நினைவுகளைக் கிளறிவிட்ட அந்த ஒற்றை ‘மீம்’! - ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

By கார்த்திகா ராஜேந்திரன்

இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானின் பிறந்தநாள் இன்று. நேற்றிரவு முதல் ரஹ்மானுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் அடங்கிய பதிவுகளும், ஒளிப்படங்களும் சமூக வலைதளத்தை ஆக்கிரமித்துள்ளன. அதில் எப்போதும் இல்லாத வகையில் மாறுபட்ட வாழ்த்துப் பதிவு ஒன்று கண்ணில் சிக்கியது. மீம் வகையிலிருந்த அந்த பதிவில், ‘தமிழ்நாட்டில் அதிகமாக இந்தி மொழியைத் திணித்தது நான்தான் என ஏ.ஆர் ரஹ்மான் உணரும்போது…’ எனக் குறிப்பிட்டு அந்நியன் திரைப்படத்தில் வரும் ‘அம்பி’ கதாபாத்திரம் அழுவதுபோன்ற படத்தோடு பகிரப்பட்டிருந்தது. பார்த்தவுடன் ‘லொள்’ மொமெண்ட்டாக இருந்த அந்த செய்தியில்தான் எவ்வளவு உண்மை. ’இந்தி தெரியாது போடா’ என்றாலும் பரவாயில்லை ரஹ்மானின் இந்திப் பாடல்களுக்குத் தனி மவுசுதான்.

1995இல் ‘ரங்கீலா’ படத்தில் தொடங்கி வரிசையாக இந்தி மொழியில் ஹிட்களாக விளாசிக் கொண்டிருந்தார் ஏ.ஆர் ரஹ்மான். ’தால்’, ‘ரங் தே பசந்தி’, ‘குரு’, ‘ஜோதா அக்பர்’ போன்று இந்தி, தமிழ் என இரு மொழியில் வெளியான படங்களிலும் இந்தி வெர்ஷன் எப்படியிருக்கும் எனத் தேடிக் கேட்க வைத்தவர். அந்தப் பாடல்களை ரஹ்மானே பாடியிருந்தால் கூடுதல் சிறப்பு. பரிச்சயமான முகங்கள் நடித்திராத படங்களின் பாடல்களும் எல்லை கடந்து ஹிட்டாகின. ‘ஜானே து யா ஜானே நா’, ‘டெல்லி 6’, ‘ராக்ஸ்டார்’, ‘ஹைவே’, ‘தமாஷா’ போன்ற படங்களெல்லாம் பாடல்களுக்காகவே மீண்டும் மீண்டும் பார்த்த திரைப்படங்கள்.

இந்தி மட்டுமின்றி வேறு மொழியில் வெளியான தனிப்பாடல்களையும் நிறைய ரசிக்க வைத்தவர் ரஹ்மான். 2008ஆம் ஆண்டு ‘ஸ்லம்டாக் மில்லியனேர்’ படத்துக்காக ஆஸ்கர் வென்றவர் அனைவரையும் ‘ஜெய் ஹோ’ பாடலை முணுமுணுக்க வைத்தார். அந்தப் படம் வெளியான காலகட்டத்தில் பெரும்பாலான பள்ளிகளின் ஆண்டு விழாக்களில் ‘ஜெய் ஹோ’ பாடலுக்கு நடனமாடியிருப்பர் 90ஸ் கிட்ஸ்கள். எத்தனை முறை கேட்டாலும் ’ஜெய் ஹோ’ தரும் புல்லரிப்பு ரஹ்மானின் மேஜிக்தான்!

அதே போல டிவிடியில் வெளியான ரஹ்மானின் தனிப்பாடல்கள் டிவியில் ஒளிபரப்பாகும் போதெல்லாம் ’மிஸ்’ செய்யாமல் பார்த்த பழைய காலம் அது. ’Siya se jiya’ , ‘Pray for me brother’ பாடல்கள் அடங்கிய ஆல்பங்கள் டிவிடிக்களையும் தாண்டி 90ஸ் கிட்ஸ்களின் ஐபாட்களில் தஞ்சம் புகுந்தவை. மெமரி முடியும்போது எந்த பாடலை நீக்குவது எந்த பாடலை சேர்ப்பது என்ற சிக்கலில் தவிக்கவிடுவார் ரஹ்மான். அவ்வளவு பாடல்களும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டியவையாக இருந்தன.

இப்படி 1992இல் அறிமுகமானதிலிருந்து 30 ஆண்டுகளாக ஆச்சரியங்களைத் தந்து கொண்டே இருக்கிறார் ரஹ்மான். கடைசியாக 2003ஆம் ஆண்டில் தொடர்ந்து நான்கு நேரடித் தமிழ்ப் படங்களுக்கு இசை அமைந்திருந்த அவர், 2022இல் ‘இரவின் நிழல்’, ‘கோப்ரா’, ‘வெந்து தணிந்தது காடு’, ‘பொன்னியின் செல்வன்’ என அடுத்தடுத்து நான்கு படங்களுக்கு இசையமைத்து ஆல்பங்களாகவே ஹிட்ஸ்களைத் தந்தார். 2023 மட்டுமின்றி 2024ஆம் ஆண்டில் வெளியாக இருக்கும் சில பெரிய பட்ஜெட் படங்களுக்காகவும் ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். எப்போதும் தனது இசையின்மூலம் புதுமைகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கும் ரஹ்மான் தொடர்ந்து அதைச் செய்வார் என்பதில் சந்தேகமில்லை.

வழக்கமாக அவரது பிறந்தநாளில் ரஹ்மானின் மெச்சத்தக்கப் பல பாடல்களைப் பற்றி எழுதுவதுண்டு. இன்று ஒரு மீமில் தொடங்கிய நாஸ்டால்ஜியா பழைய ஞாபகங்களைத் திருப்பி கொடுத்துவிட்டது. தலைமுறை கடந்து கொண்டாடப்படும் ரஹ்மானுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்