திரை விமர்சனம்: கள்ளப்படம்

By இந்து டாக்கீஸ் குழு

திரைப்படம் எடுப்பதைப் பற்றிய இன்னொரு படம் ‘கள் ளப்படம்’. சினிமாவையே சுவாசிக்க விரும்பும் இளைஞர்க ளின் வேகத்தையும் வலியையும் சொல்லும் இந்தக் கதை, வாய்ப்புக் கிடைக்காத பட்சத்தில் சினி மாவுக்காகக் கள்ளத்தனம் உட்பட எதையும் செய்வார்கள் என்றும் சொல்கிறது.

கூத்துக் கலைஞரான தன் தந்தையின் கதையைப் படமாக எடுக்க வேண்டும் என்பது வடிவேலின் கனவு. கோடம்பாக்கத் தில் அவர் தட்டாத கதவு இல்லை. யாரும் இவரை மதிக்கத் தயாராக இல்லை. ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் சீறி எழும் வடிவேல், தனக்கு வாய்ப்புத் தர மறுக்கும் தயாரிப்பாளரின் வீட்டிலேயே கொள்ளையடிக்கத் திட்டமிடுகிறார்.

அந்தத் தயாரிப்பாளருக்கு ஒரு ரகசியக் காதலி. அவர் முன்னாள் ஹீரோயின். அவருக்கு ஒரு காதலன். தயாரிப்பாளரின் சொத் தைக் காதலன் உதவியுடன் கொள் ளையடிக்க வேண்டும் என்பது அவர் திட்டம். சினிமா குழுவும் முன்னாள் ஹீரோயின் குழுவும் ஒரே நேரத்தில் திட்டம் போடுகிறார்கள். இதனால் ஏற்படும் குழப்பம், காணாமல் போகும் பணம், போலீஸ் நடவடிக்கை என்று விறுவிறுப்பாக நகரும் படத்தில் வடிவேலின் கனவு பலித்ததா என்பதையும் சொல் கிறார் இயக்குநர்.

தயாரிப்பாளர் வீட்டில் கொள் ளையடிக்க நால்வர் போடும் திட்டம் திகில் படம்போல வேகமாகக் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. கொள் ளையடிக்கும்போது தயாரிப்பாளர் வீட்டில் இருக்கக் கூடாதே என்று முதலில் அவரது காதலியைக் கடத்துகிறார்கள். அவரைப் பணய மாக வைத்துக்கொண்டு 20 லட்சம் கேட்க, “20 லட்சமா.. அதுக்கு எல்லாம் அவ வொர்த்தே இல்ல” என்று சொல்லி தயாரிப்பாளர் அதிர்ச்சி கொடுப்பது சுவாரஸ்யம் என்றால், அவரை மடக்க இவர்கள் சொல்லும் விஷயம் அட்டகாசமான சரவெடி.

நடிப்பில் முத்திரை பதிக்கும் கே, பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தின் இயல்பான ஓட்டத்தைச் சரி யாக படம்பிடித்திருக்கிறார் ஒளிப் பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷ்.

ஆங்காங்கே சுவாரஸ்யமான அம்சங்களும் த்ரில்லும் இருந் தாலும் மெதுவாக நகரும் முதல் பாதி, படத்தின் பெரிய குறை. நடன மாடாமல் இருப்பதன் காரணத்தை நாயகன் தெரிவிக்கும் இடம் மனதைத் தொடுகிறது. பல இடங் களில் கதாபாத்திரங்களின் நடிப்பை விட அவர்கள் பேசும் வசனம் மட்டுமே மனதில் நிற்கிறது.

புதிய இயக்குநர் வடிவேல், மிஷ்கினிடம் உதவியாளராக இருந்தவர். பத்திரிகையாளராகவும் இருந்தவர்... நடிப்பிலும் நேர்த்தி காட்டியிருக்கிறார். அதற்காக மிஷ்கின் படத்தில் இடம்பெறும் குத்துப் பாடலைப் போலவே ஒரு பாடலை வைக்க வேண்டுமா என்ன? தனது உதவியாளருக்காக ‘வெள்ளக்கார ராணி’ பாடலை எழுதியதோடு, பாடியும் கொடுத் திருக்கிறார் மிஷ்கின்.

படத்தின் இயக்குநர், ஒளிப்பதி வாளர், எடிட்டர், இசையமைப்பாளர் ஆகியோரே பிரதான கதாபாத்தி ரங்களில் நடித்திருப்பது புதுசு. அதிலும் இசையமைப்பாளர் கேவின் நடிப்பு கச்சிதம்.

இரண்டு காட்சிகளே வந்தாலும், செந்தில் நம் மனதைக் கொள்ளை கொள்கிறார். மார்க்கெட் போன நாயகியாக லட்சுமி ப்ரியா தோற்றத்தாலும் நடிப் பாலும் கவர்கிறார். நரேன் வழக்கம் போலவே வலுவான நடிப்பைத் தந்திருக்கிறார். சிங்கம்புலி, படத்தில் சிங்கம்புலி என்ற கதா பாத்திரத்திலேயே நடித்திருக்கிறார்.

இயக்குநரின் தாகத்தையும் வேதனையையும் சொல்லும் படம், போட்ட பணத்தை எடுக்க முடியுமா என்று யோசிக்கும் தயாரிப்பாளரின் நியாயத்தையும் பதிவுசெய்கிறது. திரைப்படம் எடுப்பது என்னும் கனவுக்குப் பின்னால் உள்ள வலியையும் வாழ்க்கையையும் கிட்டத்தட்ட திகில் படம் போன்ற விறுவிறுப்புடன் படமாக்கியிருப்பது பாராட்டத்தக்கது. முதல் பாதியை யும் வேகமாக்கியிருந்தால் ‘கள்ளப்படம்’ மனதை முழுமை யாகக் கொள்ளை கொண்டிருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்