ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘என் தங்கை’ தொடரின் மூலம் முதன்முறையாக சின்னத்திரையில் நடிக்க வந்துள்ளார் பாண்டியராஜன். அண்ணன் தங்கை பாசத்தை பிரதிபலிக்கும் இந்த தொடரின் பெரும்பாலான காட்சிகள் ஒகேனக்கல் பகுதியில் எடுக்கப்பட்டுள்ளன. இந்தத் தொடரில் ‘பரிசல்’ பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் பாண்டியராஜனை சந்தித்தோம்.
சின்னத்திரையின் ரியாலிடி நிகழ்ச்சி களில் கலந்துகொண்டிருந்த நீங்கள் எப்படி தொடரில் நடிக்க வந்தீர்கள்?
இந்த தொடரின் இயக்குநர் மங்கை அரிராஜன் என் நெருங் கிய நண்பர். கதையை எழுதிவிட்டு, ‘இதில் நான்தான் நடிக்க வேண்டும்’ என்று கேட்டார். அதனால் ஒப்புக் கொண்டேன். ஷூட்டிங்குக்கு வந்த பிறகுதான் சின்னத்திரை குழுவின ரின் உழைப்பு தெரிந்தது. என்னை தூங்கக்கூட விடுவதில்லை.
ஷூட்டிங் முடிந்தால் டப்பிங், அது முடிந்தால் மீண்டும் ஷூட்டிங் என்று பரபரப்பாக இருக் கிறேன். அண்ணன் தங்கை பாசத்தை பின்னணியாக கொண்ட தொடர் இது. நான் இதற்கு முன் சினிமாவில் ‘ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்’ படத்தில் இதே பின்னணியைக் கொண்ட கதையில் நடித்திருக்கிறேன். இருப்பினும் இந்தத் தொடர் எனக்கு புதிய அனுபவத்தை கொடுத்துள்ளது.
உங்களுக்கு பொருத்தமான காமெடி டிராக்கை விட்டு அண்ணன் - தங்கை பாசக் கதையை தேர்வு செய்தது ஏன்?
இன்றைய விறுவிறுப்பான வாழ்க் கைச் சூழலில் பாசம், நேசம் ஆகியவற்றுக்கெல்லாம் அதிக நேரத்தை செலவிட முடியாமல் இருக்கிறோம். அதனால் இந்த சூழலில் இந்தக் கதை சரியாக இருக்கும் என்று தேர்வு செய் தேன். அதே நேரத்தில் இதில் நகைச்சுவைக் காட்சிகளும் இருக் கும். நாகேஷின் படங்களில் நகைச் சுவைக்கு இடையே சென்டிமென்டும் இழையோடும். அப்படித்தான் இந்தத் தொடரை எடுத்து வரு கிறோம்.
‘அஞ்சாதே’ படத்தில் மிஷ்கின் உங் களை ஆக்ரோஷமான வில்லனாக நடிக்க வைத்தார். அதே பாணியை பின்பற்றியிருக்கலாமே?
விரைவில் வெளிவரவுள்ள ‘சாலையோரம்’ படத்தில் அது போன்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். தொடர்ந்து அது போல் அமைந்தால் பார்க்கலாம்.
‘ஆண் பாவம் 99%’ படத்தின் படப் பிடிப்பை எப்போது தொடங்கு கிறீர்கள்?
கதை 99 சதவீதம் தயாராகிவிட் டது. இறுதிகட்ட வேலைகளில் இருக் கிறேன். ‘ஆண் பாவம்’ படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தில் என் மகன் பிருத்வி நடிக்கிறார். பாண்டியன் கதாபாத்திரத்தில் வேறொரு நடிகர் நடிக்க உள்ளார். முந்தைய படத்தில் தண்ணீர் குடத் துக்குள் வாட்ச்சைப் போட்டு விளை யாடுவது போல் திரைக்கதை அமைத்திருப்பேன்.
இந்த காலகட் டத்தில் யாரும் வாட்ச் பார்த்து நேரத்தை சொல்வதில்லை. மாறாக செல்போன்தான் வாழ்க்கையாகி விட்டது. அதற்கேற்றவாறு காட்சியை மாற்றியுள்ளேன். இப் படி பல விஷயங்கள் புதிதாக இருக்கும். மேலும் திருட்டு விசிடி டிரெண்டையும் காமெடி கலந்து சொல்லப்போகிறேன். ‘ஆண் பாவம்’ படத்தின் தலைப்பை தவிர அந்தப் படத்துக்கும் இந்தப் படத்துக்கும் சம்பந்தமில்லை.
சின்னத்திரை நடிப்பு அனுபவம் எப்படி?
நம்ம உயரத்துக்கு சின்னத் திரைதான் பொருத்தமான இடம். நான் வேலை பார்க்க தொடங்கிய அந்த காலத்தில் இது இல்லை. இப்பவும் “ உங்கள் படங்களில் ‘ஆண் பாவம்’ ஹிட்டா, ‘கோபாலா கோபாலா’ ஹிட்டா” என்று கேட்டால், ‘கோபாலா கோபாலா’ படத்தைத்தான் சொல்வேன். இந்தப் படம்தான் சேட்டிலைட், சேனல் எல்லாம் வந்தபிறகு ரிலீ ஸாகி ஓடியது.
நான் சின்னத் திரையின் வழியே நிறைய கற்றுக் கொள்கிறேன். சினிமா காட்சி என்றால் இதை நாளை எடுத்துக் கொள்ளலாம் என்று தள்ளிப்போட முடியும். இங்கே அதற்கு வேலையே இல்லை. சுடச்சுட பத்திரிகை மாதிரி வேலை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது. 2 மணி நேர படத்தை 40 நாட்கள் படமாக்குகிறோம். இங்கே 2 மணி நேர தொடரை 4 நாட்களில் எடுக்க வேண்டியிருக்கிறது.
தமிழில் இப்போது பேய்ப்படங்கள் அதிகமாக வருகிறதே?
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய பேய் சினிமாவில் வந்துகொண்டேதான் இருக்கும். அவ்வப்போது அதன் வண்ணம் மாறும். நாம் பார்க்காத விஷயம் பேய். ஆனால் அதைப்பற்றி நிறைய கேள்விப்பட்டுக்கொண்டே இருக்கிறோம்.
அதை சினிமா சரியாக புரிந்துகொண்டு எடுத்து வைக்கிறது. அதனால் எப்போதும் சினிமாவில் பேய்ப்படங்கள் இருக்கவே செய்யும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago