நேர்காணல்: என்னோட பேரே கதை சொல்லும்!

By மகராசன் மோகன்

’அட்டகத்தி’ படத்தில் பூர்ணிமாவாக வந்து தனது ஓரவிழிப் பார்வையால் கல்லூரி மாணவர்களின் மனதில் ஜலதரங்கம் வாசித்தவர் நந்திதா. பக்கத்து வீட்டுப் பெண்ணைப் போன்ற பாந்தம், கன்னக்குழி விழும் பளீர் சிரிப்பு, பேச ஆரம்பித்தால், நீண்ட நாள் பழகிய ஒரு தோழி போன்ற நட்புணர்வு என்று ஆச்சரியப்படுத்துகிறார். பாவாடை தாவணியில் மட்டுமல்லாமல் நவீன ஆடைகளிலும் மின்னலடிக்கிறார்.

‘முண்டாசுப்பட்டி’, ‘அஞ்சல’, ‘இடம் பொருள் ஏவல்’, ‘ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி’ என்று அரை டஜன் படங்கள் கைவசம் உள்ளன, ‘ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி’ படத்தின் போட்டோ ஷூட்டுக்காகச் சென்னை வந்திருந்தவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து...

தொடர்ந்து காமெடிப் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறீர்களே?

காமெடியை விரும்பாதவர்கள் யாராவது உண்டா? அழகான ஹீரோயின்கள் டூயட் பாட மட்டும்தானா? அது வழக்கமான ஒன்றுதானே? நந்திதாவை காமெடி ஹீரோயினாகப் பார்க்கும் ஆடியன்ஸ் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கட்டும் .

‘நந்திதா இந்த கேரக்டருக்கு சூட் ஆவா’ என்று இயக்குநர்கள் நினைக்கிறார்கள். அவர்களுக்குத்தான் நன்றி சொல்லணும். இப்போது நீங்கள் சொல்லிவிட்டீர்களா! இனிமே எனக்கு சீரியஸ் கேரக்டர்களாக வந்துவிடப்போகிறது.

எந்த மாதிரியான கேரக்டர்களில் இயல்பாக உங்களால் நடிக்க முடிகிறது?

கேள்வியை வேறுமாதிரி கேட்பதாக நினைப்போ?

இப்போ வரைக்கும், ஏழு, எட்டு படங்களைக் கடந்தாச்சு. எல்லா கேரக்டரும் சிறப்பா அமைய வேண்டும் என்ற ஆசையோடு மட்டுமே வேலை பார்த்திருக்கேன். பெரும்பாலும் இயல்பாகவே கேரக்டரா இருந்தால்தான் நம்மளை அறியாமல் அதில் நடிக்க முடிகிறது. அல்லது அந்த கேரக்டர் காமெடியா இருந்தாலும் அதுல கொஞ்சம் பெயின் இருக்கனும். இப்போ உள்ள சூழலில் எனக்குக் கிடைச்ச வெரைட்டியான கேரக்டர்ஸ் மாதிரி எல்லா ஹீரோயின்ஸுக்கும் அமைஞ் சுருக்குமான்னு தெரியல. அதே மாதிரி இது என்னோட ட்ரீம் கேரக்டர், அதுல பாட்டி ஆகுறதுக்குள்ள நடிச்சுத்தான் ஆவேன்னு அடம்பிடிக்கவும் மாட்டேன்.

‘முண்டாசுப்பட்டி’ படத்தில் உங்களுக்கு என்ன கேரக்டர்?

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய்’ படத்துக்கு அப்புறம் எனக்கு மனசுக்கு ரொம்பப் பிடித்த கேரக்டர். ‘அட்டகத்தி’ படத்தில பாவாடை தாவணியில் வந்தமாதிரிதான் இதிலயும். அதில வந்த மாதிரியே இதிலும் ஸ்கூல் படிக்கிற பெண்ணா வர்றேன். என்னோட கேரக்டர் பேரு கலைவாணி. அதுவே ப்ரீயட் சொல்லுது பாருங்க!

உங்க ஹீரோக்கள் விஜய் சேதுபதி, விமல், விஷ்ணு, பரத் இவர்களில் ரொம்ப வாலுத்தனமான ஆள் யார்?

எல்லோருமே எனக்கு குட் ஃபிரண்ட்ஸ். நல்ல திறமைசாலிங்க. இவங்க ஒவ்வொருத்தர் கிட்ட இருந்தும் ஆக்டிங் பத்தி ஏதாவது புதுசா ஒரு விஷயத்தைக் கத்துக்க முடியுது. விஷ்ணு ரொம்பவே யதார்த்தமானவர், விமல், பரத் ரெண்டு பேரும் ஷூட்டிங் ஸ்பாட்ல அடிக்கிற காமெடிக்கு அளவே இருக்காது. விஜய் சேதுபதியோட இப்போ எனக்கு ரெண்டாவது படம். அப்பவும் சரி, இப்பவும் சரி கேமரா ஏரியாவுக்குள் வந்துட்டா அப்படியே அந்த கேரக்டருக்கான வேலையைத் தவிர வேறு எந்த ஆங்கிள்லயும் அவரை பார்க்க முடியாது. இப்படி ஒவ்வொருத்தரும் ஒரு டைப்.

என்னோட பேரே கதை சொல்லும்!

எல்லோருமே எனக்கு குட் ஃபிரண்ட்ஸ். நல்ல திறமைசாலிங்க. இவங்க ஒவ்வொருத்தர் கிட்ட இருந்தும் ஆக்டிங் பத்தி ஏதாவது புதுசா ஒரு விஷயத்தைக் கத்துக்க முடியுது. விஷ்ணு ரொம்பவே யதார்த்தமானவர், விமல், பரத் ரெண்டு பேரும் ஷூட்டிங் ஸ்பாட்ல அடிக்கிற காமெடிக்கு அளவே இருக்காது. விஜய் சேதுபதியோட இப்போ எனக்கு ரெண்டாவது படம். அப்பவும் சரி, இப்பவும் சரி கேமரா ஏரியாவுக்குள் வந்துட்டா அப்படியே அந்த கேரக்டருக்கான வேலையைத் தவிர வேறு எந்த ஆங்கிள்லயும் அவரை பார்க்க முடியாது. இப்படி ஒவ்வொருத்தரும் ஒரு டைப்.

முதலில் மனிஷா யாதவ் ஒப்பந்தமான ‘இடம் பொருள் ஏவல்’ படத்தில் அவர் இடத்துக்கு நீங்க எப்படி வந்தீங்க?

அது எதிர்பாராமல் கிடைச்ச படம். மனிஷா நடிப்பதாக இருந்த விஷயம் தெரியும். ஏன் விலகினாங்கன்னு எனக்குத் தெரியாது. நானும் டைரக்டர் கிட்ட கேட்டுக்கல. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கணும்னு கூப்பிட்டாங்க. சீனு ராமசாமி டைரக்‌ஷன்னு சொன்னாங்க. நான் கதையெல்லாம் கேட்கல. ஓகே சொல்லிட்டேன். கொடைக்கானல் பகுதியில் உள்ள ஒரு ஏழைப் பெண் கேரக்டர்ன்னு ஷூட்டிங் போனப்புறம் தெரிஞ்சுகிட்டேன். என்னோட ஸ்கின் டோன் எல்லாம் ரொம்பவே மாறியிருக்கும். கடினமான கேரக்டர். வசனம் எல்லாம் ரொம்பவே கஷ்டம். ஒவ்வொரு வார்த்தையோட அர்த்தத்தையும் தெரிஞ்சுகிட்டு பேசி நடிக்கிறேன். நானே தமிழ்ல இந்தக் கேரக்டருக்குக் குரல் கொடுக்கணும்னு விரும்புறேன். அதுக்கு டைரக்டர் அனுமதி தரணும். இப்போ என்னை ஹேய் நந்திதான்ணு நீங்க செல்லமா கூப்பிட்டா.. அந்தப் படம் வந்ததும் டேய்ய்.. நந்திதான்னு கொஞ்சம் அழுத்திக் கூப்பிடுவீங்க. அந்தக் கேரக்டர் அவ்வளவு ரஃப்பா இருக்கும்.

இவ்ளோ பிஸியிலும் எம்.பி.ஏ படிக்கிறீங்களாமே?

ஆமா! சினிமாவுக்கு வந்ததே எதிர்பாராமல் நடந்ததுதான். சின்ன வயசுல இருந்து மாடலிங், டான்ஸ் எல்லாம் ரொம்ப இஷ்டம். ஆனா அம்மா படிப்புதான் முக்கியம். மற்ற ஆர்வம் எல்லாம் அடுத்து பார்த்துக்கலாம்னு சொல்வாங்க. அவங்க இப்போ என்னோட விருப்பத்துக்கு ஒப்புக்கொண்டதும் தொடர்ந்து படிப்பை மிஸ் பண்ணாமப் படிக்கிறேன். இப்போ எம்.பி.ஏ. முதல் ஆண்டு ரெகுலர்ல தான் படிக்கிறேன். எவ்வளவு பெரிய ஸ்டாரா ஆனாலும் படிப்பை விடமாட்டேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்