அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த சாகசப் படங்களை எப்போதுமே திரைப்பட ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அதிலும் அறிவியல் புனைவு த்ரில்லர் படமாக இருந்துவிட்டால் அது தரும் சுவாரசியத்துக்கு ஈடு இணையே இல்லை என்பார்கள். அப்படியான சுவாரசியத்தை அளித்த, சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான டெர்மினேட்டர் திரைப்படம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த ஒன்று. அப்படத்தின் நாயகன் அர்னால்டு ஷ்வாஸ்நெகர் ரசிகர்களின் நாடி நரம்புகளை முறுக்கேற்றிய ஆதர்ச நாயகனாகப் போற்றப்பட்டார். அப்படத்தின் இமாலய வெற்றி காரணமாக டெர்மினேட்டர் வரிசைப் படங்களில் இதுவரை நான்கு வெளியாகி அனைத்தும் அமோகமாக வெற்றிபெற்றுள்ளன. இந்நிலையில் டெர்மினேட்டர் வரிசையில் ஐந்தாவது படமான டெர்மினேட்டர் ஜெனிசிஸ் வரும் ஜூலை 3-ம் தேதி வெளியாக உள்ளது. டெர்மினேட்டர் ஒரு தொடக்கம் என்னும் பெயரில் இது தமிழிலும் வெளியாகிறது.
உணர்ச்சியுள்ள மனிதர்களுக்கும் உணர்ச்சியற்ற இயந்திரங்களுக்குமான போரை மையமாகக் கொண்ட இப்படம், டெர்மினேட்டர் வரிசையின் முதல் இரண்டு படங்களை நினைவுக்குக் கொண்டுவரும் வகையிலான கதையமைப்பிலும் வண்ணத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு வித காலகட்டங்கள் இடம்பெறுகின்றன. ஒன்று 1984 மற்றொன்று 2029-ஐ ஒட்டிய காலகட்டம். இந்த இரண்டு காலகட்டங்களையும் வேறுபடுத்திக் காட்டுவதற்கு இரண்டு விதமான வண்ணக் கலவையைப் பயன்படுத்தியுள்ளார்கள். 1984-ம் வருட சம்பவங்களுக்குப் பச்சை, நீலம், கறுப்பு ஆகிய வண்ணங்களைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். எதிர்காலமான 2029 ஆண்டுக் காட்சிகள் ‘த டெர்மினேட்டர்: ஜட்ஜ்மெண்ட் டே’ படத்தைப் போன்ற நிறத்தில் இருக்கும். எதிர்காலத்துக்குள் நுழையும் பயணம் இந்தப் படத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான அம்சமாக இருக்கும் என்கிறார்கள்.
ஆலன் டெய்லர் இயக்கியுள்ள இப்படத்தின் காட்சிகள் திருப்தியையும் வித்தியாசமான அனுபவத்தையும் அளிக்கும் என நம்புகிறார்கள் ரசிகர்கள். இந்தப் படத்தின் வீடியோ முன்னோட்டத்தைப் பார்க்கும்போதே படம் குறித்த எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறுகிறது. “ஐ வில் பீ பேக்” என்று வசனம் பேசி ரசிகர்களைக் கவர்ந்த அர்னால்டு ஷ்வாஸ்நெகர் இப்படத்திலும் டெர்மினேட்டராக வந்து மிரட்டியுள்ளார். வயதானாலும் கட்டுக் குலையாத தோற்றத்துடன் காட்சியளிக்கும் அவருடன், ஜேஸன் க்ளார்க், எமிலா க்ளார்க், ஜெய் கர்ட்டனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க ஜேம்ஸ் கேமரூன் படம் போலவே படமாக்கப்பட்டிருக்கிறது என்றும் இதுவரையிலும் பார்த்து ரசித்திராத புதிய வகையிலான திரைப்பட அனுபவத்தைத் தரும் ஒரு படமாக இது அமையும் என்றும் ஸ்கைடான்ஸ் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து இதன் அடுத்த இரு பாகங்களும் தயாரிக்கப்பட உள்ளன.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago