சீனாவின் மறுபக்கத்தைச் சொல்லும் ‘த டச் ஆஃப் சின்’

By செய்திப்பிரிவு

சென்னை சர்வதேசப் பட விழாவின் நான்காவது நாளான இன்று மொத்தம் 31 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. சென்னை மாநகரின் முக்கிய மையங்களில் அமைந்திருக்கும் வுட்லாண்ட்ஸ், அபிராமி, ஐநாக்ஸ், கேசினோ, ஆகிய நான்கு திரைவளாகங்களில் உள்ள 8 திரைகள், அண்ணா சாலையில் அமைந்துள்ள ராணி சீதை அரங்கில் அமைக்கப்பட்டுள்ள ஒரு திரை உட்பட மொத்தம் 9 திரைகளில் தினசரி நான்கு காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன.

இன்று திரையிடப்படும் படங்களில் பிரான்ஸ், போலந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சார்ந்த படங்கள் அதிக அளவில் உள்ளன. இருப்பினும் உலக சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படங்களின் பட்டியலில் சீனப்படமான ‘ த டச் ஆஃப் சின்’ , ஹங்கேரிப்படமான ‘தி டோர்’, பிரெஞ்சுப்படமான ‘யங் அண்ட் ஃப்யூடிபுல்’ ஆகியவை இடம்பிடித்துள்ளன.

இவற்றில் சீன தலைமறைவு சினிமா இயக்கத்தின் இளம் இயக்குனர்களில் ஒருவரான ஜியா ஷாங்கே இயக்கியிருக்கும் 6 வது திரைப்படம் ‘தி டச் ஆஃப் தி சின். சீன கம்யூனிஸ்ட் அரசு, திரைப்படங்களுக்கு எதிரான கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தி வந்த நிலையில் ஷாங்கே தனது முதல் மூன்று படங்களை மறைமுகமாகவே எடுக்க வேண்டியிருந்தது. எனினும் இவர் தனது நான்காவது படத்தை அரசு அனுமதியுடன் இயக்கினார். இவர் இயக்கிய குறும்படங்க ளும் ஆவணப்படங்களும் உலக அளவில் பிரபலமடைந்து வருகின்றன. சர்வதேச திரைப்பட விழாக்களின் ராஜா என்று வர்ணிக்கப்படும் கேன்ஸ் பட விழாவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கும் இவரது படங்களில் ‘த டச் ஆஃப் சின்’ சிறந்த திரைக்கதைக்கான விருதைப் பெற்றுள்ளது.

இவரது முந்தைய படமான ‘ ஸ்டில் லைஃப்’ 2006 ஆம் ஆண்டு வெனிஸ் திரைப்பட விழாவின் மிக உயரிய விருதான ‘ கோல்டன் லயன்’ வென்றது. ‘த டச் ஆஃப் சின்’, நவீன சீனதேசத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை, வரலாற்றுடன் இணைத்து துணிச்ச லாக பேசும் படம். இந்த படத்தை வுட்லாண்ட்ஸ் திரையரங்கில் இன்று மாலை 4. 30 மணிக்கு பார்க்கலாம்.

ராணி சீதை அரங்கில் ‘காதல் மன்னன்’, ‘கும்கி’, ‘தங்க மீன்கள்’ ஆகிய தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்படு கின்றன. ஐநாக்ஸ் திரையரங்கில் இன்று காலை முதல் காட்சியாகத் திரையிடப்படும் ‘நாட் ய ஃபேரி டேல்’ என்ற பெங்காலி படத்துக்கும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்