மறக்க முடியாத நாட்கள்! - நடிகை கீர்த்தி சுரேஷ் பேட்டி

By கா.இசக்கி முத்து

தாய்மொழியான மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் நடித்துக்கொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். ஆனால் தமிழில் முதலிடத்துக்கான கதாநாயகிப் பந்தயத்தில் அதிகச் சம்பளம் வாங்கும் கதாநாயகிகளுக்குக் கடும் போட்டியாக விளங்குகிறார் என்ற வர்ணனை கோலிவுட்டில் கேட்கிறது. இன்று வெளியாகும் ‘ரெமோ’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்திருக்கும் கீர்த்தி, விஜயின் ‘பைரவா’ படத்தில் அவருக்கு ஜோடி. அவரிடம் பேசியதியலிருந்து…

‘ரேமோ’ படத்தில் என்னவாக நடித்திருக்கிறீர்கள்?

காவ்யா என்ற மருத்துவராக நடித்திருக்கிறேன். டவுன் டூ எர்த் கேரக்டர். படம் பார்த்து ரசிகர்கள் என்ன சொல்லப் போகிறார்களோ என்ற யோசனை ஓடிக் கொண்டிருக்கிறது.

சிவகார்த்திகேயனைக் கதைப்படி ஒரு பெண்ணாக நினைத்து முகபாவனைகள் செய்து நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

முதல் இரண்டு நாட்கள் சிரிப்பு வந்து கொண்டே இருந்தது. பிறகு அவரை ஒரு பெண்ணாகவே நினைத்துப் பழக ஆரம்பித்துவிட்டேன். பெண்ணாக நினைத்தாலும், அது சிவாதான் என்று உள்மனசு சொல்லிக்கொண்டே இருக்கும். சிவா பெண்ணாக நடிக்கும்போது நானும் நிறைய உதவியிருக்கிறேன். பெண்கள் எப்படியெல்லாம் இருப்பார்கள் என்று சொல்லிக் கொடுப்பேன். எப்போதாவது சிவாவை மேக்கப் இல்லாமல் பார்த்தால் புது ஆளைப் பார்ப்பது போன்று இருக்கும்.

மலையாளத்தில் நாயகியாக அறிமுகமானீர்கள். தற்போது உங்கள் முழுக் கவனமும் தமிழில் மட்டுமே மையம் கொண்டிருக்கும் ரகசியம் என்ன?

ஒரு ரகசியமுமில்லை. சந்தோஷமாக இருக்கிறது. தமிழில் நடித்தால் பெரிய வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்த்து நான் வரவில்லை. “வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு” என்ற வாக்கியம்தான் ஞாபகம் வருகிறது. எனக்கு மலையாளம், தமிழ் இரண்டுமே ஒன்றுதான். மலையாளத்தைவிடத் தமிழில்தான் நிறைய படங்கள் பண்ணியிருக்கிறேன். இது ஆரம்பம்தான்.

தமிழில் எந்த நடிகருடன் நடிக்க ஆசை? கனவுக் கதாபாத்திரம் எது?

நாயகர்கள் அனைவருடனும் நடிக்க ஆசைதான். ஒரு கதாபாத்திரம் கேட்டு பிடித்து, நடிக்கும்போதுதான் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பது தெரிகிறது. ‘இது என்ன மாயம்’ படத்தில் தொடங்கி ‘பைரவா’ வரைக்கும் எனக்கு வரும் கதைகளும் வித்தியாசமாகத்தான் இருக்கின்றன. ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்க வேண்டும் என விரும்புவேன். இனிமேலும் அந்த மாதிரி வித்தியாசமான கதாபாத்திரங்களாகக் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

நான் மிகவும் விரும்பிப் பார்த்த படம் கங்கணா ரனாவத் நடித்த ‘குயின்’. கங்கணா அந்தப் படத்தில் தந்தது போன்ற நடிப்பை இனிமேல் யாராலும் பண்ண முடியாது. அந்த மாதிரியான சவாலான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை.

ஆடை வடிவமைப்புக்குப் படித்துவிட்டு நடிகையாகி விட்டோமே என்ற வருத்தம் இருக்கிறதா?

கண்டிப்பாக வருத்தம் கிடையாது. ஆடை வடிவமைப்புப் படித்தால் அப்பா தயாரிக்கும் படத்திலாவது ஆடை வடிவமைப்பு பண்ணலாமே என்றுதான் தேர்ந்தெடுத்துப் படித்தேன். ஆடை வடிவமைப்பை விட்டுவிட்டு நடிகையாகிவிட்டோமே என்ற வருத்தமெல்லாம் இல்லை. நடிகையானவுடன் ஆடை வடிவமைப்பு என்பது ரொம்ப உதவியாக இருக்கிறது. ஒரு நடிகைக்கு ஆடைகள் என்பது ரொம்ப முக்கியம்.

உங்களுடைய அறிமுகப் படமான ‘கீதாஞ்சலி’யின் முதல்நாள் படப்பிடிப்புக்குக் கிளம்பும்போது அம்மா சொன்ன அறிவுரை என்ன?

அந்தப் படத்தின் படப்பிடிப்பு நாட்களை மறக்கவே முடியாது. முதல் நாளில் “நேரத்தைச் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும், படப்பிடிப்பில் சிறுவேலையில் இருப்பவர்கள் முதல் இயக்குநர் வரை அனைவரையும் ஒரே மாதிரி பார்க்க வேண்டும்” என 2 இரண்டு விஷயங்களை அம்மா சொன்னார்கள். அதை இப்போதும் கடைப்பிடித்துவருகிறேன். அதற்குப் பிறகு எந்தவொரு ஆலோசனையும் சொன்னதில்லை. நான் நடித்த படங்களைப் பார்த்துவிட்டு அம்மா தரும் விமர்சனம் கூர்மையாக இருக்கும். நான் எப்போதுமே அதற்காகக் காத்திருப்பேன்.

‘பைரவா’ நாயகன் விஜய் என்ன சொல்றார்?

விஜய் சாரை ‘பைரவா’ படத்தின் பூஜையின் போதுதான் பார்த்தேன். அப்போது ‘ரஜினிமுருகன்’ வெளியான நேரத்தில் என் பேட்டியைத் தொலைக்காட்சியில் பார்த்தாகவும் அருமையாகப் பேசுகிறீர்கள் என்றும் சொன்னார் . ‘உன் மேல ஒரு கண்ணு’ பாடலில் எனது கண் அசைவுகள் சூப்பர் என்றவுடன் சந்தோஷமாக இருந்தது.

அதற்கு முன்பு விஜயைச் சந்தித்ததே இல்லையா?

பள்ளியில் படிக்கும்போது ஒரு ரசிகையாகப் பார்த்திருக்கிறேன். திருவனந்தபுரத்தில் ‘போக்கிரி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு என் வீட்டருகே உள்ள ஹோட்டலில்தான் நடைபெற்றது. அவ்வளவு கூட்டம். அதன் நடுவே விஜயின் உருவத்தைப் பார்த்தேன். அன்று கூட்டத்தில் விஜய் சாரைப் பார்த்த நான் இன்று அவருக்கு ஜோடியாக நடிக்கிறேன் என்றால் நம்ப முடியவில்லைதான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்