கோலிவுட் கிச்சடி

By ஆர்.சி.ஜெயந்தன்

ஜாக்சன் துரை வருகிறார்!

'பர்மா' படத்தின் மூலம் கவனிக்க வைத்த இயக்குநர் தரணிதரன். தற்போது சத்யராஜ், சிபிராஜ், பிந்து மாதவி, கருணாகரன், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் நடித்திருக்கும் ‘ஜாக்சன் துரை’ படத்தை 35 நாட்களில் இயக்கி முடித்திருக்கிறார். படப்பிடிப்புக்குப் பிந்தைய வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கும்போதே இந்தப் படத்தின் தமிழ்நாடு திரையிடல் உரிமையை ‘தேனாண்டாள் பிலிம்ஸ்’ கைப்பற்றியிருக்கிறது. சத்தியராஜைப் பேய் வேடத்தில் பார்க்க ரசிகர்களும் தயாராகிவிட்டார்கள்.

காதலும் கடந்து போகும்

அட்டகத்தி, பிட்சா, சூது கவ்வும், வில்லா, மூண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை என வரிசையாக வெற்றிப் படங்களைத் தயாரித்துவருபவர் சீவி குமார். இவர் கே. ஈ. ஞானவேல் ராஜாவுடன் இணைந்து பெரிய பட்ஜெட் படமொன்றைத் தயாரித்து வருகிறார். சூது கவ்வும் பட இயக்குநர் நலன் குமரசாமியின் இரண்டாவது படம் இது. முன்னணிக் கதாநாயகர்களின் படங்களுக்கு இணையாக இந்தப் படத்தின் தலைப்பையும் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். தற்போது தலைப்பை அதிகார பூர்வமாக அறிவித்துவிட்டார்கள். ‘காதலும் கடந்து போகும்’எனப் தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் நாயகன் விஜய் சேதுபதி. மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய ‘பிரேம்’ படம் வழியே புகழ்பெற்ற மடோனா கதாநாயகி. சந்தோஷ் நாராயணன் இசை. படம் பாதி முடிந்துவிட்டதாம்.

தடையின்றி ‘தனி ஒருவன்’

‘தனி ஒருவன்’ படத் தயாரிப்பு நிறுவனத்துக்குத் தயாரிப்பாளர் சங்கம் தடைபோட்டாலும் அது ஜெட்வேகத்தில் தனது பிற மொழிப் பயணங்களைத் தொடங்கிவிட்டது. இதன் தெலுங்கு மறுஆக்கத்தில் ராம்சரண் நடிக்க தெலுங்கு ‘கிக்’ படத்தை இயக்கிய சுரேந்தர் ரெட்டி இயக்குவது உறுதியாகியிருக்கிறது. ‘ ‘தனி ஒருவ’னின் இந்தி மறுஆக்கத்தை மோகன் ராஜாவே இயக்க இருக்கிறாரார். இந்தத் தகவலை மோகன் ராஜாவே உறுதி செய்திருக்கிறார்.

மீண்டும் கூட்டணி!

சென்னை 28 படத்தில் அறிமுகமான விஜய் வசந்துக்கு ‘நாடோடிகள்’ திருப்புமுனை தந்தது. அதன் பிறகு தனி நாயகனாகப் பயணம் தொடங்கியவருக்கு முதல் வெற்றியை ருசிக்க வைத்த படம் ‘என்னமோ நடக்குது’. அதை இயக்கியவர் ராஜபாண்டி. தற்போது மீண்டும் ராஜபாண்டியுடன் கூட்டணி அமைத்திருக்கிறார் விஜய் வசந்த். ‘அச்சமின்றி’ எனத் தலைப்பு சூட்டப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் விஜய் வசந்துக்கு ஜோடி சிருஸ்டி டாங்கே. “என்னமோ நடக்குது படத்தில் கமர்ஷியல் அம்சங்கள் அதிகமிருந்தாலும் கதையில் கவனம் வைத்தேன். இதில் கதையில் அதிக கவனம் வைத்திருக்கிறேன்” என்கிறார் இயக்குநர்.

வில் அம்பு நாயகி

காடு படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான புதிய கதாநாயகி சம்ஸ்கிருதி ஷெனாய். தற்போது இவர் ‘வில் அம்பு’ படத்தின் மூலம் தனது தமிழ் இன்னிங்ஸை உறுதிப்படுத்தியிருக்கிறார். காடு படத்தில் இவரது நடிப்பைப் பார்த்தே ‘வில் அம்பு’ படத்தில் வாய்ப்பு தந்திருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குநர் சுசீந்திரன். மோகினியாட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற சம்ஸ்கிருதிக்குச் சொந்த ஊர் கொச்சி. இரண்டு ஆண்டுகளுக்கு முன் மலையாளத்தில் அறிமுகமான இவர் நான்கு தென்னிந்திய மொழிகளிலும் பத்துப் படங்களில் நடித்து முடித்துவிட்டாராம்.

ஆட்டோ மூளை!

மூடர்கூடம் படத்தின் மூலம் கவனம்பெற்ற நான்கு பேரில் ஒருவர் ராஜாஜ் (வெள்ளைச்சாமியாக நடித்தவர்). தற்போது ‘சதுரன்’ என்ற படத்தின் மூலம் தனிக் கதாநாயகனாக களமிறங்கியிருக்கிறார். இவருக்கு ஜோடி வர்ஷா என்ற புதுமுகம். பியூட்டி பார்லரில் வேலை செய்யும் நாயகி வர்ஷா ஆட்டோ ஓட்டும் நாயகனைக் காதலிக்கிறார். மருத்துவ ரீதியான பிரச்சினை ஒன்றில் சிக்கவைக்கப்படுகிறாராம் நாயகி. பிரச்சினையின் வேரைப் புரிந்துகொண்டு அதிலிருந்து நாயகியை புத்திசாலித்தனமாக ஆட்டோ டிரைவர் எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதை என்கிறார் அறிமுக இயக்குநர் கே.ராஜீவ் பிரசாத். இவர் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவராம்.

களைகட்டும் கதிர்

‘மதயானைக் கூட்டம்’ படத்தில் நாயகனாக அறிமுகமானார் கதிர். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘கிருமி’ படத்துக்கு ரசிகர்கள், விமர்சகர்கள் ஆகிய இரண்டு தரப்பிலுமே வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் கதிருக்குப் பட வாய்ப்புகள் அதிகரிக்கின்றனவாம். இந்த நேரத்தில் அருண் கிருஷ்ணசாமி இயக்கத்தில் தான் நடித்திருக்கும் ‘ என்னோடு விளையாடு’ படம் வெளியானால் தனக்கு மேலும் ஒரு உடனடி வெற்றி என்று கூறிவருகிறாராம் கதிர். இந்தப் படத்தில் கதிருக்கு ஜோடி சஞ்சிதா ஷெட்டி. குதிரைப் பந்தயத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் இன்னொரு ஜோடி பரத் - ஷாந்தினி.

விமர்சனக் களம்!

சமீபத்தில் இசை வெளியீடு நடந்த 'மசாலா படம்' கண்டிப்பாக வலைப்பூ விமர்சகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் என்கிறார்கள். சமுக வலைத்தளங்களில் சினிமா விமர்சனம் செய்பவர்களுக்கும் ஒரு படக்குழுவுக்கும் இடையிலான போராட்டம்தான் கதைக்களமாம். தலைப்பு மசாலா படம் என்று இருந்தாலும் அக்டோபர் 9-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்துக்குச் சுத்தமான ‘யூ’ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. பாபி சிம்ஹா , மிர்ச்சி சிவா என்று பிரபலமான இரண்டு ஹீரோக்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தின் அறிமுக நாயகி லட்சுமி தேவிக்கு இப்போதே விசில் பறக்கிறது ரசிகர்கள் தரப்பில். தொகுப்பு: ரசிகா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்