தியாகராஜர், சியாமா சாஸ்திரி, முத்துசுவாமி தீக்ஷிதர் ஆகிய மூவரும் கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படுகிறார்கள். அதேபோல், தமிழ் இசையின் மும்மூர்த்திகள் என்று முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை, அருணாசலக் கவிராயர் ஆகியோர் கொண்டாடப்பட்டு வருகிறார்கள். மூன்றாவதாக இவ்விரு பாரம்பரிய இசை வடிவங்களின் தாக்கத்துடன் வெகு மக்களின் மனதில் இடம் பிடித்த எழுபதுகள் வரையிலான திரையிசையிலும் மும்மூர்த்திகள் உண்டு! எஸ்.வி.வெங்கட் ராமன், ஜி.ராமநாதன், சி.ஆர்.சுப்பராமன் ஆகிய மூவரும்தான் அவர்கள்.
இந்த மூவரில் சி.ஆர்.சுப்பராமன் இளம் வயதிலேயே, அதாவது 19 வயதில் தொடங்கி 28 வயதுக்குள் இந்த அந்தஸ்தைத் தன்னுடைய இசைத் திறமையால் பெற்ற ஒரே கம்போஸர் இவர் மட்டும்தான். ஒரு இசையமைப்பாளராக மட்டுமல்லாது, ஒரு குருவாகவும் இருந்து, தனக்குப் பிறகு தன் பெயரைச் சொல்ல மாணவர் பரம்பரையை உருவாக்கியவர் சி.ஆர்.எஸ். அவ்வளவு ஏன்! திரையிசையை ‘மெல்லிசை’ என்று ரசிகர்கள் வகைமைப்படுத்தி அழைக்கக் காரணமாக அமைந்துவிட்ட ‘மெல்லிசை மன்னர்கள்’ விஸ்வநாதன் - ராமமூர்த்தி என்கிற வெற்றிகரமான இசையமைப்பாளர் இணையை உருவாக்கிய அவர்களுடைய குரு சி.ஆர்.எஸ்.தான்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago