திரை விமர்சனம்: அச்சம் என்பது மடமையடா

By இந்து டாக்கீஸ் குழு

படித்துவிட்டு வெட்டியாக நண்பர்களுடன் சுற்றிக் கொண் டிருக்கும் சிம்பு, தென்னிந்தியா முழுக்க பைக்கில் பயணிக்கத் திட்டமிடுகிறார். அப்போது, அவரது தங்கையின் தோழி லீலா ராமன் (மஞ்சிமா மோகன்) அவரது வீட்டுக்கு வந்து சில காலம் தங்குகிறார். இருவரும் பரஸ்பரம் ஈர்க்கப்படுகிறார்கள்.

சிம்பு தன் பயணத்துக்குத் தயாராகும் நாளில் அவருடன் மஞ்சிமாவும் சேர்ந்துகொள்கிறார். வழியில் ஒரு விபத்து ஏற்படுகிறது. அந்த விபத்தின் விளைவுகள், அதன் காரணங்கள், அது அவர்கள் வாழ்வில் ஏற்படுத்தும் அடுக்கடுக் கான பாதிப்புகள் ஆகியவைதான் ‘அச்சம் என்பது மடமையடா’.

‘விண்ணைத் தாண்டி வரு வாயா' படத்துக்கு பிறகு மீண்டும் கவுதம் - சிம்புவின் கூட்டணி. ஒரு பைக்கரின் பயணத் தில் அவன் எதிர்பாராது சந்திக் கிற வன்முறைகளால் நிகழும் விபரீதங்கள் என்ற ஒருவரிக் கதைக்கு, திரைக்கதையை அமைத்ததில் நிமிர்ந்து உட்கார வைக்கிறார் கவுதம் மேனன். நண்பர்கள், காதல் என்று வழக்கமாகப் போய்க்கொண்டிருக் கும் கதையில், விபத்துக்குப் பிறகு ஊகிக்கவே முடியாதபடி திரைக்கதை வேகமெடுக்கிறது.

மஞ்சிமாவின் குடும்பத்தைக் காப்பாற்ற முயற்சிப்பது, வில்லன் களைத் தேடிச் சென்று பழிவாங்கு வது என்பதெல்லாம் சரிதான். ஆனால் சிம்பு போலீஸ்காரர்களை அடித்து மண்டையை உடைக் கிறார். தாக்க வருபவர்களைச் சுட்டுக் கொல்கிறார். ஆனால், உள்ளதிலேயே ஆபத்தான கிரிமினலை மட்டும் அவர் போலீஸ் என்பதால் சுட மாட்டாராம்.

இக்கட்டான நேரத்தில் நாயகர் களுக்கு மட்டும் எப்படித்தான் சாவி போட்ட‌ பைக் கிடைக்கிறதோ தெரியவில்லை. அதேபோல, மஞ்சிமாவின் பிறப்பு குறித்த பின் னணி, அரசியல்வாதியின் திட்டம், கை ஒடிந்த சிம்பு சண்டை போடு வது, க்ளைமாக்ஸில் சிம்புவின் புதிய அவதாரம் போன்ற விஷயங் கள் எல்லாம் 'அட... இதுவும் வழக்க மான கமர்ஷியல் படம்தானா' என்று சொல்ல வைக்கின்றன.

அழுத்தமான‌ தொடுதல்கூட இல்லாமல் சிம்புவுக்கும் மஞ்சிமா வுக்கும் இடையிலான காதலை மிக இயல்பாகக் காட்சிப்படுத்தியதில் தன் முத்திரையைப் பதிக்கிறார் கவுதம். முன் பாதி முழுவதும் கவித்துவமான காதல் ரசனை காற்றில் கலந்திருக்கிறது. இசையும் ஒளிப்பதிவும், வசனங்களும் நடிப் பும், பாடல் வரிகளும் திரையில் அருமையான காதல் அனுபவத்தை மலரச் செய்கின்றன. ஆக்‌ஷன் காட்சிகளில் உள்ள தீவிரம் அழுத்த மாக உள்ளது. இருவரும் தத்தமது காதலைச் சொல்லும் தருணங்கள் மனதைத் தொடுகின்றன.

படம் முழுக்க தாடியுடன் வரு கிறார் சிம்பு. ‘விடிவி’யில் பார்த்த அதே உற்சாகம் இதிலும் உள்ளது. ‘கூட வந்தா நல்லாயிருக்கும்ல’ என்று காதலில் உருகும்போதும், நண்பனைப் பறிகொடுத்த பின் அழும் காட்சியிலும் ரொம்பவும் பக்குவமான நடிப்பை சிம்பு வெளிப்படுத்துகிறார்.

மஞ்சிமா மோகன் திரையில் தோன்றினாலே அவ்வளவு கவிதை யாக இருக்கிறது. “உன்கூட வரலாம்னு பார்த்தேன். பைக்ல‌” என்று தயங்கித் தயங்கி சிம்புவிடம் சொல்லும்போதும், “சரி, இதுக்குமேல நான் ஏன் உன்கூட வரணும்” என்று கொஞ்சம் தெனாவட்டாகக் கேட்கும்போதும் ரசிக்க வைக்கிறார்.

போலீஸ் வில்லனாக வரும் பாபா செகல், சிம்புவின் நண்பனாக வரும் சதீஷ் கிருஷ்ணன் ஆகி யோர் கச்சிதம். டேனியல் பாலாஜி சிறிய வேடத்தில் வந்து கவனம் ஈர்க்கிறார்.

“செத்துருவேன்ற பயத்துல தான் ‘ஐ லவ் யூ’ ன்னு சொன் னேன்”, “டைமிங் வேணுன்னா தப்பா இருக்கலாம். ஆனா மேட்டர் கரெக்ட்தான்”, “லைஃப்ல எது வேணுன்னா நடக்கலாம். அதுக்கு நாம ரெடியா இருக்கோமாங் கிறதுதான் கேள்வி” எனப் பல இடங்களில் வசனங்கள் ஈர்க்கின்றன.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ‘தள்ளிப் போகாதே’ பாடலைத் தவிர மற்ற‌ எல்லாப் பாடல்களும் கதையுடன் பயணிப்பதால், அவற்றைத் தனியே பிரித்துப் பார்க்க முடியவில்லை. ஆனால் ‘தள்ளிப் போகாதே’ பாடலும் அது எடுக்கப்பட்ட விதமும் அருமை. அருமையான ஒளிப்பதிவும், தாமரையின் வரிகளும் சித் ராமின் குரலும் நடன அமைப்பும் சேர்ந்து பாடலை அசாதாரணமான அனுபவமாக்குகின்றன. முதல் பாதியில் சிம்பு, மஞ்சிமாவைத் திரையில் காட்டிய விதத்துக்கும் இரண்டாம் பாதியில் காட்டிய விதத்துக்கும் இடையே உள்ள வித்தியாசம் ஆச்சரியப்படுத்து கிறது. முதல் பாதி முழுக்க முழுக்க ரசனையோடு அமைதியாக நகர, இரண்டாம் பாதி முழுக்க வெறும் டமால் டுமீல்!

டான் மெக்கார்தர், தேனி ஈஸ்வர் ஆகியோரின் ஒளிப்பதிவும், யதார்த்தம் மீறாத‌ ஆக்‌ஷன் காட்சிகளும், ஆண்டனியின் எடிட்டிங்கும் கவுதமின் திரைக் கதைக்குக் கைகொடுக்கின்றன.

நாயகனின் பெயரை இறுதிக் காட்சி வரை வெளிப்படுத்தாமல் இருப்பதில் காட்டிய கவனத்தை, இறுதிக் காட்சிகளிலும் காட்டியிருந்தால் படம் முழுத் திருப்தியை அளித்திருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்