முறையான எந்த ஆவணமும் கைவசம் இல்லாத நிலையில், மனிதர்களை மதிக்கும் ஏதாவது ஒரு தேசத்தில் கால் பதித்து விடலாகாதா என்ற தேடுதலிலேயே கழிகிறது ஏதிலிகளின் வாழ்க்கை. வாழ்ந்துவரும் நாட்டின் எல்லையைக் கடப்பதற்கு, உயிரைத் துச்சமென மதித்து அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை முன்வைத்துப் பல திரைப்படங்கள் உலக அரங்கில் வந்திருக்கின்றன. சினிமாவில் வழக்கமாகக் காட்டப்படும் நம்ப முடியாத கற்பனைகளை விஞ்சியவை, ஏதிலிகளின் அந்த முயற்சிகள்.
தமிழகத்தின் 26 மாவட்டங்களில் உள்ள ஈழ அகதி முகாம்களில் 73,000க்கும் மேற்பட்ட ஏதிலிகள் வாழ்ந்துவருகிறார்கள். ஆறு மணிக்கு மேல் இவர்கள் வெளியே நடமாட முடியாது. தண்ணீரைக் கிருமிநீக்கம் செய்வது போல் கல்வி, வேலை, குடியுரிமை போன்ற அனைத்திலிருந்தும் விலக்கி வைக்கப்பட்ட மனிதர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.
திருச்சி அகதிகள் முகாமைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் ஆவணங்கள் இல்லாமல் கப்பல் வழியே தப்பிச் சென்று ஆஸ்திரேலி யாவில் குடியேற நினைக்கிறான். அதற்காக அவனது பெற்றோர் கொஞ்சம் கொஞ்சமாகக் காசு சேர்த்து வைத்திருக்கிறார்கள். தங்களுக்குத்தான் இயல்பான வாழ்க்கை கிடைக்கவில்லை, மகனுக் காவது கிடைக்கட்டுமே என்று. அவனுக்கு ஒரு காதலி உண்டு. ஆஸ்திரேலியாவுக்கு அவன் எப்படியாவது போய்விட வேண்டுமென அவளும் விரும்புகிறாள். திட்டங்கள் எல்லாம் சரியாகத்தான் இருக்கின்றன. கூடுதல் மனஉறுதியுடன் அவன் நாகப்பட்டினம் கிளம்புகிறான்.
கடலின் பாதை முடிவதை நம் கண்களால் கணிக்க முடியாதது போல், அவன் வாழ்க்கையாலும் கணிக்க முடிவதில்லை.
இப்படிக்குத் தோழர் செங்கொடி, அறப்போர் ஆவணப் படங்களை இயக்கியதற்கு அறியப்பட்டவரும், பாலை திரைப்படத்திலும் பணிபுரிந்தவருமான வெற்றிவேல் சந்திரசேகர்தான் படத்தின் இயக்குநர். குறும்படம் என்றாலும் தொழில்நுட்ப அம்சங்கள் காட்சி அனுபவத்தைப் புதிதாக்கியுள்ளன. நம்மிடையே வாழும் ஏதிலிகள் எத்தனையோ மோசமான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். அவர்களது அடிப்படை விழைவை அடிக்கோடிடு கிறது இப்படம். உய்த்துணராத வரை, அதனால் அவர்களுக்கு ஏற்படும் வலி நமக்குப் புதிதுதான். இதைத் தயாரித்திருப்பது சி. கபிலன், செங்கொடி வெளியீட்டு நடுவம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago