திரை விமர்சனம்: கவலை வேண்டாம்

By இந்து டாக்கீஸ் குழு

காதல் திருமணம் செய்து கொள்ளும் ஜீவா - காஜல் அகர்வால் ஜோடி, திருமணத்தன்றே பிரிந்து விடுகிறார்கள். சில வருடங்கள் கழித்து பாபி சிம்ஹாவைத் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிடுகிறார் காஜல். இதற் கிடையில் சுனைனா, ஜீவா வைக் காதலிக்கிறார். இவர்களது வாழ்க்கை என்ன ஆயிற்று என்பதே ‘கவலை வேண்டாம்'.

திரைக்கதையைப் பற்றிக் கவலையே வேண்டாம் என்று இயக்குநர் டீகே முடிவுசெய்து விட்டார். மலினமான காமெ டியை அடுத்தடுத்து அரங்கேற்றி னால் போதும் என்ற முடி வுக்கு வந்துவிட்டார். திரைக் கதை, ரசிக்கும்படியான காட்சி கள், கொஞ்சமாவது ஏற்றுக் கொள்ளக்கூடிய திருப்பங்கள், பாத்திர வார்ப்பு என எதைப் பற்றியுமே கவலைப்பட வில்லை. ஜீவா, காஜல் பாபி சிம்ஹா, சுனைனா, பாலாஜி, மயில்சாமி, பால சரவணன், மனோபாலா எனப் பல நடிகர்கள் வருகிறார்கள். சகட்டுமேனிக்கு இரட்டை அர்த்த வசனங்கள் பேசு கிறார்கள், போகிறார்கள். இப்படியே படம் நகர் கிறது. எந்த இடத்திலும் அழுத்தமே இல்லாமல் காட்சி கள் நகர்கின்றன.

காதலி ஒரு கட்டத்திலும் தன் முடிவை மறுபரிசீலனை செய்வதே இல்லை. அவளை மறுபரிசீலனை செய்யவைக்க விரும்பும் நாயகனிடம் அதற் கான உருப்படியான திட்டம் எதுவும் இல்லை. புதிதாக வரும் இன்னொருவனுக்கோ படத்தில் எந்த வேலையும் இல்லை. இதற்கு நடுவில் நாயகனைக் காதலிக்கும் இன்னொரு பெண் பரிதாபமாக வந்துபோகிறாள்.

ஜீவா தனக்குக் கொடுக்கப் பட்டுள்ள வேலையை(?) ஒழுங்காகச் செய்திருக்கிறார். ஆனால், இந்தப் படம் எந்த வகையிலும் அவருக்குப் பெருமை சேர்க்காது. காஜல் அகர்வாலின் அழகும் சுறுசுறு வென்ற அவர் நடிப்பும் படத்தை ஓரளவு காப்பாற்றுகின்றன. நடிப்பிலும் நடனத்திலும் அவர் தன் திறமையை நிரூபித்திருக்கிறார்.

ஆர்.ஜே.பாலாஜியின் காமெடி அவ்வப்போது சிரிப்பை வர வைத்தாலும், தொடர்ச்சி யாக ஒரேமாதிரியான பாத்திரம் தானா என்ற சலிப்பு ஏற்படு கிறது. பாலசரவணன், மயில்சாமி, மனோபாலா ஆகியோரின் பாத்திரங்களும் நடிப்பும் கவரும் வகையில் அமையவில்லை. மலின வச னத்தில் புதிய சாதனை படைக் கிறார் மனோபாலா. ரசத் தில் கறிவேப்பிலைக்கு இணை யான கதாபாத்திரம் பாபி சிம்ஹாவுக்கு.

குன்னூரின் அழகை அற்புத மாகப் படம் பிடித்திருக்கும் அபிநந்தனின் ஒளிப்பதிவு படத்துக்குப் பெரிய பலம். லியோன் ஜேம்ஸின் பாடல் கள், சுரேஷின் எடிட்டிங் ஆகியவையும் படத்தின் சாதக மான அம்சங்கள்.

காதல், கல்யாணம், பிரிவு, மறுமணம் என எதையுமே கொஞ்சமாவது உருப்படியாகச் சொல்ல வேண்டும் என்று இயக்குநர் நினைக்கவில்லை. காதலன், காதலி, காதலியின் வருங்காலக் கணவன், காத லனை விரும்பும் இன்னொரு பெண் ஆகியோரை வைத்து வலுவான திரைக்கதையை உருவாக்கியிருக்கலாம். ஆனால், இயக்குநரின் கவனமெல்லாம் இரட்டை அர்த்த வசனங்களிலும் ஆபாச நகைச்சுவையிலும் குவிந் திருக்கிறது.

‘கவலை வேண்டாம்’ என் கிறது படத்தின் தலைப்பு. படத்தின் உள்ளடக்கம் தமிழ் சினிமாவின் நிலை பற்றிய ஆழமான கவலையை ஏற் படுத்துகிறது.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்