‘‘இதுக்கு முன் நடிச்ச படங்கள்ல அஞ்சலியை இப்படி பார்த்ததே இல்லையேன்னு எல்லாரும் பேசணும். அதுக்காகத்தான் ‘சகலகலாவல்லன்’, ‘மாப்ள சிங்கம்’ மாதிரியான படங்கள்ல என்னோடரோல்களை கிளாமர் ரீ - என்ட்ரியா செலக்ட் பண்ணினேன். ‘மறுபடியும் அங்காடித் தெரு அஞ்சலியத்தான் பார்க்கணும்னுசொன்னா, கார்த்திக்சுப்புராஜ்டைரக்ஷன்ல நான் நடிக்கிற ‘இறைவி’ படத்தோட ரிலீஸ் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’’ என்கிறார் அஞ்சலி.
தெலுங்கு தேசத்தில் தனக்கென தனியொரு இடத்தை பிடித்திருப்பவர், இங்கே நீண்ட இடைவெளிக்குப் பின் வெற்றிப் படங்களோடு அடியெடுத்து வைத்திருக்கிறார். அவருடன் பேசியதிலிருந்து…
தமிழ் ரசிகர்கள் மறந்துபோகும் அளவுக்கு இடைவெளி. அஞ்சலிக்கு என்னதான் ஆச்சு?
‘சித்ரங்கதா’, ‘சங்கராபரணம்’, ‘டிக்டே ட்டர்’, என்று அடுத்தடுத்து தெலுங்கில் என்னோட படங்கள் ரிலீஸ் ஆகப்போகுது. அதுக்கான ஷூட்டிங், டப்பிங்னு பரபரப்பா இருக்கேன். அதான் ஹைதராபாதிலேயே அதிகம் இருக்க வேண்டிய சூழ்நிலை. தமிழில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்துற ரோல்ஸ் எல்லாம் வேண்டாம். ஜாலியான ஒரு பெண்ணா நடிச்சு ரசிகர்களை சந்தோஷப்படுத்தணும். அந்த எண்ணம் இருந்த நேரத்திலதான் இயக்குநர் சுராஜ், ‘மாப்ள சிங்கம்’ படத்தோட இயக்குநர் ராஜசேகர் ரெண்டு பேரும் சொன்ன கதைகள் பிடிச்சு ஒத்துக்கிட்டேன். என்னோட கணக்கு தப்பாகல. ‘சகலகலா வல்லவன்’ ஹிட்.
ஒரு இடைவெளிக்குப் பிறகு நடிக்க வரும்போது இரண்டு நாயகி கதைகளை ஏன் தேர்ந்தெடுத்தீங்க? அதுல உங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும்ன்னு சொல்ல முடியாதே?
‘சகலகலாவல்லவன்’ கதையைக் கேட்டப்போ காமெடி, கிராமத்துப் பெண் என்று என் கேரக்டரோட அளவு தெரிஞ்சுதான் ஒப்புக்கிட்டேன். ‘மாப்ள சிங்கம்’ படத்தில வழக்கறிஞர் ரோல். துணிச்சலான பெண்ணா வருவேன். இந்தப் படத்துக்காக 6 கிலோ எடையைக் குறைச்சேன். இதுல கலகலப்பான கிளாமர் பண்ணியிருக்கேன். இப்போதைக்கு இது போதுமே.
இனி தொடந்து கமர்ஷியல் படங்களின் மேலதான் உங்க கவனமா?
நானே போய் இப்படிப்பட்ட படங்களில்தான் நடிப்பேன்னு எப்பவும் சொன்னதில்ல. தானா அமையும் கதைகள்ல எனக்கு பிடிச்சத மட்டும் தேர்வு செய்றேன். மறுபடியும் ‘கற்றது தமிழ்’, ‘அங்காடித் தெரு’ மாதிரியான படங்கள் கிடைச்சு நடிச்சா, ‘நல்லாத்தானே போய்கிட்டுஇருந்துச்சு.. என்ன ஆச்சு’ன்னு கேப்பீங்க. எந்த ரோல் பண்ணினாலும் ரசிகர்கள் ‘க்யூட்’ன்னு சொல்லணும். அது போதும்.
கார்த்திக் சுப்புராஜோட ‘இறைவி’ அனுபவம் எப்படியிருக்கு?
முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு முடிஞ்சாச்சு. துணிச்சலான ரோல். இந்தப் பட ரிலீஸுக்குப் பிறகு என்னோடரோல் பத்தி நிறையப் பேசுவீங்க. நானும் ரொம்ப நாள் பேசிகிட்டு இருக்கப்போறேன்.
அஞ்சலி அமெரிக்காவில் செட்டில் ஆகப்போவதாகவும், அங்குதான் அதிக நாட்கள் இருப்பதாகவும் தகவல் வந்ததே?
நானும் படிச்சேன். அப்போ நான் ஹைதராபாதில்தான் இருந்தேன். நடிகை என்றால் ஷூட்டிங்குக்குப் பல நாடுகள் போக வேண்டியிருக்கும். தெலுங்கில் தயாராகிவரும் ‘சித்தரங்கதா’ படத்துக்காக நியூயார்க் போனோம். பாதிப் படம் அங்கதான்எடுத்தாங்க. அடுத்து சிங்கப்பூர்ல ஷூட். இதை வைச்சுத்தான் நான் அமெரிக்காவுல செட்டில் ஆகப்போகிறேன், சிங்கப்பூரில் குடியேறப்போகிறேன்னு எழுதுறாங்க. இதுக்கெல்லாம் சண்ட போட முடியுமா?
படப்பிடிப்பில் அதிகம் கோபப்படுறீங்களாமே?
எனக்குக் கோபம் வந்தால் அதைப் பார்க்க நானே ஆவலாக இருக்கிறேன். ‘எப்பவும் சிரிச்சுகிட்டே இருக்கீங்களே… சிரிப்பைக் குறைச்சா அடுத்த காட்சிக்குப் போகலாம்’னு படப்பிடிப்பில் இயக்குநர்கள் செல்லமா திட்டுவாங்களே தவிர ஒருநாளும் நான் கோபப்பட்டு யாரும் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை.
மு.களஞ்சியம் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி நீங்கள் நடித்துத் தர வேண்டும் என்று கூறப்பட்ட ‘ஊர்சுற்றிப் புராணம்’ படப்பிடிப்புக்கு மீண்டும் போகும் எண்ணம் உள்ளதா?
இப்போ நடிக்கிற படங்களைப் பற்றி மட்டும் பேசலாம். மற்ற விஷயங்கள் இப்போ பேச வேண்டாம்ன்னு நினைக்கிறேன்.
நடிகைகளைக் குறிவைத்து மார்ஃபிங் குற்றங்கள் பெருகிவருவதைக் கவனித்தீர்களா?
இதைப் பற்றி சொந்தக் கருத்துன்னு நான் சொல்லி எல்லாம் மாறிடப்போகுதா என்ன? நான் இதுவரைக்கும் அதுமாதிரி விஷயங்களைப் பார்த்ததில்லை. பொதுவாக வீட்டுக்கு வெளியே பெண்கள் உடை மாற்றும் இடங்கள் பாதுகாப்பா இருக்கணும். தவறுகள் நடக்கும்போது அதுக்கான ஆக்ஷன் சரியாக எடுக்கணும்.
அடுத்து?
ராம் இயக்கத்தில் ‘தரமணி’ படத்தில் ஒரு சின்ன ரோல். ஆனா ரொம்ப அழகா இருக்கும். கன்னடத்தில் புனித் ராஜ்குமாருடன் நடிச்சு வெளிவந்த ‘ராணா விக்ரமா’ பெரிய ஹிட். அங்கயும் நல்ல கதைகள் வருது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மூன்று மொழிகள்லயும் மாறி மாறி நடிச்சுகிட்டு இருக்கேன். மூணு மொழிகளும் எனக்கு அத்துப்படி
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago