எஸ்.சுமன்
அனிமேஷன் வீடியோக்கள், காமிக்ஸ் புத்தகங்கள், வீடியோ விளையாட்டு, கற்றல் உபகரணங்கள் ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்திவந்த டோராவின் சாகசப் பயணங்கள், இம்முறை லைவ்-ஆக்ஷன் திரைப்படமாக ‘டோரா அன்ட் தி லாஸ்ட் சிட்டி ஆஃப் கோல்ட்’ என்ற தலைப்பில் வெளியாக இருக்கிறது.
முப்பது வயதுக்கு உட்பட்டவர்கள் ‘டோரா’ இன்றித் தங்களது குழந்தைப் பிராயத்தைக் கடந்திருக்க முடியாது.
தோழனான பேசும் குரங்குடன் காடு, மலை, அருவி என எல்லாத் திசைகளுக்கும் துணிந்து செல்வதும் குள்ள நரியின் சேட்டைகளைச் சமாளித்து பாலங்கள் பலவற்றைக் கடப்பதற்கான விடுகதைகளை விடுவிப்பதுமாக டோராவின் அனைத்துப் பயணங்களும் குழந்தைகள் விரும்பக்கூடியவை. வீடியோ பார்க்கும் குழந்தைகளைத் தனது பயணத்தில் பங்கேற்கச் செய்வதாலும் அவர்களின் அடிப்படைக் கற்றலுக்கு உதவுவதாலும் பெற்றோர் மத்தியிலும் டோராவுக்கு வரவேற்பு உண்டு.
டோரா இப்போது பதின்ம வயதுக்கு வளர்ந்திருக்கிறாள். அவள் புதிதாகச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளி, டோராவின் வாழ்வில் இதுவரை சந்திக்காத சாகசக் களமாக அமைகிறது. வழக்கம்போல் தனது புதிய வேட்டையைக் கானகங்கள் மத்தியில் தொடங்குகிறாள். இம்முறை தனது பெற்றோரைக் காப்பாற்றும் முயற்சியில் ‘இன்கா’ என்ற தொல்குடி மக்களின் தொலைந்துபோன தங்க நகரத்தைத் தேடி பரிவாரங்களுடன் பயணிக்கிறாள். வழியில் அவள் சந்திக்கும் புதிய சவால்களும் சாதனைகளுமாக டோராவின் புதிய சாகசப் பயணம் அமைகிறது.
டோராவாக இசபெல்லா மோனர் நடித்துள்ளார். எஜெனியோ டெர்பெஸ், மைக்கேல் பெனா உள்ளிட்டோர் உடன் நடிக்க, ஜேம்ஸ் பாபின் திரைப்படத்தை இயக்கி உள்ளார். டோராவின் சாகசப் பயணங்களை அனிமேஷன் தொடர்களை வெளியிட்டு வரும் நிக்கலோடியன், பாராமவுண்ட் உடன் இணைந்து திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் அடர் காடுகளில் படமான டோராவின் புதிய சாகசங்களை ஆகஸ்ட் 9 அன்று முதல் திரையரங்குகளில் காணலாம்.
முன்னோட்டத்தைக் காண:
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago