முத்தமிழ் அறிஞரின் முத்தான காவியங்கள்

By முகமது ஹுசைன்

கலைஞர் என்று அழைக்கப்படுவதற்கு முற்றிலும் பொருத்தமானவர் கருணாநிதி. அவர் தடம் பதிக்காத கலை வடிவங்களே இல்லை என்று சொல்லாம். கவிதை, கட்டுரை, சிறுகதை, நாடகம், நாவல், வரலாறு என எல்லா வடிவங்களிலும் முத்திரை பதித்தவர் அவர்.

15 வயதில் எழுதிய ‘பழனியப்பன்’ என்கிற நாடகமே கலைஞரின் முதல் நாடகம். திருவாரூரில் அந்த நாடகத்தை அவர் அரங்கேற்றம் செய்தார். பின்னர் அது `நச்சுக்கோப்பை' என்கிற தலைப்பில் தமிழகம் எங்கும் திராவிடர் கழக மேடைகளில் நடத்தப்பட்டது. மொத்தம் 17 நாடகங்களை அவர் எழுதியிருக்கிறார். ஒவ்வொரு நாடகத்தையும் திரைக்கதையின் வடிவத்தில் அவர் எழுதியிருந்தார். பின்னாட்களில் திரை வடிவத்தின் மீது அவர் கொண்டிருந்த ஆளுமைக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்த காலகட்டம் அது.

திரைப்பட மொழியின் வலிமையை இளம் வயதிலேயே அவர் நன்கு உணர்ந்திருந்தார். அபரிமித படைப்பாற்றல், அபார சொல்வீச்சு, நிகரற்ற மொழி ஆளுமை ஆகியவற்றின் காரணமாக, 20 வயதுக்கு உள்ளாகவே திரைத்துறையில் வெற்றியைத் தனதாக்கிக்கொண்டார். ‘அபிமன்யு’ என்கிற படத்துக்கு வசனம் எழுதியதன் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்த அவர், அதன் பின் அடைந்த உயரம் வேறு யாராலும் எட்ட முடியாத ஒன்றாக இருந்தது. இருக்கிறது.

உலக அளவில் எடுத்துக்கொண்டாலும், அவர் அளவுக்கு எந்த வசனகர்த்தாவும் கொண்டாடப்படவில்லை. அவருடைய வசனங்கள் அளவுக்கு வேறு எவருடைய வசனங்களும் போற்றப்படவில்லை; சமூகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தவில்லை.திரைப்பட வசனத்திற்கு ஒரு மாபெரும் இலக்கிய மரியாதையையும் பெற்றுத் தந்தவர் கலைஞர்.

கதை, திரைக்கதை, வசனம், பாடல், தயாரிப்பு எனத் திரைத்துறையின் அனைத்துத் தளங்களிலும் அவர் தன் செம்மையான பங்களிப்பை அளித்திருக்கிறார். அவருடைய படைப்புகளில் தமிழுணர்ச்சி, சமுதாயக் கண்ணோட்டம், சமூக நீதி போன்றவை எப்போதும் நிறைந்திருக்கும்.அவரது திரைப்பயணத்தில் முக்கிய மைல் கற்களாக அமைந்த சில படங்களைப் பற்றிய சுருக்கமான குறிப்புகள் இவை:

ராஜகுமாரி

திரையுலக வாழ்வில் கலைஞரின் முதல் படம் ‘ராஜகுமாரி’இந்தப் படத்தில் அதன் இயக்குநர் எஸ்.ஏ.சாமிக்கு உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். மேலும், அந்தப் படத்தின் கதை வசனத்தையும் அவரே எழுதியுள்ளார். அந்தக் காலகட்டத்தில் அதுவரை சிறு சிறு வேடங்களில் நடித்த வந்து எம்.ஜி.ஆருக்கு நாயகன் அந்தஸ்து கொடுத்ததும் அந்தப் படம்தான்.

மந்திரி குமாரி

கதாசிரியராகவும் வசனகர்த்தாகவும் கலைஞருக்கென்று முக்கியத்துவம் வாய்ந்த தனி இடத்தை உருவாக்கிய படம் ‘மந்திரி குமாரி’முதலில் நாடகமாகத்தான் இதை அவர் எழுதினார். பின்னர் அது திரைப்படத்துக்காக அவரால் மாற்றி எழுதப்பட்டது. திரைப்படப் பாடல்களும் வசனமும் முதன்முறையாகப் புத்தக வடிவில் விற்கப்பட்ட பெருமையும் இந்தப் படத்துக்கே உண்டு.

மருதநாட்டு இளவரசி

கலைஞருடன் எம்ஜி.ஆர் இணைந்து பணியாற்றிய மற்றுமொரு வெற்றிப்படம் இது. இந்தப் படத்தின் நாயகி வி,என்.ஜானகி பின்னாளில் எம்.ஜி.ஆருடன் மணவாழ்வில் இணைந்தார். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின் குறுகிய காலத்துக்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் ஜானகி இருந்துள்ளார்.

பராசக்தி

சமூகத்தில் நிலவும் அவலங்களையும் மூடநம்பிக்கைகளையும் தன் சாட்டையடி வசனத்தால் கலைஞர் சுட்டிக்காட்டிய படம் பராசக்தி. கலைஞரின் வசனத்துக்காக இன்றும் அது கொண்டாடப்படுகிறது. பாடல்களை வசனங்கள் பின்னுக்குத் தள்ளிய போக்கும் இந்தப் படத்துக்குப் பின்னர்தான் தொடங்கியது. உலகத்தர நடிகராகப் பார்க்கப்படும் சிவாஜி எனும் அற்புத நடிகருக்கும் இதுவே முதல் படம். அதில் இடம்பெற்ற சிவாஜியின் நடிப்பும் வசன உச்சரிப்பும் இன்றும் நடிகர்களுக்கான பாடங்கள்.

பூம்புகார்

கலைஞரின் இதயத்துக்கு மிகவும் நெருக்கமான படைப்பு இது. சிலப்பதிகாரத்தைத் தழுவி அழுத்தம் திருத்தமாக அவர் எழுதிக் கொடுத்த கதையுடன் அமைந்த படமே ‘பூம்புகார்’. காப்பியக் கதையென்றாலும் முதன்முறையாக நாயகிக்கென்று அழுத்தமான வசனங்கள் இந்தப் படத்தில் கலைஞரால் எழுதப்பட்டது.

திரையுலகில் கலைஞரின் பங்களிப்பு

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்