புகைப்படம் எடுத்துக்கொண்டால் ஆயுள் குறையும் என்பது இரண்டு தலைமுறைக்கு முன்பு தமிழர்களிடம் நிலவிவந்த நம்பிக்கைகளில் ஒன்று. அதுதான் இந்தக் கதைக் கான ஆதார ஸ்ருதி. புகைப்படம் எடுத் துக்கொண்டால் நோய்வாய்ப்பட்டு இறந்துபோவது உறுதி என்று நம்புகிறார் கள் முண்டாசுப்பட்டி கிராமத்து மக் கள். ஆங்கிலேய ஆட்சியின்போது அந்தக் கிராமத்தில் நடந்த ஒரு அசம்பாவிதம்தான் இந்த நம்பிக்கைக் குக் காரணம். விளைவு அந்தக் கிராமத் தில் கேமராவைக் கண்டாலே தலை தெறிக்க ஓடுகிறார்கள்.
உயிரோடு இருப்பவர்களைப் படம் பிடிக்கக் கூடாது என்பதால் இறந்த பிறகு பிணத்தை அலங்கரித்து புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்வது அவர்கள் வழக்கம். அந்தக் கிராமத்தின் தலை வர் இறந்துபோக, அவரது பிணத் தைப் புகைப்படம் எடுக்க ஹாலிவுட் ஃபோட்டோ ஸ்டுடியோவின் உரிமை யாளர் கோபியையும் (விஷ்ணு) அவன் உதவியாளரையும் (காளி வெங்கட்) அழைக்கிறார்கள். இதற்கு முன்னால் ஒரு பள்ளிக்கூடத்தில் புகைப்படம் எடுக்கச் சென்றிருந்தபோது கலைவாணி (நந்திதா) என்னும் பெண்ணைச் சந்திக்கி றான் கோபி. கலைவாணி முண்டாசுப் பட்டியைச் சேர்ந்தவள்.
ஊர்த் தலைவர் உயிர் போகாமல் இழுத்துக்கொண்டிருக்க, அவர் இறக் கும்வரை அங்கேயே தங்கியி ருந்து புகைப்படம் எடுத்துத் தரும் படி ஊர்க்காரர்கள் வேண்டிக்கொள் கிறார்கள். கலைவாணியும் அந்த வீட்டில் தான் இருக்கிறாள். அந்த ஊரிலேயே தங்கும் கோபி, கலைவாணியிடம் தன் காதலைச் சொல்கிறான். அவளுக்கும் அவனைப் பிடிக்கிறது. ஆனால் அவ ளுக்கு ஏற்கனவே திருமணம் நிச்சயமாகி விட்டது.
ஊர்த் தலைவர் இறந்ததும் அவர் பூத உடலைப் புகைப்படம் எடுத்துவிட்டு ஸ்டுடியோவுக்குத் திரும்புகிறான் கோபி. ஆனால் எடுத்த புகைப்படம் சரி யாக விழவில்லை. அதற்குப் பதி லாக ஒரு தந்திரம் செய்கிறான். ஆனால் குட்டுவெளிப்பட்டு மாட்டிக் கொள்கிறான். ஊர்க்காரர்களின் கோபத்திற்கு ஆளாகி தண்டனை பெறும் கோபியும் அவன் நண்பர்களும் எப் படித் தப்பினார்கள், கோபியின் காதல் என்ன ஆயிற்று என்பதுதான் மீதிக் கதை.
இது படத்தின் பிரதான கதை. இத்துடன் கஒரு கிளைக் கதையும் உண்டு. வானத்திலிருந்து வந்து விழும் விண்கல் ஒன்றுக்கு ‘வான முனி’ என்று பெயர் வைத்து, குலதெய்வ மாக வழிபடுகிறார்கள் முண்டாசுப் பட்டிக்காரர்கள். இந்தக் கல்லில் விலை மதிக்க முடியாத பல கனிமங்கள் இருப்ப தால் அதைத் திருடி, வெள்ளைக் காரனிடம் விற்க கோமளப்பட்டி ஜமீன் தார் (ஆனந்த்ராஜ்) ஒரு பக்கம் காய் நகர்த்துகிறார்.
போதும் போதும் என்கிற அள வுக்கு நகைச்சுவைக் கண்ணி வெடிக ளைத் திரைக்கதையில் புதைத்துவைத் திருக்கிறார் அறிமுக இயக்குநர் ராம் குமார். எடுத்துக்கொண்ட கதைக்கு ஏற்ற திரைக்கதை, பாத்திர வார்ப்பு, காட்சி யமைப்பு ஆகியவற்றில் கவனம் எடுத்துக்கொண்டு நேர்த்தியாகச் செயல் பட்டிருக்கிறார்.
ஆனால் திரைக்கதை, கதைக்களம், வசனம் எல்லாவற்றிலும் சில பலவீனங் கள் வெளிப்படுகின்றன. விண்கல்லை வைத்துத் தொடங்கும்போது படம் பார்வையாளர்களை நிமிர்ந்து உட்கார வைக்கிறது. அதற்குப் பிறகு ஒரு மணி நேரம் தேமே எனப் போகி றது. கதை நடக்கும் 1982-ல் புகைப் படம் எடுப்பது தமிழ்நாட்டில் பரவ லாக நடைமுறையில் வந்துவிட்டது. நகைச்சுவைப் படத்தில் லாஜிக் அவசியம் இல்லை என்றாலும் இது போன்ற ஓட்டைகள் உறுத்துகின்றன. படம் சில இடங்களில் சீரியஸ் முகத்தைக் காட்டுகிறது. சில இடங் களில் அதைத் தவறவிடுகிறது.
கோமளப்பட்டி ஜமீனின் பூனை சூப், துருப்பிடித்த துப்பாக்கி முதல், ஊர்ப் பூசாரியின் கள்ளக் காதல் போன் றவை மிகப் பழைய ஆபாச நகைச் சுவைக் காட்சிகள். முனீஸ்காந்தாக ராமதாஸின் நடிப்பு ரசிக்கும்படி இருக் கிறது என்றாலும் அவரது கோணங் கித்தனங்களை எல்லாக் காட்சிகளிலும் ரசிக்க முடியவில்லை.
விஷ்ணுவுக்கு வலுவான வேடம் கிடைத்திருக்கிறது. மனிதர் ‘வெண் ணிலா கபடிக் குழு’வில் பார்த்தது போலவே இருக்கிறார். முக பாவனை களில் தேறுகிறார். குரல் நடிப்பில் கோட்டைவிடுகிறார். நந்திதா காட்சிக ளுக்கு மென்மையும் அழகும் சேர்க் கிறார். நுட்பமான சில பாவனைகளின் மூலம் கவனிக்கவைக்கிறார். கதாநாய கனின் நண்பனாக மிகவும் வித்தியாச மான தோற்றத்தில் வரும் வெங்கட்டின் நடிப்பில் நல்ல முன்னேற்றம் தெரி கிறது.
கலை இயக்குநர் கோபி ஆனந் தின் பணி மிகுந்த பாராட்டுக்குரியது. வீடுகளுக்கு 80களின் அடையாளங் களைக் கச்சிதமாகக் கொண்டுவந்துள் ளார். பி.வி. ஷங்கரின் ஒளிப்பதிவு கதையுடன் இணைந்து பயணப்பட்டுள் ளது. ஷான் ரோல்டனின் இசை திரைக் கதைக்குப் பொருத்தமானது. ‘ராசா மக ராசா’ என்னும் பாடல் காதுகளில் ரீங்கரிக்கிறது.
வழக்கமான சினிமாக் கதைக் களத்திற்கு மாற்றான ஒன்றைத் தேர்வுசெய்து நகைச்சுவை ததும்ப அதைக் காட்சிப்படுத்தியிருப்பதற்காக இயக்குநரைப் பாராட்டலாம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago