கடந்த 2019-ல் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் ‘ஜீவி'. அந்தப் படத்தின் திரைக்கதை, உரையாடலுக்காகப் பாராட்டுகளை அள்ளியவர் பாபு தமிழ். இவர் தற்போது ‘க்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி..
கதாசிரியராக அறிமுகமானீர்கள். இப்போது இயக்க வந்திருக்கிறீர்கள். எது உங்கள் களம்?
நானும் படம் இயக்கவே வந்தேன். படம் இயக்கும் வாய்ப்பு முதலில் என்னுடைய நண்பர் கோபிக்குக் கிடைத்தது. என்னிடம் ‘ஜீவி’ திரைக்கதை இருந்தது அவருக்குத் தெரியும். அவர் கேட்டதால் கொடுத்தேன். அந்தப் படத்தில் கதை, திரைக்கதை, வசனம் என்னுடையது. அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றதால் இப்போது எனக்கும் படம் இயக்கும் வாய்ப்பு அமைந்துவிட்டது.
‘க்’ என்கிற ஓரெழுத்தில் தலைப்பு. இதன் கதையும் களமும் என்ன?
கால்பந்து வீரரைப் பற்றிய கதை. ஆனால், விளையாட்டுத் திரைப்படம் அல்ல. இது ஒரு உளவியல் ஃபாண்டசி த்ரில்லர். கால்பந்து வீரர்தான் கதாநாயகன். ஒரு போட்டியில் விளையாடும்போது அவருக்கு அடிபட்டுவிடுகிறது. மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். காலில் பட்ட காயத்தைவிட மனக் காயம் மர்மமான முறையில் வேலை செய்கிறது. சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதும் அவரைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் அவருக்கு உளவியல் சிக்கலை ஏற்படுத்துகின்றன.
அவருக்கும் அவருடைய மனதுக்கும் இடையில் ஒரு ‘மேட்ச்' தொடங்குகிறது. அவருடைய வாழ்க்கையில் விடுபட்டுப்போன ‘க்’ தருணங்கள் அவருடைய சிக்கலுக்கு எப்படிக் காரணமாகின்றன.. அந்தச் சிக்கலிருந்து மீண்டு அவர் மீண்டும் ஆடுகளத்துக்கு வந்தாரா, இல்லையா என்பது கதை. ‘ஜீவி’ படத்தின் எழுத்தாளர் என்பதால் உருவாகியிருக்கும் எதிர்பார்ப்பை இந்தப் படத்தின் மூலம் நிறைவேற்ற முயன்றிருக்கிறேன்.
உங்களுடைய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழு பற்றிக் கூறுங்கள்...
கதாநாயகனாக யோகேஷ் அறிமுகமாகிறார். கதாநாயகியாக அனிகா விக்ரமன் நடிக்கிறார். படம் முழுவதும் குரு சோமசுந்தரம் வருகிறார். இவர்களைத் தவிர ஒய்.ஜி.மகேந்திரன், ஆடுகளம் நரேன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார்கள். ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவாளராகவும் கவாஸ்கர் அவிநாஷ் இசையமைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்கள். தர்மராஜ் பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 mins ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago