‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, மலையாளத்தில் ஷாந்த்தோடு ‘டீம் 5’ என்று நிற்கக்கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறார் நிக்கி. ‘‘ஒரே மாதிரி கேரக்டர் என்றால் ஓடியே வந்துடுவேன். கதை கேட்கும்போதே கண்டிப்பா இந்த ரோல் பேசப்படும்னு கணிக்க முடியும். அதுதான் இப்போ எனக்குன்னு ஒரு இடத்தைக் கொடுத்திருக்கு! தமிழ்ல அறிமுகமாகும்போதே பேயா நடிக்கிறோமேன்னு நான் பின் வாங்கல’’ எனக் கெத்து காட்டும் நிக்கி கல்ராணியுடன் ஒரு சின்ன சந்திப்பு…
‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் உங்களோட வேலை என்ன?
முழுக்க முழுக்க காமெடி படம். ஆனா என்னோட ரோல் கொஞ்சம் சீரியஸ். சப் இன்ஸ்பெக்டர் ஆகணும்னு கனவோட இருந்து ஒரு கட்டத்துல அந்த வேலைக்கும் போயிடுவேன். படத்துல நான் அறிமுகமாகிற இடமே சண்டைக் காட்சிதான். என்னைச் சுத்தி நிக்கிற 5 பேரை அடித்து துவம்சம் செய்வேன். அதுக்காகச் சண்டை போடக் கத்துக்கிட்டேன். படத்துல நிஜமாகவே ஒரு பையன் மாதிரி நடிச்சிருக்கேன்.
சினிமாவுக்கு வந்த இந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பிஸியானது எப்படி?
முதலில் மலையாளத்தில்தான் தொடங்கினேன். இங்கே ஒரு வருஷத்துக்கு அப்பறம்தான் வந்தேன். இப்போ வரைக்கும் ஒரு சின்ன பிரேக் கூட எடுத்ததில்லை. அதுக்காக எல்லாக் கதாபாத்திரங்களையும் ஏற்பதில்லை. கிளாமர் என்றால் அதிகம் கிளாமர், ஆக்ஷன் என்றால் அதிகம் ஆக்ஷன் அப்படி நான் தேர்வு செய்வதில்லை. வித்தியாசம் இருக்கணும். அந்த வகையில் நான் கொடுத்து வைத்தவள்தான். கதைகள் நல்லபடியா அமையுது. கோ ஸ்டார்ஸும் பாப்புலர் ஹீரோஸ். இதுக்குமேல என்ன வேணும்?
ஆனால் ‘கோ 2’ சரியா போகலையே?
படத்துக்கு விமர்சனம் ரெண்டு பக்கமும் கலந்தே வந்தது. ஆனால், மக்கள்கிட்ட நல்ல பாசிடிவ் இடம் கிடைச்சிருக்கு. அரசியல், சமூகம்னு பேசின படம். சில தரப்பிலிருந்து முதல் பாதி இன்னும் நல்லா பண்ணியிருக்கலாம்னு விமர்சனம் வந்துச்சு. அது ஒரு பக்கம். ஆனா, மக்கள்கிட்ட படம் விழிப்புணர்வை ஏற்படுத்திருக்கு. அது போதுமே.
முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாந்த்தோடு நடிக்கிற அனுபவம் எப்படி?
இப்போதான் படப்பிடிப்பு தொடங்கியிருக்கோம். அதுவும் 5 நாட்கள்தான் நடந்திருக்கு. மலையாளத்தில் ஸ்ரீஷாந்த்துக்கு முதல் படம். இந்தியில அவர் ரெண்டு படம் நடித்திருக்கார். கிரிக்கெட்டரா இருக்கும்போதே நிறைய விளம்பர படங்களில் நடித்த அனுபவம் இருப்பதால் சினிமாவுக்குப் புதுசு மாதிரியே அவர் இல்லை. அவர்கிட்ட இன்னும் கிரிக்கெட் பற்றிப் பேசவில்லை. நேரம் கிடைக்கலை. கிரிக்கெட்டரோட சேர்ந்து நடிப்பது மகிழ்ச்சி. ஏன்னா… எனக்கு ரொம்பவே கிரிக்கெட் பிடிக்கும். நான் சச்சின் ரசிகை.
கிரிக்கெட் பிடிக்கும்னு சொல்றீங்க. ஐபில், சிசிஎல் கிரவுண்ட் பக்கம் உங்களைப் பார்க்க முடியறதே இல்லையே?
சமீபத்துல சென்னையில சினிமா நட்சத்திரங்கள் நடத்திய கிரிக்கெட் போட்டி நடந்தப்போ அங்கேதான் இருந்தேன். நீங்க சொல்ற மாதிரி ஐபில், சிசிஎல் போட்டி பக்கம் என்னை அதிகம் பார்க்க முடியாது. நான் தமிழ், தெலுங்கு, மலையாளம்னு பல மொழிகளில் நடிக்கிறேன். அதனால் சுத்திகிட்டே இருக்கேன். சிசிஎல் மாதிரி கிரிக்கெட் போட்டி நடக்கும்போது அங்கே வந்து ஒரு அணிக்கு மட்டும் ஆதரவு செலுத்த முடியாது. அது தப்பாச்சே. அப்போ நான் ஒரு பார்வையாளராகத்தான் இருக்கணும். அதனாலதான் நேரம் கிடைத்தால் எல்லோர் மாதிரியும் வீட்ல டிவி முன்னாடி உட்கார்ந்துடுவேன்.
ஃபேஸ்புக், டிவிட்டர் பக்கத்தில் உங்கள் படங்களைப் பற்றிப் பதிவு செய்ற அளவுக்கு உங்களைப் பற்றி எதுவும் சொல்வதில்லையே. ஏன்?
எனக்கு எப்பவுமே என்னோட பர்ஸனல் விஷயங்கள் பற்றிப் பேச பிடிக்காது. அதனாலதான் என்னோட பயணம், குடும்பம், பொழுதுபோக்கு இதெல்லாம் பற்றி யாருக்கும் பெரிதாகத் தெரியாது. என்னோட படங்கள் ரிலீஸ், ஷூட்டிங் இது மட்டும்தான் பதிவு செய்வேன். என்னோட சொந்த உலகம் ரொம்பச் சின்னது. அது அப்படியே இருக்கட்டும். எப்போதுமே அதைப் பொது விஷயமாகக் கொண்டுவர மாட்டேன்.
‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்திலும் பத்திரிகையாளராக நடிக்கிறீர்களாமே?
ஆமாம். மீடியாவூக்கும் எனக்கும் ஏதோ பூர்வ பந்தம்னு நினைக்கிறேன். அதனாலதான் திரும்பத் திரும்ப பத்திரிகையாளர் வேடம் கிடைக்குது. ஆனால், ‘கோ 2’ மாதிரி இல்லை. ரொம்பவே வித்தியாசமான ரோல். தெலுங்குல வந்த ‘பட்டாஸ்’ படத்தோட ரீமேக். அதுல ஹீரோயின் வெஸ்டர்ன் ஸ்டைல்ல வருவாங்க. நான் இங்கே தமிழுக்குப் பாவாடை, தாவணின்னு ரொம்பவே வித்தியாசம் காட்டியிருக்கேன். எனக்குப் பிடித்த கதை. பாடல் படப்பிடிப்புக்காக அடுத்த வாரம் பேங்காக் போறோம். அது முடிந்ததும் மொத்தப் படமும் ரெடி.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago