கடந்த 13-ம் தேதி கேரளத்தில் வெளியாகி வெற்றி பெற்றுள்ள மலையாளப் படம் ‘ஜோ ஜோ’. 1 கோடியே 80 லட்சம் ரூபாயில் எடுக்கப்பட்ட இந்தப் படம் வெளியான 4 நாட்களில் கேரளம் முழுவதும் 3.65 கோடியை வசூல் செய்திருக்கிறது. வரும் வாரத்தில் 10 முதல் 12 கோடியை இந்தப் படம் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் ‘ஜோமோள்’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நிகிலா விமல். கரோனா ஊரடங்கில் கல்லூரிக்குச் செல்லமுடியாமல் வீடடங்கிக் கிடக்கும் பெண்ணாக, தன்னுடைய தம்பியுடன் சதா சண்டை பிடித்தபடியிருக்கும் கதாபாத்திரத்தில் நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார் நிகிலா. இந்தப் படத்தின் விளம்பரத்துக்காக வெளியீட்டுக்கு முன் ஊடகங்களுக்கு பேட்டிளித்தார் நிகிலா. அப்போது இணைய ஊடகம் ஒன்றுக்கு நிகிலா அளித்த வீடியோ பேட்டியில் ஒரு பகுதி தற்போது வைரலாகி வருகிறது. அதில் மாட்டுக்கறி சாப்பிடுவது பற்றிய கேள்விக்கு நிகிலாவின் துணிச்சலான பதிலை நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள். பேட்டியின் அந்தப் பகுதி இதோ:
நிருபர்: சதுரங்க விளையாட்டில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?
நிகிலா விமல்: விளையாட வேண்டும் வேறு என்ன பண்ண?
நிருபர்: அவ்வளவுதானா?
» நடிகையும் மாடலுமான திருநங்கை மரணம்: கேரளத்தில் தொடரும் சோகம்
» 17 மே: எட்வர்ட் ஜென்னர் பிறந்தநாள்: ‘நோய் எதிர்ப்பியலின் தந்தை!’
நிகிலா விமல்: காய்களை நகர்த்தணும்..
நிருபர்: அந்த நகர்த்தலில் ஒன்றை நாம் மாற்றி யோசித்தால்?
நிகிலா விமல் - தெரியல..
நிருபர்: நாம குதிரையை வெட்டுறதுக்கு பதிலா அதை மாற்றிட்டு பசுவை வைக்கலாம், நம்ம ஊர்ல தான் பசுவை வெட்ட முடியாதே..
நிகிலா விமல்: அதனால...
நிருபர்:- பசுவை வைத்தால்...?
நிகிலா விமல்: பசுவை வைத்தால் வெற்றிபெறுவோமா... நம்ம ஊர்ல பசுவை வெட்டலாம், யாரு சொன்னா பசுவை வெட்டக்கூடாதுன்னு...
நிருபர்: மேல் பகுதிக்கு (வட இந்தியா) போய் பாருங்க..
நிகிலா விமல்: அது அங்க... நம்ம ஊர்ல பசுவை வெட்டலாம்... நம்ம ஊர்ல பசுவை வெட்டக்கூடாதுன்னு ஒரு வழக்கமே இல்ல..
நிருபர்: ஆனா நாம இந்தியால தானே இருக்கோம்?
நிகிலா விமல்: ஆமா.. ஆனா இந்தியாலே தான் அப்படி ஒரு வழக்கம் இல்லை, அது இப்பக் கொண்டு வந்தது தானே. அது நம்ம பிரச்சினை இல்ல...
நிருபர்: அதை பற்றி எந்த விருப்பமும் இல்லையா...
நிகிலா விமல்: விலங்குகளைப் பாதுகாக்கிறதுன்னு வந்துட்டா.. எந்த விலங்கையும் கொல்லக்கூடாது. ஆனா பசுவுக்கு மட்டும் இங்கு தனித்துவமாக ஒன்றுமில்ல.
நிருபர்: அதுக்காக நாம சிங்கத்தைச் சாப்பிடமாட்டோம் இல்லையா...?
நிகிலா விமல்: அதான் சொல்லுறேனே.. வெட்ட கூடாதுன்னா எதையும் வெட்டக்கூடாது, வெட்டுறோம்ன்னா எல்லாத்தையும் வெட்டலாம்.
நிருபர்: ஆனா வன விலங்குகளை எதுவும் பண்ணக்கூடாதுன்னு சட்டம் உண்டு...
நிகிலா விமல்: இது ஒரு பெரிய விவாதத்துக்குரிய தலைப்பு... வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டும்கிற விஷயம். அது காடுகள் அழிவதால் சொல்லுறது. இது நம்ம ஊர்ல இப்போ பசுவை மட்டும் வெட்ட கூடாதுன்னா கோழிக்கு என்ன நியாயம் ?
நிருபர்: கோழி விலங்கு இல்லையே.. அது பறவை தானே...?
நிகிலா விமல்: கோழி பறவையா இருந்தா என்ன? அது உயிர் இல்லையா? கோழிய சாப்பிட கூடாதுன்னு சொல்லணும், மீன் சாப்பிடக்கூடாதுன்னு சொல்லனும், அதாவது முழுமையாக நீங்க சைவமாக மாறுங்க, அது இல்லாம ஒன்னுக்கு மட்டும் இந்த உலகத்தில சலுகை கொடுக்ககூடாது.
நிருபர்:- அப்படியா...?
நிகிலா விமல்: நான் எந்த சலுகையையும் ஏற்றுக்கொள்ள ஆசைப்படாத நபர்..
நிருபர்: நீங்க எதையும் சாப்பிடுவீங்களா...?
நிகிலா விமல்: நான் எதையும் சாப்பிடுவேன், சாப்பிட கூடாதுன்னா எதையும் சாப்பிடக்கூடாது, ஒன்னு மட்டும் சாப்பிடக்கூடான்னு சொல்லுறது என்னால முடியாது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago