நடிகர் சங்கப் பிரச்சினைகள், சர்ச்சைகள் என அனைத்தையும் தாண்டி 'கத்தி சண்டை', 'துப்பறிவாளன்', 'இரும்புத்திரை' ஆகிய படங்களிலும் தீவிரம் காட்டிவருகிறார் விஷால். எந்தக் கேள்வியைக் கேட்டாலும் அவற்றை நேர்மறையாக எதிர்கொண்டு பதிலளிப்பவர். அவரிடம் உரையாடியதிலிருந்து...
‘கத்தி சண்டை' படத்திலிருந்து என்ன எதிர்பார்க்கலாம்?
குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படம் இது. காமெடி, சண்டைக் காட்சிகளையெல்லாம் தாண்டி ஒரு நல்ல கருத்து இருக்கிறது. அதுதான் சஸ்பென்ஸ்! 5 வருடங்கள் கழித்து வடிவேலு அண்ணன் காமெடிய னாக நடித்திருக்கிறார். 10 வருடங்கள் கழித்து இருவரும் இணைந்து நடித்திருக்கிறோம். வடிவேலு - சூரி இருவரும் இணைந்து நடித்திருப்பது ஆரோக்கியமான விஷயம்!
மிஷ்கின் இயக்கத்தில் நடிப்பது எப்படி இருக்கிறது?
‘துப்பறிவாளன்' மூலம் வேறு ஒரு உலகத்துக்குப் போனதுபோல இருக்கிறது. அற்புதமான கதை, அருமையான கதாபாத்திரங்கள் என்று மிஷ்கின் எங்களைக் கட்டிப் போட்டிருக்கிறார். புதுமையான விஷாலைக் கண்டிப்பாக நீங்கள் காணலாம்.
ரொம்ப நாட்கள் கழித்துப் புதுமுக இயக்குநர் ஒருவரின் இயக்கத்தில் -- ‘இரும்புத்திரை'யில் -- நடிக்கிறீர்கள் அல்லவா?
ஒரு துடிப்பான புதுமுக இயக்குநர் கதையைச் சொல்லி முடித்தபோது எழுந்து நின்று கைதட்டி இந்தப் படம் நான் பண்றேன் எனச் சொன்னேன். ‘கத்தி சண்டை’, 'துப்பறிவாளன்' படங்களைத் தொடர்ந்து ‘இரும்புத்திரை' வெளியாகும். அதில் எனக்கு சந்தோஷம். மூன்று படங்களுமே எனக்கு வெவ்வேறு கலர் கொடுக்கும்.
திருட்டு டிவிடியைத் தாண்டி ஃபேஸ்புக்கில் லைவாகப் படங்களை வெளியிடுகிறார்களே...?
பழைய படங்கள் லைவாக வெளியாவதை அந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் சட்டப்படி தடுக்க வேண்டும். திரையரங்கிலிருந்து லைவ் பண்ணப்படுவதைத் தடுக்க, அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்துதான் செயல்பட முடியும். படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யும் கேமரா அளவுக்குக் கைபேசி கேமராவும் துல்லியமாக இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு ஒரு படத்தை அப்படியே பதிவு செய்து இணையத்தில் முதலில் யார் போடுவது என்று போட்டி போடுகிறார்கள்! இதையெல்லாம் தடுப்பதற்கான திட்டத்தை ஜனவரிக்குப் பிறகு சொல்கிறேன்.
திருட்டு டிவிடிக்கு எதிராகத் திரையுலகம் முழுவதும் ஒன்றிணைய வேண்டும் என்கிறீர்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லையே...
கண்டிப்பாக ஜனவரிக்குப் பிறகு அப்படி நடக்கும். தயாரிப்பாளர் சங்கத் தேர்தலிலும் நிற்க முடிவு செய்திருக்கிறோம். இளம் நடிகர்களில் யாரெல்லாம் தயாரிப்பாளர்களாக இருக்கிறார்களோ அவர்களோடு சிறு முதலீடு மற்றும் பெரிய முதலீடு தயாரிப்பாளர்கள் என ஒன்றுகூடி ஒரு விடிவு காலம் வர வேண்டும். நான் நிற்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால், வரும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கண்டிப்பாக நிற்போம்.
நடிகர் சங்க நிர்வாகத்தில் பங்கெடுக்கத் தொடங்கி ஒரு ஆண்டு ஆகியிருக்கும் நிலையில் உங்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு வருகிறதே...
பழைய நிர்வாகம் செய்த தவறுகள் அனைத்தையுமே சரிசெய்து, சரியான நிர்வாகம் அமைக்கவே 6 மாதங்கள் கடந்துவிட்டது. சரியான கணக்குகளே இல்லாமல் 10 ஆண்டுகள் நிர்வாகம் நடைபெற்றிருக்கிறது. அந்தக் கணக்குகள் அனைத்தையும் சரிபார்த்து, அதனை வெளிப்படையாக நடிகர் சங்கத்தின் இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறோம். நல்லது பண்ணும்போது, சிலர் பிடிக்காமல் புகார் சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள்.
நடிகர் சங்கக் கட்டிடம் தாமதம் ஏன்?
பெரிய அளவில் கட்டிடம் கட்ட முடிவு செய்திருக்கிறோம் என்பதால் கொஞ்சம் தாமதம் ஆகத்தான் செய்யும். சி.எம்.டி.ஏ.விலிருந்து எங்களுக்கு வர வேண்டிய சான்றிதழ்கள் அனைத்துமே இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. அனைத்தும் இறுதியானவுடன் கட்டிடத்துக்கான அனுமதியைக் கோரிவிடுவோம்.
கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்டத் திட்டமிட்டிருக்கிறீர்களா?
நிலத்தின் மீதான கடனை அடைத்து, மீதிப் பணத்தை வங்கியில் செலுத்தியிருக்கிறோம். அதில் வரும் வட்டியை வைத்து நலிந்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை கொடுத்துவருகிறோம்.
முன்னணி நடிகர்கள், நாடக நடிகர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து பிரம்மாண்டமான நாடகம் ஒன்றை நடத்த நாசர் சார் திட்டமிட்டிருக்கிறார். வெளிநாடுகளுக்குச் சென்று நாடகம் நடத்துவதற்கான முதல் கட்டப் பணிகளைச் செய்துவருகிறார்.
விவசாயிகள் பிரச்சினைகளில் தொடர்ந்து உதவிவருகிறீர்கள்...
விவசாயிகளும், ராணுவ வீரர்களும்தான் நம்முடைய பலமே. அவர்களுக்கு உதவி செய்வது நல்ல விஷயம்தானே. ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது “நானும் விவசாயி ஆனால்தான் உங்கள் பிரச்சினைகள் என்ன என்பதை உணர முடியும்” என்று கூறியிருந்தேன். அதனால், இயற்கை வேளாண்மை முயற்சிகளில் ஈடுபடப்போகிறேன்.
விளம்பரத்துக்காகத்தான் உதவிகளைச் செய்கிறீர்கள் என்ற விமர்சனமும் உங்கள் மீது வைக்கப்படுகிறதே…
(கோபமாக...) வெளியே இரண்டு பேருக்கு உதவி செய்துவிட்டு என்னை விமர்சனம் செய்தார்கள் என்றால் ஏற்றுக்கொள்வேன். வெறும் கையை வீசிவிட்டு விமர்சனம் செய்தார்கள் என்றால், அடுத்த வாரம் செய்யப்போகிற உதவியை இப்போதே சொல்லிவிட்டுச் செய்வேன்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago