இது வெனிசுலா நாட்டின் ‘96’

By ஆர்.சி.ஜெயந்தன்

உலகத் திரைப்படங்களில் பல, மொழி, நிலம் கடந்து உள்ளம் தொட்டுவிடுவதற்கு அவற்றின் உலகப் பொதுமையான கதை, அவை படமாக்கப்பட்ட விதம், நடிகர்களின் பங்களிப்பு ஆகியன முதன்மைக் காரணங்கள். இதுபோன்ற ரசமான படங்களில் லயித்துப்போய், ஒரு சில ஆண்டுகளுக்குப் பின் அவற்றை மீண்டும் பார்க்க விரும்புவீர்கள். ‘ஒரிஜின’லை மீண்டும் காணும் முன்பாக, உங்கள் தாய் மொழியில் சில படங்களைக் காணும்போது உங்களுக்கு அதிர்ச்சி மேலிடலாம்! உலக சினிமாக்களைத் திரையிடும் ஓடிடி தளங்களிலோ, உள்ளூர் சர்வதேசப் பட விழாக்களிலோ நீங்கள் கண்டு ரசித்த அந்த உலகப் படங்களில் பலவும் அவை வெளியான அடுத்த சில ஆண்டுகளில் உங்களுடைய தாய் மொழி உட்பட உலகின் பல வட்டார மொழி சினிமாக்களில் ஏதோ ஒரு வகையில் காப்பி செய்யப்பட்டுவிடுகின்றன.

கரோனா பெருந்தொற்று தொடங்குவதற்கு முன்பாக கடந்த 2018இல் தமிழில் வெளியாகி வெற்றிபெற்றத் திரைப்படம் ‘96’. பள்ளிக் காலத்தில் முகிழ்த்த பெருங்காதலைச் சுமந்துகொண்டிருந்த ராம் - ஜானகி ஆகிய இருவரும் கால ஓட்டத்தில் வெவ்வேறு சூழல்களில் விதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறார்கள். ஒரு மீள் சந்திப்பில் தங்களது காதலின் ஆன்மாவை ஸ்பரிசித்துக் கொள்ளாமலேயே உணரும் அவர்கள் மனங்களால் தழுவிக் கரைந்து, மீண்டும் பிரிந்து போகிறார்கள். ‘96’ படம் வெளிவருவதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு, இன்று பொலிவிய குடியரசாக விளங்கும் வெனிசுலா நாட்டில் ஸ்பானிய மொழியில் தயாராகி சர்வதேசப் பட விழாக்களில் வலம் வந்த படம் ‘அமோர் கொயஸ்டா அரிபா’ (Amor Cuesta Arriba). காதலின் சிகரம் என்பது இத்தலைப்பின் பொருள்.

தற்காலத்தின் ஸ்பானிய உலக சினிமாக்கள் சில
​​​​​​

தனிமையே துணையென வாழும் 35 வயது இளைஞன் பாப்லோ. ஒரு நாள் தனது நெருங்கிய நண்பனுடன் தனது பள்ளிக்கால நண்பர்களை மீள் சந்திக்கும் நிகழ்வுக்குச் செல்கிறான். அங்கே தன்னுடன் படித்த சக மாணவர்கள் ஒவ்வொருவராக வந்த வண்ணம் இருக்கிறார்கள். அவன் யாருக்காக அங்கே போய் காத்திருந்தானோ அவளும் வருகிறாள்! ஆம்! பள்ளிக் காலத்தில் பாப்லோவின் மனதை காதலால் நிறைத்தவள் டேனியலா. ஆனால் மீள் சந்திப்பு பாப்லோவுக்கு அதிர்ச்சியைக் கொண்டு வந்து சேர்க்கிறது. ஆம்! டெனியலா இப்போது ஒரு பாலியல் தொழிலாளி. அவளை எவ்வளவு விலை கொடுத்தேனும் அதிலிருந்து மீட்டெடுப்பதன் மூலம் தன் காதலையும் மீண்டுக்கொள்ள முடியும் என நினைக்கிறான். பாப்லோவின் முயற்சி என்னவானது என்பதுதான் கதை.

நேற்று சென்னையில் தொடங்கியிருக்கும் வெனிசுலா படவிழாவில் இன்று மாலை 6.30 மணிக்கு இந்தப் படத்தைக் காணலாம். ‘96’ படத்துக்கும் ‘அமோர் கொயஸ்டா அரிபா’ படத்துக்குமான ஒற்றுமையை என்ன என்பது பற்றி ஆராய்ச்சி செய்யலாம். உலக சினிமா அரங்கில் தென் அமெரிக்கப் படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு உண்டு. குறிப்பாக ஸ்பானிய மொழியில் எடுக்கப்படும் பொலிவிய சினிமாக்கள் பலமுறை கான் விருதுகளை வென்றுள்ளன. தற்போது நடைபெறும் வெனிசுலா படவிழா (Venezuela Film Festival 2023), பிப்ரவரி 20 முதல் 23 வரையிலான 3 நாள் படவிழாவாக, சென்னை, நுங்கம்பாக்கம், கல்லூரிச் சாலையில் உள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் மையத்தில் நடந்து வருகிறது. வெனிசுவேலா பொலிவாரியன் குடியரசின் தூதரகமும் (Embassy of the Bolivarian Republic of Venezuela) - இண்டோ சினி அப்ரிசியேசன் பவுண்டேஷனும் இணைந்து இப்படவிழாவை நடத்துகின்றன. பட விழா நடைபெறும் நாட்களில் மாலை 6.30 மணிக்கு திரையிடல் தொடங்கும். மொத்தம் 5 படங்கள் திரையிடப்படவிருக்கின்றன. அவற்றில் ‘அமோர் கொயஸ்டா அரிபா’ படத்துடன் Zamora: Tierra y hombres libres (2009), El DiCaprio de Corozopando(2017), Bolívar, el hombre de las dificultades (2013) ஆகிய மூன்று படங்களையும் காணத் தவறாதீர்கள்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்