்ரீத்’ ஆகிய படங்களின் வழியாகக் கவனம் ஈர்த்த இயக்குநர் ஜெகதீசன் சுபு. அவர் மூன்றாவதாக இயக்கியிருக்கும் படம் ‘இரவு’. ‘8 தோட்டாக்கள்’ வெற்றி, அரியா செல்வராஜ் நாயகன், நாயகியாக நடித்துள்ள இப்படத்தை, எம் 10 புரோடெக் ஷன் சார்பில் எம்.எஸ்.முருகராஜ், ஜெஃபே இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

படம் பற்றி இயக்குநர் கூறும்போது “நாயகன் வீடியோ கேம் வடிவமைப்பாளராக ஐடி துறையில் பணி புரிகிறார். பணிச் சுமை காரணமாக மனப் பிறழ்வுக்கு ஆளாகும் அவர், நிஜ வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களையும் மனப் பிறழ்வால் தனக்கு நிகழ்வதுபோல் தோன்றும் சம்பவங்களையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறார்.

இந்தக் குழப்பம் அவரை எந்த எல்லைக்கு அழைத்துச் செல்கிறது; அதிலிருந்து அவர் மீண்டாரா, இல்லையா என்பதை ஒரே இரவில் நடக்கும் உளவியல் த்ரில்லர் படமாக உருவாக்கியிருக்கிறேன்” என்கிறார்.

‘அரியவன்’ வழியாக ஓர் அறிமுகம்! - தனுஷ் - நித்யா மேனன், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியானது ‘திருச்சிற்றம்பலம்’. அமைதியாக வசூலை அள்ளிக் குவித்த இந்தப் படத்தைத் தொடர்ந்து மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கியிருக்கும் படம் ‘அரியவன்’.

ஈஷான் நாயகனாக அறிமுகமாகும் இப்படத்துக்கு இசை ஜேம்ஸ் வசந்தன். “அறம் சார்ந்து அபூர்வமான குணம் கொண்டவர்களை அரிய மனிதர் என்கிறோம். தங்களைச் சுற்றி நடக்கும் அநீதிகளைப் பார்த்தும் பார்க்காததுபோல் கடந்து செல்பவர்களே அதிகம்.

ஆனால், தனது கண்ணெதிரில் அநீதி நடந்தால் அதைத் தட்டிக்கேட்பதைக் குணமாகக் கொண்டிருக்கும் ஓர் இளைஞன், அந்தக் குணத்தால் எதையெல்லாம் இழக்கிறான், எதையெல்லாம் பெறுகிறான் என்பதையே கதையாக்கியிருக்கிறேன்.

நாயகன் கண் முன்னால் நடக்கும் அநீதிகள் அனைத்தும் கடந்த சில வருடங்களில் தமிழ்நாட்டில் நடந்தவை. பாதிக்கப்பட்டவர்களின் பெயரையும் ஊர்ப் பெயரையும் மாற்றியிருக்கிறேன் அவ்வளவுதான்!” என்று அதிர்ச்சி கொடுக்கிறார் மித்ரன். இந்தப் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது.

கதைதான் ஹீரோ! - ‘லவ் டுடே’ வெற்றியைத் தொடர்ந்து சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளிவரவிருக்கும் படம் ‘தீர்க்கதரிசி’. அவருடன் அஜ்மல், துஷ்யந்த், ஜெய்வந்த் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீ சரவணா பிலிம்ஸ் பி.சதீஷ் குமார் தயாரிப்பில், பி.ஜி. மோகன் - எல்.ஆர். சுந்தரபாண்டி இணைந்து படத்தை இயக்கியிருக்கிறார்கள்.

இப்படத்தின் இசை, ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. ராம்குமார் சிவாஜி கணேசன், நாசர், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் ட்ரெய்லரை வெளியிட்டு சத்யராஜ் பேசும்போது “தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற இரட்டை இயக்குநர்கள் வரிசையில் இவர்களும் இணைய வேண்டும்.

ஒரு படத்தின் ஹீரோ திரைக்கதைதான். இந்தப் படத்தில் இத்தனை ஹீரோக்கள் இருந்தாலும் இதில் ‘கண்டெண்ட்’தான் ஹீரோ. கதையும் திரைக்கதையும் நன்றாக இருந்தால் ரசிகர்கள் உறுதியான வெற்றியைத் தருவார்கள்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்