‘மல்லிப்பூ’-க்கு முன் இத்தனை ஹிட் பாடல்களா? - மதுஸ்ரீ ப்ளே லிஸ்ட் ரீவைண்ட்

By கார்த்திகா ராஜேந்திரன்

சில காலம் முன்பு வரை, ஒரு திரைப்பட பாடல் ஹிட்டா இல்லையா என்பதைப் படம் வெளியான பிறகும் சரியாகக் கணிக்க முடியாது. இசை சேனல்களிலும் எஃப்.எம். ரேடியோக்களிலும் அடிக்கடி அந்தப் பாடல் ஒலிபரப்பப் பட்டாலேயே அது மக்களை கவர்ந்த பாடல் என்று தெரிந்துகொள்ள முடியும்.

சமூக வலைதளம் ஆக்கிரமித்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் நிலைமையே வேறு!படம் வெளியாவதற்கு முன்பே, பாடல் வரிகள் அடங்கிய ‘லிரிக்கல் வீடியோ’ வெளியாகிவிடுகிறது. யூடியூப்பின் புரட்சியால் சில நிமிடங்களிலேயே பல லட்சம் பார்வையாளர்கள் பாடலைப் பார்த்துவிட்டு, லைக்குகளை அள்ளித் தருகின்றனர். சில மணி நேரங்களில், டிரெண்டிங்கில் இடம் பிடிக்கும் பாடல், ரசிகர்களின் க்ரியேட்டிவிட்டியால் பல வெர்ஷன்களில் உலா வரும். கிட்டத்தட்ட ஒரு பாடல் வெளியாகும் அதே நாளில், அப்பாடல் ரசிகர்களின் மனதைத் தொட்டதா, இல்லையா என்பது தெரிந்துவிடும்.

அந்த வகையில்,சிம்பு நடித்து சமீபத்தில் வெளியாகி இருக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தில் உள்ள ‘மல்லிப்பூ’ பாடல் வைரல் ஹிட் ஆகியிருக்கிறது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில், மதுஸ்ரீ பாடி இருக்கிறார். சோஷியல் மீடியாவைத் திறந்தாலே ‘மல்லிப்பூ...’ வைப்தான் (vibe).

லிரிக்கல் வீடியோ வெளியானபோதே ஹிட்டான இந்தப் பாடல்,திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதத்திற்காகவும் மக்களின் லைக்குகளை அள்ளி இருக்கிறது. ரஹ்மானின் இசையும்சிம்புவின் நடிப்பும் பாராட்டுகளைப் பெற்று வரும் நிலையில், பாடலைப் பாடிய மதுஸ்ரீயையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மதுஸ்ரீயின் முகம் தமிழ் சினிமா ரசிகர்களுக்குப் பரிச்சயமானதாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால், கூகுளை தட்டிப் பார்த்தால் ஏற்கனவே பல சூப்பர் ஹிட் தமிழ்ப் பாடல்களைப் பாடி இருக்கிறார் என்பது தெரிய வந்தது. இப்போது டிரெண்டிங்கில் இருக்கும் ‘மல்லிப்பூ...’ பாடல் ஹிட்டாவதற்கு முன்பே மதுஸ்ரீயின் ரசிகர்களான சிலர், ‘நீங்க ரொம்ப லேட் பாஸ்’ எனத் திடீர் ரசிகர்களைக் கலாய்த்து வருகின்றனர்.

பெரும்பாலும் ரஹ்மானின் இசையில் அவர் பாடி இருந்தாலும், வித்யாசாகர், யுவன்சங்கர் ராஜா, ஜி.வி பிரகாஷ் குமார், இமான், சத்யா ஆகியோரின் இசையிலும் பாடி இருக்கிறார். பெண்கள் மனதைப் பிரதிபலிக்கும் பல காதல் பாடல்கள்தான் மதுஸ்ரீயின் ஹிட்ஸ்.

ஆயுத எழுத்து படத்தில் வரும் ‘சண்டக்கோழி கோழி’, அன்பே ஆருயிரே படத்தில் ‘மயிலிறகே’, தீபாவளி படத்தில் ‘கண்ணன் வரும் வேளை’, சக்கரகட்டி படத்தில் ‘மருதாணி’, எங்கேயும் எப்போதும் படத்தில், ‘உன் பெயரே தெரியாது’, மங்காத்தாவில் ‘நண்பனே’, இவன் வேற மாதிரி படத்தில் ‘என்னை மறந்தேன்’, நெடுஞ்சாலை படத்தில் ‘இவர் யாரோ’ போன்ற பாடல்கள் மற்றும் இன்னும் சில பாடல்களைப் பாடி இருக்கிறார். தமிழ் மட்டுமின்றி இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் மொழிகளிலும் பாடி இருக்கிறார் அவர்.

கடைசியாக 2003ஆம் ஆண்டில் தொடர்ந்து நான்கு நேரடித் தமிழ்ப் படங்களுக்கு இசை அமைத்திருந்தார் ரஹ்மான். சரியாக 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2022இல் இதுவரை நான்கு படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். ‘இரவின் நிழல்’, ‘கோப்ரா’, ‘வெந்து தணிந்தது காடு’, ‘பொன்னியின் செல்வன்’ என அடுத்தடுத்து ஹிட்ஸ்களைத் தந்திருக்கிறார். இதில், நெட்டிசன்களின் கண்ணில் சிக்கி இருக்கும் ‘மல்லிப்பூ’தான் இந்த வார வைப்பில் இடம் பிடித்திருக்கிறது!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்