ஹாலிவுட் ஜன்னல்: இழப்பு தீட்டிய ஓவியம்

By செய்திப்பிரிவு

சுமன்

புலிட்சர் விருது பெற்ற ‘தி கோல்ட் பின்ச்’ (The Goldfinch) என்ற அமெரிக்கப் புதினம் அதே பெயரில் ஹாலிவுட்டில் திரைப்படமாகத் தயாராகி இருக்கிறது. 13 வயதுச் சிறுவன் ஒருவன் தனது தாயுடன் நகரின் அருங்காட்சியகத்தைப் பார்வையிடச் செல்கிறான். வண்ண ஓவியங்களின் மத்தியில் தாயின் கைப்பிடியிலிருந்து அவன் விலகியிருந்த நேரம், அந்த அருங்காட்சியகம் தீவிரவாதிகளின் குண்டுவெடிப்புக்கு ஆளாகிறது. சிறுவனின் தாய் உட்படப் பலர் பலியாகின்றனர். அவர்களில் இறக்கும் தறுவாயில் இருக்கும் ஒருவர் சுட்டிக்காட்டும் ஓவியத்தைச் சிறுவன் அங்கிருந்து களவாடி வீட்டுக்கு எடுத்து வந்துவிடுகிறான்.

ஆண்டுகள் நகர்ந்தோடுகின்றன. தாயின் இழப்பு பல வகையிலும் அவனைத் துரத்துகிறது. நண்பர்கள், பெண்கள், அடைக்கலம் தந்தவர்கள், மாஃபியாக்கள் எனப் பலர் அவன் வாழ்க்கையில் வந்து செல்கின்றனர். ஆனால் பயணம் நெடுகிலும் இனம்புரியாத குற்ற உணர்வுடன் அந்த ஓவியத்தை கைவிடாதிருக்கிறான். தாயின் நினைவுகள், சக மனிதர்களுடனான சஞ்சாரம், அந்த ஓவியம் ஆகியவற்றுடன் இடறியும், புதுப்பித்துமாகத் தொடரும் அவனது வாழ்வனுபவம், ‘தி கோல்ட் பின்ச்’ என்ற தலைப்பில் 2013-ல் நாவலாக வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

அமேசான் இணையதளத்தில் ஆண்டின் சிறந்த நாவல், 2014-ன் புனைவுக்கான புலிட்சர் விருது உட்பட பல விருதுகளைப் பெற்ற இந்த நாவல், தற்போது அதே பெயரில் திரைப்படமாகி உள்ளது. படத்தயாரிப்பில் அமேசான் ஸ்டுடியோவும் வார்னர் பிரதர்ஸும் முதல் முறையாக இணைந்துள்ளன. இணைய உரிமை அமேசானுக்கு, திரையரங்க உரிமை வார்னருக்கு என காலத்துக்கேற்ப ஒப்பந்தம் செய்துள்ளனர்.
சிறுவனின் இருவேறு வயதுத் தோற்றங்களில் ஓக்ஸ் ஃபெக்லி, ஆன்சல் எல்கார்ட் நடித்துள்ளனர். உடன் நிகோல் கிட்மேன், லூக் வில்சன், ஜெஃப்ரி ரைட் உள்ளிட்ட பலர் நடிக்க ஜான் க்ரவ்லி இயக்கி இருக்கும் ‘தி கோல்ட் பின்ச்’ செப்டம்பர் 13 அன்று திரைக்கு வருகிறது.

முன்னோட்டத்தைக் காண:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்