காதலர் தினத்தில் பிறந்த நாயகனுக்கு, காதலித்துத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற லட்சியம். ஆனால் அவருக்குக் காதலி கிடைப்பதில் வரிசையாகச் சிக்கல்கள். இதை மையமாகக் கொண்ட கதையை முழுநீள நகைச்சுவைப் படமாக இயக்கி முடித்துவிட்டார் அறிமுக இயக்குநர் ஷி.ஜி.சுரேஷ்குமார். இவர் இயக்குநர் சுசீந்திரனின் உதவியாளர். தணிக்கைக் குழு உறுப்பினர்களில் ஒருவராகப் படத்தைப் பார்த்த இயக்குநர் பி. வாசு, “ஒரு படத்தைப் பார்த்து இப்படி விழுந்து விழுந்து சிரித்து எத்தனை வருடங்களாச்சு!” என்று பாராட்டியிருக்கிறார். படத்துக்கு ‘யு’ சான்றிதழ் அளித்திருக்கிறார்களாம். இதில் நாயகனாக அறிமுக இருப்பவர் ‘அபீஸ்’ தொடரின் மூலம் சிரிக்க வைத்த விஷ்ணு.
வாரிசு வந்தாச்சு
‘காதலிக்க நேரமில்லை’ புகழ் ரவிச்சந்திரனின் பேத்தி தான்யா இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் அறிமுகமானபடி தமிழ் சினிமாவில் களமிறங்குகிறார். ராதாமோகன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் ‘பிருந்தாவனம்’ என்னும் படத்தில் இவர்தான் கதாநாயகி. இந்தப் படத்தில் ஒப்பந்தமாகும் முன்னரே மிஷ்கின் இயக்கும் படத்திலும் கதாநாயகி ஆகிவிட்டார். ‘நீ ஒருநாள் ஹீரோயின் ஆவே’ என்று தன் பள்ளிப் பருவத்தில் தாத்தா ரவிச்சந்திரன் ஆசீர்வதித்தது தற்போது நடந்துவிட்டது என்று சொல்லும் தான்யா தனக்குச் சவால்கள் காத்திருக்கின்றன என்கிறார்.
சினிமா பிரார்த்தனை!
ஏ.எல். விஜய் இயக்கத்தில் இந்தி, தெலுங்கு, தமிழ் என மும்மொழிகளில் உருவாகியிருக்கும் ‘தேவி’ திரைப்படம் இன்று வெளியாகிறது. இயக்குநர் விஜய், படத்தைத் தயாரித்து, நாயகனாக நடித்திருக்கும் பிரபுதேவா, நாயகி தமன்னா, முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் சோனு சூட் ஆகியோர் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் சுறுசுறுப்பாக இயங்கிவருகிறார்கள்.
படத்தின் வெற்றிக்காகச் சிறப்புப் பிரார்த்தனை செய்யவும் அவர்கள் தவறவில்லை. அதன் ஒரு பகுதியாக பிரபுதேவா, தமன்னா, சோனு ஆகிய மூவரும் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்து திரும்பியிருக்கிறார்கள்.
மேலும் ஒருவர்
சின்னத்திரையில் கிடைக்கும் புகழை வைத்துப் பெரிய திரையில் அறுவடை செய்யும் காலம் இது. ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் நடித்து கவனம் பெற்ற கவின், ‘நட்புனா என்னனு தெரியுமா?’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடி ரம்யா நம்பீசன். 2012-ல் ஜெனீவாவிலிருந்து வந்து லிப்ரா புரொடக்ஷன் என்ற நிறுவனத்தைத் தொடங்கி ‘சுட்டகதை’, ‘நளனும் நந்தினியும்’ என்ற இரண்டு படங்களைத் தயாரித்து ரசனையான தயாரிப்பாளராக அறிமுகமான ரவீந்தர் சந்திரசேகர் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தயாரிக்கும் படம் இது. நகைச்சுவையுடன் காதலை இணைத்து உருவாக்கும் இந்தப் புதிய படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குநர் சிவகுமார்.
மகாநதியாக மாறும் நித்யா
தெலுங்கின் புதிய அலை சினிமா இயக்குநர்களில் கவனிக்கத் தக்கவர் ‘யாவடே சுப்ரமண்யம்’ படத்தின் இயக்குநர் நாக் அஷ்வின். இவர் அடுத்து இயக்க இருப்பது ‘நடிகையர் திலகம்’ சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை. ‘மகாநதி’ ஏன்று ஆந்திர மக்களால் புகழப்பட்ட சாவித்திரியின் புகழைப் பேசவிருக்கும் இந்தப் படத்துக்கு, அதையே தலைப்பாக வைத்துவிட்டார்கள். தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகவிருக்கும் இந்தப் படத்தில் சாவித்திரியாக நடிக்கத் தேர்வாகியிருக்கிறார் நித்யா மேனன். நித்யாவுக்குத் தமிழ், மலையாளம், தெலுங்கில் மட்டுமின்றி கன்னடத்திலும் ரசிகர்கள் இருப்பதும் அவரைத் தேர்வு செய்யக் காரணம் என்று கூறியிருக்கிறார் இயக்குநர்.
திரையில் தமிழ்ப் பெண்
தமிழ்ப் பெண்கள் திரைப்படத்தில் நடிக்க அத்தனை ஆர்வம் காட்டு வதில்லை என்பது மாறிவருகிறது. சென்னையில் பிறந்து வளர்ந்த லீஷா, தற்போது மூன்று படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். விஜய் வசந்த் கதாநாயகனாக நடிக்கும் ‘மைடியர் லிசா’ படத்தில் லீஷாதான் கதாநாயகி. ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ படத்தின் நாயகன் சந்தோஷ் பிரதாப் நடித்துவரும் ‘பொதுநலம் கருதி’ படத்திலும் இவர்தான் நாயகி. இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் முடிவடையும் கட்டத்துக்கு வந்துவிட்ட நிலையில், ‘கழுகு’ பட இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் ராணா டக்குபதி நடிக்கும் ‘மறைந்திருந்து’ படத்துக்கும் இவர் தேர்வாகியிருக்கிறார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago