சுமன்
இறந்துபோய்விட்ட அப்பாவை மாயாஜாலம் வாயிலாக மீட்க முயலும் இரண்டு சிறுவர்களின் சாகசத்தை சொல்ல வருகிறது ‘ஆன்வர்டு’ என்ற அனிமேஷன் திரைப்படம்.
‘எல்ஃப்’ (ELF) எனப்படும் ஜெர்மானிய புராணக்கதையின் பின்னணி, அதிசயங்கள், மந்திர தந்திரங்கள் ஆகியவற்றுடன் நவீனங்களின் அனைத்து சாத்தியங்களையும் இணைக்கிறது இப்படத்தின் கதைக் களம்.
பதின்மத்தை எட்டும்போது மகன்களுக்குக் கொடுக்க வேண்டும் எனத் தந்தை விட்டுச் சென்ற பரிசொன்றை இச்சிறுவர்களின் தாயார் பரிசாகக் கொடுக்கிறார். அதுவொரு கிளைத்த மாயக்கோல். அதன் மூலம் இறந்த தந்தையை 24 மணி நேரத்துக்கு உயிர்ப்பிக்க முடியும் என்று தெரிந்ததும் சகோதரர்கள் இருவரும் குதூகலம் கொள்கிறார்கள். ஆனால், இடையே சிறுசிறு தவறுகள் இடற, இடுப்புவரை மட்டுமே வளர்ந்த ‘தந்தை’ கிடைக்கிறார்.
மேல்பாதியை முழுமை செய்ய, சகோதரர்கள் இருவரும் சாகசப் பயணம் ஒன்றை மேற்கொள்ள வேண்டி வருகிறது. சவால்கள் நிரம்பிய அந்தப் பயணத்தின் இறுதியில் மகன்களின் முயற்சி சாத்தியமானதா, தந்தையை மீளப் பெற்றார்களா என்பதை நகைச்சுவை கலந்து சொல்கிறது ‘ஆன்வர்டு’ திரைப்படம்.
வால்ட் டிஸ்னியின் பிக்சார் அனிமேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் ‘ஆன்வர்டு’ படத்தை உருவாக்கி உள்ளது.
படத்தின் இயக்குநரான டேன் ஸ்கேன்லான், பால்யத்தில் தந்தையை இழந்தவர். தந்தையின் இழப்பு குறித்து தனது சகோதரருடன் பகிர்ந்துகொண்ட ஏக்கம் மிகுந்த கற்பனைகளில் இருந்தே ‘ஆன்வர்டு’ படத்தின் கதையை எழுதியிருக்கிறார்.
பிரதானக் கதாபாத்திரங்களுக்கு டாம் ஹாலண்ட், க்றிஸ் பிராட், ஜூலியா லூயிஸ், ஆக்டேவியா ஸ்பென்சர் உள்ளிட்ட பிரபலங்கள் பின்னணிக் குரல் தந்துள்ளனர். ‘ஆன்வர்டு’ திரைப்படம், மார்ச் 6 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago