பாசமான குடும்பம், நேசமான நண்பர்கள், வேலை வெட்டி இல்லாத சுகவாழ்வு.. இப் படிச் சுற்றும் சிம்பு, ஹன்சிகாவைப் பார்த்த தும் காதலில் விழுகிறார். காதலைச் சொல்லும்போது, அவர் ஏற்கெனவே முறைமாமனுக்கு நிச்சயிக்கப்பட்ட வர் என்பது தெரியவருகிறது. முறைமாமனோ ரவுடி களை வைத்துக்கொண்டு வட்டித் தொழில், கறாரான பண வசூல், கட்டப் பஞ்சாயத்து என வாழ்ந்து வரும் வணிக தாதா. இருந்தாலும் ஹன்சிகாவைப் பத்து நாட்களுக்குள் காதலில் விழவைக்கிறேன் என்று சபதம் எடுத்து சிம்பு செய்யும் ரவுசுகள்தான் ‘வாலு’.
படத்தில் சிம்புவை எல்லோரும் ‘ஷார்ப்’ என்கிறார் கள். சின்ன வயசிலிருந்தே துறுதுறுவென்று ஏதாவது செய்வாராம். அதை கேள்விப் படும் ஹன்ஸிகா ‘வாலு’ என்று செல்லமாகச் சொல்கிறார்.
சிம்புவை எப்படிக் காட்டினால் அவரது ரசிகர்களுக் குப் பிடிக்கும் என்பது இயக்குநர் விஜய்சந்தருக்குத் தெரிந்திருக்கிறது. சிம்புவின் நாயக பிம்பத்தைப் பெருக்கிக் காட்டும் மிகையான இடங்களிலும் சந்தானத்தால் கலாய்க்கப்படும் யதார்த்தமான இடங்களிலும் சிம்புவின் இமேஜ் எல்லைக்குள் இம்மி பிசகாமல் நடந்திருக்கிறார் இயக்குநர். ஆனாலும் சண்டைக் காட்சிகள் ரொம்பவே ஓவர். சிம்பு அடித்தால் யாரும் உடனே கீழே விழுவதில்லை. குறைந்தது 100 மீட்டர் தொலைவு பறந்து சென்றுதான் விழுகிறார்கள். சிம்பு ஓட்டும் பைக்கின் மீது கார் மோதி, பைக் சிம்புவுடன் அங்கப் பிரதட்சிணம் செய்கிறது. துளி சேதாரமில்லாமல் உடனே எழுந்து மீண்டும் பைக் ஓட்டுகிறார்!
கலகலப்புக்குப் பஞ்சம் இல்லை. ஆனால், கதை நகரும் விதம் அத்தனை விறுவிறுப்பாக இல்லை. காட்சிகளில் புதுமை இல்லை. ஹன்சிகாவைக் காதலிக்கவைக்கப் பல காட்சிகளை உருவாக்குகிறார். சில காட்சிகளே ரசிக்கும்படி இருக்கின்றன. உதாரணம் சிம்பு வின் வீட்டுக்கு ஹன்ஸிகா வருவது.
பாசமுள்ள குடும்பத்தின் சித்திரம் வழக்கமான அச்சிலேயே வார்க்கப்பட்டிருக்கிறது. அம்மா பையன், அண்ணன் தங்கை உறவுகள் அசல் டெம்ப்ளேட். இப்படிப்பட்ட படங்களில் அப்பா பையனைத் திட்டிக்கொண்டே இருப்பார். இதில் அது மட்டும் இல்லை. குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தால் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அன்பாக ‘அறிவுரை’ கூறும் அளவுக்கு பாசக்கார அப்பா. ஸ்ஸ்ஸ் அப்பா!
முறை மாப்பிள்ளையாக வரும் ஆதித்யாவுக்கு எக்கச்சக்க பில்டப். ஆனால், பின்னால் அதற்கேற்ற காட்சி எதுவும் இல்லை. ஹன்சிகாவை சிம்பு தன் வலையில் விழவைத்ததும் படம் சூடுபிடிக் கும் என்று பார்த்தால், சிம்புவிடம் வில்லன், ‘‘உன்னை எனக்கே பிடிக்கிறது. அவளுக்கு ஏன் பிடிக்காது’’ என்று சொல்லிவிட்டுப் போய் விடுகிறார்.
சிம்பு ஃப்ரெஷ்ஷாக, அதே நேரம் கொஞ்சம் பூசியதுபோல இருக்கிறார். தத்துவங்களை காமெடி யாகப் பேசுகிறார். சண்டைக் காட்சி, நடனத்தில் முழு வேகம். மற்ற காட்சிகளில் சற்றே சாவகாசம்.
அழகுப் பதுமையாக படம் முழுக்க ஆக்கிரமிக் கிறார் ஹன்சிகா. சின்னச் சின்ன முகபாவனைகளில் அழகாக அசத்துகிறார். சிம்பு, சந்தானம் செய்யும் சேட்டைகள், பேச்சுகள் அவ்வப்போது சிரிப்பை வரவழைக்கின்றன. இருந்தாலும் சந்தானத்தின் நடிப்பு மெருகு ஏறியிருப்பதைச் சொல்ல வேண்டும்.
சிம்புவின் தங்கையாக வரும் சஞ்சனா கவனம் ஈர்க்கிறார். விடிவி கணேஷ், சிம்புவுக்கு அப்பாவாக வரும் நரேன், அம்மாவாக வரும் ரஞ்சனி தங்களது கதாபாத்திரத்தைச் செவ்வனே செய்திருக்கின்றனர்.
தமன் இசையில் ‘ஓ மை டார்லிங்’ பாடல் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது. பின்னணி இசை சில நேரம் இரைச்சலாக இருந்தாலும் சிம்புவுக்கு ‘மாஸ்’ காட்ட உதவுகிறது. ‘தாறுமாறு’ பாடலில் சிம்பு பல கெட்டப் பில் வருவது ரசிகர்களுக்கு விருந்து. எம்ஜிஆராக வரும் தோற்றத்தில் கலக்கல். ஷக்தி யின் ஒளிப்பதிவில் காட்சிகள் புத்துணர்வுடன் உள்ளன.
‘வாலு’ செய்யும் சேட்டைகள் பெரிதாக ஈர்க்கவில்லை. மொத்தமாகச் சோடைபோகவும் இல்லை.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago