சென்னை பட விழா: டிச.12 - படங்களின் முன்னோட்டச் சுருக்கம்

By அசோக் வர்தன் ஷெட்டி

11வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 12 முதல் 19 வரை நடைபெறுகிறது. திரைப்படங்களுக்கான கதைச்சுருக்கம் நமது ' தி இந்து’ இணையதளத்தில் பதிவேற்றப்படும்.

நாள் : 12. 12. 2013

திரையரங்கம் : Woodlands

நேரம் : 11:00 AM

திரைப்படம் : DISCIPLE

இந்த வருட ஆஸ்கர் ரேசில் இருக்கும் ஃபின்லாந்து திரைப்படம்.

1939. பால்டிக் கடல் பகுதியில் ஒரு தீவு. அங்கே ஒரு லைட்ஹவுஸ். அதன் பொறுப்பளார் ஹாசல்பாண்ட. அந்தத் தீவில் அவர்தான் நம்பர் 1. அவருடைய வேலைக்கு அவ்வளவு மரியாதை. கார்லுக்கு அவரிடம் சேர்ந்து வேலை கற்றுக் கொள்ள ஆசை. கூடவே ஹாசல்பாண்ட் போல தானும் பெரிய ஆள் ஆக வேண்டும். ஹாசல்பாண்டுக்கு ஒரு மகன். மகா முரடன். கோபக்காரன். சீடன் கார்லும் மகனும் நண்பர்கள் ஆகின்றனர். தன்னிடத்துக்கு தகுதியானவன் கார்ல்தான் என்று ஹாசல்பாண்ட் முடிவெடுக்க.. மகன் விட்டுத்தர மறுக்கிறான். சீடனா? மகனா? நண்பர்கள் என்ன ஆனார்கள். உல்ரிகா பெங்க்ட்ஸ் இயக்கிய படம்.

 

 

நேரம் : 2:00 pm

 

 

திரைப்படம் : NO

சர்வாதிகார ஆட்சி நடக்கும் நாடுகளில் திடீரென தேர்தல் அறிவிப்புகள் வரும். நாட்டில் ஜனநாயகம் மலரும் என அதிபர் அறிவிப்பார். அதைத் தொடர்ந்து நடைபெறும் தேர்தல்கள் எப்படிப்பட்டவை?. சர்வாதிகாரியின் தில்லாலங்கடி எப்படி இருக்கும்? இதை விளக்கும் படம். சிலியின் பிரபல எழுத்தாளர் எல் ப்லீபிஸ்சிடோ எழுதி மேடையேற்றப்படாத நாடகமே படத்தின் கதை. 15 வருட கடும் மிலிட்டரி ஆட்சிக்குப் பிறகு சிலியின் டிக்டேடர் தேர்தலை அறிவிக்கிறார். எதிர்கட்சிகளை உளவு பார்த்தும் பணநெருக்கடி கொடுத்தும் சதிவலை பின்ன.. நாயகன் ரேணி அந்தச் சதிகளை முறியடிக்க களம் இறங்குகிறான். 'மோட்டார் சைக்கிள் டயரீஸ்' படத்தில் சே'வாக நடித்த காயல் கிரேசியா பெர்னால் இப்படத்தில் ரேணியாக மிரட்டியுள்ளார். பாப்லோ லாரெய்ன் இயக்கிய சிலி நாட்டுத் திரைப்படம் இது.

 

 

* * * * * * * * * *

 

 

 

 

திரையரங்கம் : Woodlands Symphony

 

 

நேரம் : 10.45 am

திரைப்படம் : Shal ( The Old Man )

எர்னெஸ்ட் ஹெமிங்க்வேக்கு நோபல் பரிசு வாங்கித் தந்தது அவருடைய 'கடலும் கிழவனும்'. இந்தக் காவியம் இப்போது மீண்டும் ரீமேக் மற்றும் ரீமிக்ஸ் படமாக மறு அவதாரம் எடுத்திருக்கிறது. இங்கே கடலுக்கு பதில் பாலைவனம்.. திமிங்கலம், சுறாக்களுக்கு பதில் ஓநாய்கள். கிழவனுக்கு பதில் காசிம் என்கிற நாடோடி. மந்தைகளோடு மேய்ச்சலுக்கு போனவன், ஓநாய்கள் சூழ்ந்து உள்ள பாலைவனத்தை விட்டு தப்பித்தானா? கசகஸ்த்தான் நாட்டின் இப்படம் இந்த வருட ஆஸ்கர் பந்தயத்தில் உள்ளது.

 

 

நேரம் : 1.45 pm

 

 

திரைப்படம் : Hush.. Girls don't Scream

இந்த வருட கோவா திரைப்பட விழாவில் கலக்கிய படம். இன்னும் இரண்டு மணி நேரத்தில் ஷிரின்னுக்கு திருமணம். ஷிரின் ஒரு மாதிரி.. எப்போதும் மூடியாக இருப்பாள். கல்யாணப் பெண்ணை அழைக்க வருபவர்களுக்கு அதிர்ச்சி. மணமகள் கையில் ரத்தக் கறை. கேட்டால், ஒருவனை கொன்றுவிட்டேன் என்கிறாள். கண்ணெதிரே பலாத்காரம் செய்தவனுக்கு அவள் தந்த பரிசு அது. தன் சிறு வயதில் அப்படி சீரழிக்கப்பட்டவள்தான் அவளும். ஷிரினின் கழுத்துக்கு தூக்குக் கயிறு தயாராகிறது. அந்த சிறுமியின் பெற்றோர் வாய் திறந்தால் ஷிரின் தப்பிக்கலாம். ஷிரின் என்ன ஆனாள்?. இயக்கம்: ஈரானிய பெண் இயக்குனர் பௌரன் தெரக்ஷந்தே.

 

 

* * * * * * * * * *

 

 

 

 

அரங்கம் : RANI SEETHAI HALL

 

 

நேரம் : 11 am

திரைப்படம் : Blue Brave: The Legend of Formosa in 1895

சீ-யூ ஹங் இயக்கிய தைவான் நாட்டுப் படம். தைவான் நாட்டில் நடந்த ஒரு புரட்சிதான் கதை. 1895ல் ஜப்பான் தைவானை விழுங்கப் பார்க்க, எதற்கு சண்டை.. பணிந்து போய் விடலாமே என்கிற முடிவில் தைவான்.

ஒரு சிறிய கிராமத்தில் மட்டும் முணுமுணுப்பு.. எதிர்ப்புக்குரல். ஜப்பான் ராணுவ பூட்ஸ்கள் அந்த கிராமத்தை முற்றுகையிட, போராட்டக்காரர்கள் தெறித்து ஓடிப்போகின்றனர். ஆனால் அதில் மூன்று இளைஞர்களுக்கு மண்டியிட மனமில்லை. ஒரு கொரில்லா படையை அமைக்கின்றனர். கிராமத்தையும் நாட்டையும் மீட்கப் போராடுகின்றனர். தேசப்பற்றை ஏற்படுத்தும் காவியம்.

 

 

நேரம் : 2.00 pm

 

 

திரைப்படம் : Chinese Zodiac

வழக்கம் போல 'இதுதான் ஜாக்கியின் கடைசி ஆக்சன் படம்' என்கிற அறிவிப்புடன் வெளியாகியிருக்கிற படம். ஜாக்கி சான் இயக்கி, நடித்த 'ஆர்மர் ஆஃப் காட்' சீரிஸின் மூன்றாம் பாகம்.

1800ல் திருடப்பட்ட சீனாவின் தொன்ம வெண்கல மிருகத் தலைகளை மீட்க வேண்டிய பொறுப்பு ஜாக்கி அண்ட் கோவுக்கு. அவர்களுக்கு எதிராக ஒரு வில்லன் கும்பலும் களம் இறங்க.. நடுக்கடல், அடர்ந்த காடு, பூமிக்கு மேல் 18,000 அடி, அந்தரம், அண்டர்கிரவுண்ட் என்று அதிரும் ஆக்சன் மயம். பல காட்சிகள் பல படங்களை ஞாபகப்படுத்தினாலும்.. ஜாக்கிக்காக கைதட்டி ரசிக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்