பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி தன் கணவர் ப்ராட் பிட்டுடன் இணைந்து நடித்திருக்கும் சமீபத்திய படம் ‘பை த ஸீ’. 2005-ல் வெளியான ‘மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் ஸ்மித்’ படத்துக்குப் பின்னர் இருவரும் இணைந்து நடித்திருக்கும் முதல் படம் இது. ஏஞ்சலினா ஜோலி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் மூன்றாம் படம் இது.
படத்தின் திரைக்கதையையும் எழுதி ப்ராடுடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்திருக்கவும் செய்கிறார் ஏஞ்சலினா ஜோலி. லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற அமெரிக்கன் ஃபில்ம் இன்ஸ்டிடியூட்டின் திரைப்பட விழாவில் இந்தப் படம் முதலில் திரையிடப்பட்டது. விமர்சகர்களின் வரவேற்பு இந்தப் படத்துக்குப் பெரிதாகக் கிடைக்கவில்லை. இந்நிலையில் இப்படம் அமெரிக்காவில் நவம்பர் 13 அன்றும், இங்கிலாந்தில் டிசம்பர் 11 அன்றும் வெளியாகவிருக்கிறது.
பிரான்ஸில் 1970-களின் மத்தியில் நடைபெற்ற சம்பவங்களைச் சித்தரிக்கும் இந்தக் கதையைப் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஏஞ்சலினா ஜோலி எழுதியிருப்பதாகவும் தம்பதியருக்கிடையே ஏற்படும் உறவுச் சிக்கல் பற்றி இந்தத் திரைக்கதை அலசுவதாகவும் சொல்கிறார்கள்.
பிரிந்துவிடுவதென்று முடிவெடுத்தபின், தம் மண வாழ்வைக் காப்பாற்றும் இறுதி முயற்சியாக பிரான்ஸ் நாட்டின் ஒரு கடற்கரையோர நகரத்துக்குச் சுற்றுலா செல்லும் தம்பதியர், அங்கே எதிர்கொள்ளும் சம்பவங்களே திரைக்கதையாகியுள்ளன. ‘த ஒயிட் ரிப்பன்’ படத்தில் தான் மேற்கொண்ட சிறந்த ஒளிப்பதிவுக்காக ஆஸ்கர் விருது பெற்ற, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் கிறிஸ்டியன் பெர்கர் இப்படத்தைப் படம் பிடித்திருக்கிறார். படம் முழுவதும் பெரும்பாலான காட்சிகளில் இயற்கையான ஒளியையே கையாண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ல் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு 2014 நவம்பர் 10 அன்று நிறைவடைந்திருக்கிறது. ரோலண்ட் என்னும் அமெரிக்க எழுத்தாளர் கதாபாத்திரத்தில் கணவனாக ப்ராட் பிட்டும், வனெஸ்ஸா என்னும் நடன மங்கை கதாபாத்திரத்தில் மனைவியாக ஏஞ்சலினா ஜோலியும் நடித்திருக்கிறார்கள்.
இப்படம் தொடர்பாக இதுவரை வெளியான விமர்சனங்களைப் பொறுத்தவரை படத்துக்கு ஆதரவாக அவை அமையவில்லை. படத்தின் நீளம் மிகவும் அதிகம் எனவும், படம் பார்க்கும் ரசிகர்களைச் சோர்வையடையச் செய்யும் வகையில் காட்சிகள் அமைந்திருக்கின்றன எனவும் விமர்சகர்கள் சிலர் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆனால் ஹாலிவுட்டின் பிரபலமான தம்பதி பத்தாண்டுகளுக்குப் பின்னர் ஒன்றுசேர்ந்து நடித்திருப்பதைக் காண விரும்பும் ரசிகர்கள் ஒருவேளை திரையரங்கில் குவியலாம். ஆஸ்கர் விருது பெற்ற ஏஞ்சலினா ஜோலி என்னும் நடிகையின் ரசிகர்கள் படத்துக்குக் கைகொடுக்கலாம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago