நடக்கப்போவதை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் சக்தி பெற்ற ஒருவனை வைத்துச் சூதாட்டத்தில் இறங்கினால் எப்படி இருக்கும்? விபரீதமான இந்த ஆட்டம்தான் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள இரண்டாவது படம் ‘வை ராஜா வை’ படத்தின் மையம்.
கார்த்திக்கு (கௌதம் கார்த்திக்) சிறு வயதிலிருந்து ஒரு விசேஷத் திறன் உண்டு. அவன் மனதில் திடீரென்று ஏதாவது தோன்றும். அது அப்படியே நடந்துவிடும். இதனால் அவன் மன உளைச்சலுக்கு ஆளாகிறான். இந்தத் திறமையை மறக்க முயல்கிறான். அவன் வளர வளர அது கிட்டத்தட்ட மறந்துபோகிறது.
படிப்பு, வேலை, காதல், அக்காவின் திருமணத்துக்கான வேலைகள் என்று போய்க்கொண்டிருக்கும் கார்த்திக்கின் வாழ்க்கையில் அந்தத் திறன் மீண்டும் குறுக்கிடுகிறது. மீண்டும் மன உளைச்சலுக்கு ஆளாகிறான். கார்த்திக்கின் இந்தத் திறனை அறிந்த பாண்டா (விவேக்) என்னும் சக ஊழியர் அதை வேறு விதமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார். கிரிக்கெட் சூதாட்டத்தில் கார்த்திக்கை விவேக் இழுத்துவிட அது முதலில் லாபம் தந்தாலும் பிறகு பெரும் விபரீதத்தில் கொண்டுபோய் விடுகிறது. இதிலிருந்து கார்த்திக்கால் தப்ப முடிந்ததா என்பதே மீதிக் கதை.
கிரிக்கெட் சூதாட்டம் என்பது தமிழ் சினிமாவில் ஏற்கனவே கையாளப்பட்ட விஷயம்தான் என்றாலும் அதில் வருங் காலம் அறியும் திறனுள்ளவனின் கதை யைச் சேர்த்தது புதியது. வரப்போவதைத் தெரிந்துகொள்பவனைத் தன் கையில் போட்டுக்கொள்ள சூதாட்ட மாஃபியா கும்பல் செய்யும் வேலைகள் திரைக் கதைக்கு வேகம் சேர்க்கின்றன.
விவேக்கின் மறு பக்கம் மெல்ல மெல்ல வெளிப்படும் விதம் ரசிக்கும்படி உள்ளது. கார்த்திக் தன் விருப்பத்தை மீறிச் சூதாட்டத்தில் இறங்குவதும் சரி யாகச் சொல்லப்பட்டிருக்கிறது. கப்பலில் நடக்கும் சூதாட்டக் காட்சிகளும் சூதாட்டக் குழுவினரின் செயல்பாடுகளும் சுவாரஸ்யமாக உள்ளன.
கார்த்திக்கு தற்செயலாகத் திடீ ரென்று ஏதோ தோன்றும், அது வருங் காலத்தைச் சொல்வதாக இருக்கும் என்று முதலில் சொல்லப்படுகிறது. ஆனால் அவன் எதைத் தெரிந்துகொள்ள விரும்பு கிறானோ அதைத் தெரிந்துகொள்ளும் சக்தியாக அது எப்படி மாறுகிறது என்பது இயக்குநருக்கே வெளிச்சம். நடக்கவிருக்கும் ஓரிரு நிகழ்ச்சிகளைத் தற்செயலாக எப்போதாவது அறியும் சக்தி கொண்டவன், திடீரென்று துல்லியமான ஜோசியனாகிவிடுவது துளியும் நம்பும்படி இல்லை. படத்தின் பிரதான நெருக்கடியே இதை மையமாக வைத்துச் சுழலுவதால் இந்த ஓட்டை பெரிதாகவே உறுத்துகிறது.
காதலியைப் பணயம் வைத்து மிரட்டுவது, வில்லன் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு வருவது, வில்லன் துரத்தி வருவது என்று க்ளீஷேக்களின் குவியல் படத்தின் சுவாரஸ்யத்தைப் பெருமளவு குறைத்துவிடுகிறது.
விசித்திரமான சக்தியைச் சுமந்து கொண்டு திரிய வேண்டிய சங்கடத்தை கௌதம் கார்த்திக் நன்றாகவே வெளிப் படுத்தியிருக்கிறார். ப்ரியா ஆனந்துக்கு வழக்கமான காதலி வேடம். அவ்வப் போது எட்டிப் பார்க்கிறார். டூயட் பாடு கிறார். மொக்கை போடும் நண்பன் வேடத் தில் சதீஷ் கடமையைச் செய்கிறார். அப்பாவாக வரும் இயக்குநர் வஸந்த் தின் பாத்திரம் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. கலகலப்பாகத் தொடங்கி மெல்ல உருமாறும் விவேக்கின் பாத்திரம் சுவாரஸ்யமானது. விவேக் அதை நன்றாகக் கையாண்டிருக்கிறார். சில நிமிடங்களே வந்தாலும் தோற்றத்திலும் உடல் மொழியிலும் அசரவைக்கிறார் தாப்ஸி.
படத்தில் நடிப்பதற்கு அதிக வாய்ப்பு டேனியல் பாலாஜிக்கு. அதைச் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளார். கிளைமாக்ஸில் திடீர் பிரவேசம் செய்யும் தனுஷ் தன் அனாயாசமான நடிப்பால் அப்ளாஸ் அள்ளுகிறார்.
யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை அட்டகாசம். பாடல்களும் கேட்கும் படி இருக்கின்றன. வேல்ராஜின் ஒளிப் பதிவு படம் பார்க்கும் அனுபவத்தைச் செழுமைப்படுத்துகிறது. கப்பலில் நடக்கும் காஸினோ, சென்னைத் தெருக் களில் இரவில் நடக்கும் நிகழ்வுகள் ஆகியவை அந்தந்தக் காட்சிகளுக்கான யதார்த்தத்துடன் அழகாகப் படமாக்கப் பட்டுள்ளன. வி.டி. விஜயனின் எடிட்டிங் படத்தை வேகமாகக் கொண்டுசெல்ல உதவுகிறது.
காட்சிகளை ஸ்டைலிஷாக எடுப்பதி லும் படத்தை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்வதிலும் காட்டிய கவனத்தை இயக்குநர் ஐஸ்வர்யா திரைக்கதையை வலுவாக்குவதிலும் காட்டியிருக்கலாம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago