கதாநாயகிகளை அரசியலுக்கு இழுப் பதில் தேசியக் கட்சி, மாநிலக் கட்சி என்ற பாகுபாடெல்லாம் இங்கே கிடையாது. கட்சியில் சேர்கிறேன் என்று கதாநாயகியர் ஆர்வமாக முன்வந்தால், வந்தவரைக்கும் லாபம் என்று முன்பின் யோசிக்காமல் கட்சியில் சேர்த்துக்கொள்வார்கள். குவாட்டர், பிரியாணிப் பொட்டலம் இல்லாமல் கூட்டம் சேர்க்கும் ‘சக்தி’களாகப் பார்க்கப்படும் கதாநாயகிகளின் உணர்வுகளுக்கும், உழைப்புக்கும், கட்சிகள் உரிய இடம் கொடுத்திருக்கின்றனவா என்றெல்லாம் வாக்காளர்கள் பார்ப்பதில்லை. அவர்கள் போட்டியிட்டாலும் சரி, பிரச்சாரத்துக்கு வந்தாலும் சரி, திரையில் பார்த்தவரை ஒரு எட்டு நேரிலும்தான் பார்த்துவிடுவோமே என்று ஓடோடி வந்து கையசைப்பது, இந்தியாவின் கலாச்சாரமாகவே மாறிவிட்டது. நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தெந்த கட்சிகள், கதாநாயகிகளைக் களத்தில் நிறுத்தியிருக்கின்றன என்று தேடினால், இம்முறை கணிசமான எண்ணிக்கையில் கண்ணில் படுகிறார்கள்.
குஷ்பூவுக்கு காத்திருக்கும் பஞ்ச்
தமிழ்நாட்டைப் பொருத்த வரை திமுக சார்பில் போட்டி யிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட குஷ்பூவுக்கு சீட் கொடுக்கப் படவில்லை. அதனால் திமுகவின் பிரச்சார பீரங்கியாக 17 நாட்கள் தமிழகத்தைக் கலங்க அடிக்க இருக்கிறார். இவருக்கு இணையான ஈர்ப்புடன் அதிமுகவில் பெண் நட்சத்திரங்கள் என்று யாரும் இல்லாவிட்டாலும், வெண்ணிற ஆடை நிர்மலா, குயிலி, விந்தியா, சி.ஆர். சரசுவதி, பாத்திமா பாபு, ஆர்த்தி என்று கணிசமான நட்சத்திர செல்வாக்குக் கொண்ட பெண் நட்சத்திரங்கள் பிரச்சாரக் களத்தில் பின்னிப் பெடலெடுத்து வருகிறார்கள். முக்கியமாக ஜெயா டிவியில் ஜாக்பாட் நடத்திவிட்டு திமுகவில் சேர்ந்த கோபம் இன்னும் இவர்களிடம் மிச்சமிருப்பதால் குஷ்புவுக்குக் கண்டிப்பாக பஞ்ச் உண்டு.
மாண்டியாவின் மகள்
அக்கம் பக்கத்து வீடுகளான கேரளாவில் சினிமாக்காரர்களை அத்தனை சீக்கிரம் அரசியலில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள் என்பதால், அங்கே தப்பித் தவறி அரசியலுக்கு வந்த குணச் சித்திர நடிகர்களே குய்யோ முறையோ என்று கடையைக் காலி செய்து போய்விட்டார்கள். கர்நாடகாவிலோ இப்போது நிலைமை மாறிவிட்டது. தமிழ் ரசிகர்களுக்கு ‘குத்து’ ரம்யாவாக அறிமுகமாகி, சிம்பு, தனுஷுடன் டூயட் பாடி பிரபலமான திவ்யா ஸ்பந்தனா, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து கடந்த ஆண்டு கர்நாடகாவின் மாண்டியா மக்களவைத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

இவர் போகிற இடமெல்லாம் வாக்காளர்கள் திரள்கிறார்களாம்.
இவரைத் தவிர தற்போது கார்நாடக மாநில காங்கிரஸ் அமைச்சரவையில் பெண்கள், குழந்தைகள் நல அமைச்சராக இருக்கும் உமா கடந்த 2008வரை கதாநாயகியாக நடித்தவர். இவர் தற்போது காங்கிரஸுக்காகப் பிரச்சாரம் செய்கிறார். முக்கியமாக பாகல் கோட் தொகுதியில் போட்டியிடும் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி சங்கர் பிதாரியை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய விருப்பம் தெரிவித்திருக்கிறார்.
இந்த இரண்டு பேர் தவிர, இயக்குநர் சிகரத்தின் ‘கல்கி’ படப்புகழ் ஸ்ருதியும் (சமீபத்தில் கார்த்திகைப் பெண்கள் மெகா தொடரில் கலக்கியவரும் அவரேதான்) களத்தில் இருக்கிறார். கடந்த ஆண்டு எடியூரப்பா பிறந்த நாளில் அவருக்கு கேக் ஊட்டி, மீடியாவுக்குத் தீனி கொடுத்த இவருக்கும் நம்ம குஷ்பு நிலைதான். எம்.பி. சீட் கேட்டு கிடைக்காவிட்டாலும், கர்நாடக பா.ஜ.க.வின் பிரச்சார பீரங்கியாக வலம் வருகிறார்.

தெலங்கானாவின் தீப்பொறி
ஆண்டுக்கு 850 கோடி ரூபாயை சினிமா பார்ப்பதற்கே செலவழிக்கும் ஆந்திர மக்கள், மாநிலம் இரண்டாகப் பிரிந்ததையடுத்து சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகிய இரண்டுக்குமே அனல் பறக்கும் தேர்தலை எதிர்கொள்கிறார்கள். தெலங்கானா மாநிலத்துக்காக போராடிவந்த சந்திரசேகர் ராவின் தெலங்கானா ராஷ்ட்டிர சமிதி கட்சியின் சார்பில் மேடக் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யானார் விஜயசாந்தி. தெலங்கானா அமைந்தததும் சந்திரசேகர் ராவின் கட்சியிலிருந்து வெளியேறி சோனியாவைச் சந்தித்து காங்கிரஸில் கடந்த மாதம் சேர்ந்தார். தற்போது அதே மேடக் தொகுதியிலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். சந்திரசேகர் ராவ் - காங்கிரஸ் இடையில் கூட்டணி இழுபறியாக இருந்து வரும் நிலையில் தெலங்கானாவின் தீப்பறக்கும் வேட்பாளர்களில் ஒருவராக ஆகியிருக்கிறார் மன்னன் படத்தில் ரஜினியை ஆட்டிப்படைத்த இந்தச் சண்டி ராணி.
விஜயசாந்தியின் அதிரடி அரசியல் சோனியா காந்திக்கு ரொம்பவே பிடித்துப்போக ஒரு ஃப்ளாஷ்பேக் உண்டு. 1999-ல் கடப்பா தொகுதியில் சோனியா காந்தி போட்டி யிடுவார் என்று அறிவித்ததுமே, அவரை எதிர்த்துப் போட்டியிடத் துணிசலாக வேட்பு மனு தாக்கல் செய்வர்தான் நம்ம வைஜெயந்தி ஐ.பி.எஸ். “அந்தத் துணிச்சல் எனக்குப் பிடிச்சிருக்கு” என்று சோனியா காந்தி இவரைப் பார்த்துச் சொல்லியிருப்பார் போலும்.
ஆம் ஆத்மிக்கு ஆதரவாக
வடக்கே இந்த முறை கதாநாயகிகளுக்கு ரொம்பவே கிராக்கி. நடிகைகளைப் பிரச்சாரக் களத்தில் இழுக்கும் கட்சிகளில் ஆம் ஆத்மியும் அடக்கம் என்பதுதான் ஆச்சரியம். சண்டிகார் தொகுதி யில் பா.ஜ.க. சார்பில் பிரபல பாலிவுட் நட்சத்திரம் அனுபம் கெரின் மனைவி கிரண் கெர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குல் பனாக் என்ற முன்னாள் மிஸ் இந்தியா மாடல் பிரச்சாரம் செய்கிறார். பாலிவுட் படங்களில் கதாநாயகியாகக் கலக்கியவர். இந்தி, பஞ்சாபி தொலைக்காட்சித் தொடர்களையும் விட்டுவைக் கவில்லை. புல்லட் பைக்கில் பிரச்சாரம், பஸ், ரயிலில் ஏறிப் பயணிகளிடம் வாக்குச் சேகரிப்பு, சேறும் சகதியுமான காய்காறிச் சந்தைக்குள் நுழைந்து கேரட்டைத் கடித்துத் தின்றுகொண்டே வாக்குச் சேகரிப்பது என்று குல் பனாக்கின் மாஸ் அதிரடிகளை ரொம்பவே ரசிக்கிறார்கள் வாக்காளர்கள்.

கலக்கும் சீனியர்கள்
பா.ஜ.க. சார்பில் முன்னாள் வசீகர நாயகி ஹேமமாலினி உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் போட்டியிடுகிறார். ஆனால் சீனியர் கதாநாயகிகளில் எக்குத்தப்பாகக் கூட்டம் கூடுவது நக்மாவுக்குத்தான். உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் போட்டியிடும் நக்மாவுக்கு ஏக வரவேற்பு.
காங்கிரஸின் அறிவிக்கப்படாத பிரதம வேட்பாளராகக் கருதப்படும் ராகுல் காந்தி போட்டியிடும் அவரது அமேதி தொகுதியில் அவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில் களம் காண்கிறார் பிரபல தொலைகாட்சி நடிகையான ஸ்மிருதி இரானி.
திரிணா முல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும் இந்த விஷயத்தில் காங்கிரஸைப் பார்த்துக் கற்றுக் கொண்டுவிட்டார் என்பதுதான் ஆச்சரியம். பிரபல வங்காளப் பெண் நட்சத்திரமான மூன்மூன் சென், பங்குரா தொகுதியில் நிறுத்தப்பட்டிருக்கிறார். எந்தக் கட்சியில் சீட் கேட்டு கிடைக்காத கோபமோ, பாலிவுட்டின் பிரபல குத்தாட்ட நட்சத்திரமான ராக்கி சாவந்த் மும்பை வடமேற்குத் தொகுதியில் சுயேச்சையாகக் களம் இறங்கியிருப்பதில் அமளிதுமளியாகியிருக்கிறது அந்தத் தொகுதி.
கதாநாயகிகளுக்குக் கூடும் கூட்டம் ஓட்டாக மாறினால் அவர்களுக்குப் பதவி நிச்சயம். பிரச்சாரத்துக்கு வந்த மாதிரி ஜெயித்த பிறகும் தொகுதிப் பக்கம் வர வேண்டும் என்று மட்டும் வாக்களர்கள் எதிர்பார்க்கக் கூடாது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago