படிப்பை முடிக்கும் வரைதான் நடிப்பு: லஷ்மி விஸ்வநாத் நேர்காணல்

By மகராசன் மோகன்

மலையாளத் தொடர்களில் நாயகியாக நடித்துக்கொண்டே கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தவர் லஷ்மி விஸ்வநாத். மலையாள சின்னத்திரையில் பிரபல நடிகையான இவர், சிறிது இடைவேளைக்கு பிறகு வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘ஏழாம் உயிர்’ தொடரின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார்.

‘‘தமிழில் எனக்கு முதல் தொடர் ‘பாசமலர்’. இடையில் மலையாளத் தொடர்களில் பிஸியாகிவிட்டதால் நான் தமிழில் இருந்து விலகி இருந்தேன். தற்போது இந்தத் தொடர் மூலம் மீண்டும் வந்திருக்கிறேன்” என்று பேசத் தொடங்கினார் லஷ்மி விஸ்வநாத்.

‘பாசமலர்’ தொடருக்கு பின், தமிழில் முகம் காட்டாத நீங்கள் இந்த தொடரில் நடிக்க வந்தது எப்படி?

நான் மீண்டும் தமிழ் சின்னத் திரைக்கு வந்ததற்கு இயக்குநர் அழகர் சார்தான் காரணம். ‘பாச மலர்’ தொடரில் என்னை அறிமுகப் படுத்தியது இயக்குநர் அழகர்தான். சில பிரச்சினைகளால் அதில் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. அதன்பிறகு மலையாள தொடர்களில் கவனம் செலுத்தி வந்தேன்.

சமீபத்தில் இந்த ‘ஏழாம் உயிர்’ திகில் தொடர் பற்றி இயக்குநர் விளக்கி கூறினார். கதையின் போக்கு பிடித்துப்போன தால் உடனே நடிக்க ஒப்புக்கொண் டேன். இத்தொடரின் ஷூட்டிங் முடிந்து தூக்கப்போனால் நடித்த காட்சி கள் எல்லாம் கனவில் வந்து பயமுறுத்துகிறது. திகிலும், திரில்லருமாக இப்படித்தான் நடிக்க வேண்டும் என்ற உற்சாகமும் உண்டாகிறது.

‘திருமதி செல்வம்’ தொடரின் மலை யாள ரீமேக்கான ‘நிலவிளக்கு’ தொடர் உங்களுக்கு அங்கே ரசிகர்களை பெற்றுத்தந்ததாக சொல்கிறார்களே?

ஆமாம். இங்கே அபிதா நடித்த பாத்திரத்தில் அங்கு நான் நடித் தேன். என் மனதுக்கு மிகவும் பிடித்த பாத்திரம் அது. அந்த தொடர் தொடங்கியபோது பள்ளியில் படித் துக்கொண்டிருந்தேன். முடியும் போது இளங்கலை கல்லூரிப் படிப்பை முடித்து மேற்படிப்புக்கு மாறியிருந்தேன். கல்லூரி நாட் களைப்போல, அந்த தொடரில் நடித்த நாட்களும் மிக இனிமையானவை.

தமிழ் தொடர்களைப் பார்ப்பதுண்டா?

தமிழை முழுமையாக கற்றுக் கொள்ள தற்போது முயற்சி எடுத்து வருகிறேன். தமிழை தெளிவாக கற்றுக்கொண்டு பிறகு தமிழ் தொடர்களை பார்க்கலாம் என்று இருக்கிறேன்.

இவ்வளவு பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் படிப்பையும் விட்டுக்கொடுக்காமல் இருக்கிறீர்களே?

நான் எவ்வளவு தூரம் படிக் கிறேனோ, அதுவரைதான் நடிப்பும் என்று முடிவெடுத்திருக்கிறேன். அத னால்தான் ஒரு நேரத்தில் ஒரு தொடருக்கு மேல் ஒப்புக்கொள்வ தில்லை. தற்போது எம்.எட். ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருக்கிறேன். கல்லூரி பேராசிரியையாக வேண்டும் என்பது என் லட்சியம். சினிமா வாய்ப்புகள் துரத்தியும் சின்னத்திரைதான் நமக்கு ஏற்ற இடம் என்று முடிவெடுக்க படிப்புதான் முக்கிய காரணம். எதற்காகவும் படிப்பை விட்டுக்கொடுக்க மாட்டேன்.

படிப்பு, நடிப்பு இரண்டுக்கும் வீட்டில் எப்படி ஓ.கே வாங்க முடிந்தது?

ஆலப்புழா பக்கத்தில் உள்ள மாவேலிக்கராதான் என் சொந்த ஊர். கோட்டயம் பக்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில்தான் படித்து வருகிறேன். அம்மா, அப்பா, தம்பி என்று சின்ன குடும்பம் எங்களுடையது.

பிடித்த விஷயத்தை சிறப்பாக செய்து அதில் வெற்றியும் அடைந்தால் எல்லோர் வீட்டிலும் நிச்சயம் பச்சை கொடி காட்டத்தான் செய்வார்கள். நான் எனக்கு பிடித்ததை சிறப்பாகச் செய்வதால் என் விருப்பத்துக்கு யாரும் தடை நிற்பதில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்