தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம்வந்தாலும் சென்னை பேச்சையும், அவருடைய நட்பு வட்டத்தையும் இன்னும் மறக்கவில்லை சமந்தா. சென்னை வந்திருந்த அவரிடம் பேசியதிலிருந்து…
சென்னையில் உங்களை எந்தவொரு திரைப்பட நிகழ்ச்சிகளிலும் காண முடியவில்லையே?
உண்மைதான். மே மாதத்தில் 6-ம் தேதி ‘24', 13-ம் தேதி ‘ஆ ஆ', 20-ம் தேதி ‘பிரம்மோற்சவம்' ஆகிய படங்கள் வரவிருக்கின்றன. ஆகையால் அடுத்தடுத்துப் பட வேலைகள் என ஓடிக்கொண்டே இருக்கிறேன். அதனால்தான் சென்னைக்கு வந்து போக முடியவில்லை. ஹைதராபாதில் நடைபெற்ற ‘தெறி', ‘24' ஆகிய படங்களின் விழாக்களில் கலந்துகொண்டேன். சென்னைக்கு வர முடியாததில் வருத்தம்தான்.
என் வீடு ஹைதராபாதில் இருந்தாலும், சென்னைக்கு வருவது எனக்குப் பிடிக்கும். சத்யம் திரையரங்கும், பெசன்ட் நகர் கடற்கரையும் எனக்குச் சென்னையில் விருப்பமான இடங்கள். இப்போதும் பல்லாவரம் நண்பர்கள் மற்றும் என்னுடைய கல்லூரி நண்பர்கள்தான் எனக்கு நெருக்கமானவர்கள்.
‘யு-டர்ன்' படத்தின் தமிழ், தெலுங்கு மறு ஆக்கங்களில் நடித்து, தயாரிக்கவும் போகிறீர்களாமே?
பெங்களூருவுக்குப் போய் ‘யு-டர்ன்' படத்தைப் பார்த்தது உண்மை. பிடித்திருந்தது, ஆகையால் நடிக்கிறேன். ஆனால், அந்தப் படத்தை நான் தயாரிப்பதாக வந்த செய்தியில் உண்மை இல்லை.
நடிப்புத் துறையில் இலக்கு ஏதாவது வைத்திருக்கிறீர்களா?
இனிமேல் நல்ல கதாபாத்திரங்கள் இருக்கும் கதைகளையே தேர்வு செய்து நடிக்கத் தீர்மானித்திருக்கிறேன். சும்மா பாடல்களுக்கு மட்டும் கவர்ச்சி யாக வந்துவிட்டுப் போவதில் விருப்ப மில்லை. அப்படி நல்ல கதைகள் எனக்கு வரவில்லை என்றால் வீட்டில் இருப்பேன்.
முன்னணி நடிகர்களுடைய படங்களில் மட்டுமே நாயகியாக நடிக்கிறீர்களே?
அப்படி எந்தவொரு படத்தையும் நான் ஒப்புக்கொள்வதில்லை. நான் ஒரு படத்துக்கு ஒப்பந்தமாகும்போது நடிகர் யார் என்று கேட்டதில்லை. இயக்குநர் யார் என்பதுதான் எனக்கு முக்கியம். இப்போதுகூட ‘வடசென்னை' படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறேன். எனக்கு மிகவும் சவாலான படம். அந்தப் படத்தில் ஏற்கவிருக்கும் கதாபாத்திரத்துக்காக வடசென்னையில் இருக்கும் குடிசைப் பகுதிக்குச் சென்று பயிற்சி எடுக்கப் போகிறேன். கண்டிப்பாகத் தமிழில் நீங்கள் வழக்கமாகப் பார்க்கும் சமந்தாவை ‘வடசென்னை'யில் காண முடியாது.
எனக்குச் சவால் நிறைந்த படங்களில் நடிக்க ஆசை. நான் மிகவும் அழகான நடிகை, திறமையான நடிகை என்று சொல்லிக்கொள்ளவில்லை. ஆனால், கடினமாக உழைத்து நடிக்கும் முதல் 5 நடிகைகளின் பட்டியலில் நான் இருப்பேன் என நினைக்கிறேன்.
தமிழ், தெலுங்குத் திரையுலகில் உங்களுக்குப் போட்டி யார்?
நயன்தாராதான் எனக்குப் போட்டி. பெண்களை மையப்படுத்தி வரும் படங்களில் நடிக்க எனக்கு ஆர்வ மில்லை. இதுவரை நான் நடித்த படங்கள் அனைத்துமே மனரீதியான சவால்கள் நிறைந்தவை. போட்டி இருந்தாலும் அனைவருமே நண்பர்களாகத்தான் இருக்கிறோம். ஒரு படத்தில் ஒரு நடிகை நன்றாக நடித்திருந்தால், உடனே போன் செய்து பாராட்டிவிடுவேன். ‘இஞ்சி இடுப்பழகி' படத்தின் கதாபாத்திரத்துக்காக அனுஷ்கா தந்த உழைப்பு அலாதியானது. ஒரு பெண்ணாக அவருடைய துணிச்சல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
நீங்கள் நடத்திவரும் தொண்டு நிறுவனத்துக்குத் தூண்டுகோல் யார்?
என் அம்மாதான். நான் நடிகையாகும் முன்பு எங்களது குடும்பம் மிகவும் நடுத்தர வர்க்கம்தான். ஆனால், உதவி என்று யாராவது கேட்டால் எங்கள் அம்மா உடனே கொடுத்துவிடுவார். நடுத்தர வர்க்க குடும்பத்துப் பெண்ணாக ஆரம்பித்துக் கடுமையாக உழைத்து இந்த நிலையை அடைந்திருக்கிறேன். உழைப்பு மட்டுமன்றி கடவுளின் அருளும் முக்கியக் காரணம். நான் நல்ல நிலைமையில் இருந்தால் மட்டும் எனக்கு மகிழ்ச்சியைத் தராது. பிறருக்கு என்னால் முடிந்த உதவி செய்வதன் மூலம் மட்டுமே எனக்கு மனநிம்மதி கிடைக்கிறது.
இந்தியில் நடிக்கத் தயங்குவது ஏன்?
தயக்கம் எல்லாம் இல்லை. தமிழ், தெலுங்கில் நடிக்கவே எனக்கு நேரமில்லை. சரியான வாய்ப்பு வரும் பட்சத்தில் எந்த மொழி என்றாலும் ஒப்புக்கொள்வேன்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago