திரை நூலகம்: எல்லைகளற்ற வெளியில் உருவான படங்கள்

By ரிஷி

திரைப்பட உலகுக்குச் செல்ல விழையும் இளைஞர்கள் முன்னர் கவிதையோ கதையோ எழுதினார்கள். தொழில்நுட்பம் பெருகி வழியும் இந்தக் காலத்தில் அவர்கள் குறும்படம் எடுக்கிறார்கள். சுதந்திரமான படைப்பாளிகளுக்கு எல்லையே இல்லாத சுதந்திரத்தை அளிக்க வல்லவை குறும்படங்கள் என்னும் வெளி. ஆனால் குறும்படப் படைப்பாளிகள் அதன் முழு வீரியத்தை உணர்ந்ததாகத் தெரியவில்லை.

ஆனாலும் குறும்படங்கள் வழியாக நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ், பாலாஜி மோகன் போன்ற இயக்குநர்கள் முழு நீளப் படம் இயக்கும் வாய்ப்பைப் பெற்றார்கள். இது குறும்பட முயற்சிகளுக்கு உத்வேகம் அளித்துவருகிறது. இது ஒரு புறம் என்றால் தனித்தனியான முயற்சிகளின் பயனாக உருவாக்கப்படும் எவ்வளவோ குறும்படங்கள் இன்னும் சரிவரக் கவனிக்கப்படாத நிலையே இங்கு நிலவுகிறது.

தொலைக்காட்சி அலைவரிசைகளில் குறும்படங்கள் தொடர்பான நிகழ்ச்சிகள் வலம்வரத் தொடங்கிய பின்னர் அவற்றுக்கான இடம் ஓரளவு கிடைத்துவருகிறது. தமிழில் உலக சினிமா பற்றிய நூல்கள் அதிக அளவில் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன.

ஆனால் ஆவணப் படங்கள் பற்றியோ குறும்படங்கள் பற்றியோ தேவையான கவனம் உருவாக்கும் வகையில்கூட நூல்கள் எழுதப்படுகின்றனவா என்பது கேள்விக்குறியே. இந்த நிலையில் தமிழில் வெளியாகியுள்ள குறும்படங்கள் தொடர்பான விமர்சனத் தொடரை குங்குமம் இதழில் தமிழ் ஸ்டுடியோ அருண் எழுதினார். அதன் தொகுப்பே பேசும் சித்திரங்கள் எனும் இந்நூல்.

பாலுமகேந்திரா, வஸந்த், பீ.லெனின் உள்ளிட்ட பிரபலமான இயக்குநர்கள் முதல் அதிகம் அறியப்படாத இயக்குநர்கள்வரை இயக்கிய குறும்படங்கள் இந்நூலில் விமர்சிக்கப்பட்டுள்ளன. குறும்பட அலசலுடன், இயக்குநர், படம் ஆகியவை குறித்த விவரங்களும் தரப்பட்டுள்ளன. யூடியூபில் கிடைக்கும் படங்கள் பற்றிய தகவலும் உள்ளது. ஆனால் நூலின் தொடக்கத்தில் உள்ளடக்கம் இல்லாதது ஒரு குறையாகத் தெரிகிறது. குறும்படங்களைப் பரவலாக அறிமுகப்படுத்தும் நோக்கத்திலான இந்நூல் குறும்படமெடுப்பவர்களுக்குப் பெரிய அளவிலான உற்சாகத்தைத் தரக்கூடியதாக உள்ளது.

பேசும் சித்திரங்கள்

தமிழ் ஸ்டுடியோ அருண்

சூரியன் பதிப்பகம், 229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை-4

விலை ரூ. 150

உதவி இயக்குநராக ஒரு வாய்ப்பு

தமிழில் கொண்டாடப்படும் திரைப்படங்களின் உருவாக்கத்தின் பின்னணியில் முகம் தெரியாத எத்தனையோ உதவி இயக்குநர்கள் இருக்கிறார்கள். அவர்களது முகம் அடையாளம் காணப்படும் எனும் நம்பிக்கையில் முகவரிகளைத் தொலைத்தவர்கள் ஏராளம். என்றபோதும் நம்பிக்கையைவிடாத இளைஞர்கள் முட்டி மோதிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

பிரபல இயக்குநர் ஒருவரிடம் உதவி இயக்குநராகிவிட்டால் போதும் எனும் முனைப்புடன் தினந்தோறும் ஓர் இளைஞர் சென்னையை நோக்கிப் படையெடுத்துக்கொண்டுதான் இருக்கிறார். அவர்களுக்கான கையேடாக, கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் எனும் நூலை ஆர்.எஸ்.அந்தணன் உருவாக்கியுள்ளார். நியூதமிழ் சினிமா.காம் எனும் இணையதளத்தில் இவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.

திரையுலகில் நடந்த பல நிகழ்வுகளை விளக்கி அதன் மூலம் உதவி இயக்குநரின் முக்கியத்துவத்தையும் அந்தப் பணியின் சவால்களையும் விளக்கியுள்ளார் அந்தணன். எழுத்தாளர் பாலகுமாரன் வசனம் எழுதிய ரஜினியின் பாட்ஷா படத்தில் நான் ஒருதடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி என்னும் வசனத்தை எழுதியது திருப்பதிசாமி எனும் உதவி இயக்குநர் என்கிறார் நூலாசிரியர்.

இப்படிப் பல தகவல்கள் புத்தகம் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. என்ன ஏதென்றே புரியாமல் பல இயக்குநர்களது அலுவலகத்தை முற்றுகையிடும் முன்னர் இந்த நூலை ஒரு முறை படித்தால் உதவி இயக்குநராக விரும்பும் இளைஞருக்கு ஒரு தெளிவு கிடைக்கக்கூடும். இந்நூலின் வேட்கையும் அதுவாகவே இருக்கும்.

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம், உதவி இயக்குநராவதற்கான கையேடு

ஆர்.எஸ்.அந்தணன்

பட்டாம்பூச்சி பதிப்பகம்

45/21, இருசப்பா தெரு

சென்னை-5

விலை: ரூ.75

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்