திருமணம் செய்தால் நட்பில் விரிசல் விழும் என்று ஐந்து நண்பர்கள் கூடித் திருமணமே வேண்டாம் என்று சத்தியம் செய்துகொள்கிறார்கள். அவர்களில் ஒருவனுக்குக் காதல் ஆசை பூக்கிறது. அந்தக் காதலை நண்பர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா அல்லது பிரிக்கிறார்களா என்ற கேள்விக்குள் காமெடி கலந்து நீந்திச் செல்கிறது இந்தக் ‘கப்பல்’.
பள்ளிக் காலம் முடிந்து கல் லூரி நாட்களிலாவது காதலிக்க முயற்சிக்கலாமே என்று இறங்கு கிறார் நாயகன் வைபவ். அதற்குக் கொஞ்சம்கூட இடம் கொடுக்காமல் வைபவுக்கு அமையும் எல்லா சந்தர்ப்பங்களையும் கெடுக் கிறார்கள், நண்பர்கள். கடைசியாக, சென்னைக்கு வேலைக்குப் போகிறேன் என்று பொய் சொல்லிவிட்டு நண்பர்கள் கருணா, அர்ஜுனன், வெங்கட் சுந்தர், கார்த்திக் ஆகியோரைப் பிரிந்து புறப்படுகிறார், வைபவ். அங்கு விடிவி கணேஷ் அறையில் தங்கி, காதலிக்கப் பெண் தேடுவதே வேலையாக இருக்கிறார். விடிவி கணேஷும் சில பல ஐடியாக்களை அள்ளித் தெளிக்கிறார்.
அப்படி ஒரு சந்தப்பர்த்தில்தான் நாயகி சோனம் பாஜ்வாவின் அறிமுகம் ஒரு பார்ட்டி ஹாலில் கிடைக்கிறது. குடி போதையில் ‘ஐ லவ் யூ’ என்று சொன்ன வார்த்தைக்காக அவரது வீடு, அவர் செல்லும் ஸ்போர்ட்ஸ் கிரவுண்ட் என்று துரத்தித் துரத்திக் காதலை வெளிப்படுத்துகிறார். நாயகனின் சேட்டைகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அடியாட்களை வைத்து மிரட்டுகிறார் சோனம். மோதல் ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது. இந்த நேரத்தில் மற்ற நண்பர்கள் நண்பனைப் பார்க்கச் சென்னை வருகிறார்கள்.
அவர்கள் வைபவை எந்தச் சூழலில் சந்திக்கிறார்கள், அதன் பிறகு நடக்கும் விஷயங்கள் என்ன என்பதை நோக்கி கிளைமாக்ஸ் செல்கிறது.
நண்பர்கள் பிரிந்துவிடுவார் கள் என்பதற்கு இதெல்லாம் ஒரு காரணமா என்று நினைத் துக்கொண்டே பார்க்கத் தொடங் கினாலும் அடுத்தடுத்து வைபவ் எடுத்து வைக்கும் முயற்சிகள் படத்துக்குள் நம்மை நேர்த்தியாக இழுத்துச் செல்கின்றன. காதலிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே சென்னைக்கு பஸ் பிடித்துப் புறப்படும் நாயகனின் திட்டத்தைப் புரிந்துகொள்ளாமல் நண்பர்கள் கண்ணீர் மல்க விடைகொடுக்கும் இடம் ரகளை. இரவு நேரத்தில் வீடு திரும்பும் விடிவி கணேஷ் கூடவே பெண்ணையும் அழைத்து வருவது முகம் சுளிக்கவைக்கிறது.
வைபவ் தவிர மற்ற நான்கு நண்பர்களில் ஒருவன் ஊரிலேயே நண்பர்களை எதிர்த்துத் திருமணம் செய்துகொள்வதும், அதனால், அவன்மீது கோபத்தோடு மற்ற நண்பர்கள் சென்னையில் வைப வைப் பார்க்க வந்து சேர்வதும் அழகான லாஜிக்.
வைபவ், சோனம் பாஜ்வா காதலில் புதிய காட்சி எதுவும் இல்லை. சோனம் பாஜ்வாவின் அப்பாவின் நண்பர், பிசினஸ் ரீதியாக அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்காகத் தன் மகனிடம் நாயகியைக் காதலிக்கச் சொல்லிக் கொடுக்கும் ஐடியாக்கள் எல்லாம் ரொம்பவே ஓவர்.
சோனம் பாஜ்வா வைபவை, அடிக்க அடியாட்களை அனுப்பும் போது கெட்ட வார்த்தைகளால் சண்டை போட்டுக்கொள்ளும் இடம் புதிது என்றாலும் அவ்வளவு நேரம் அந்தக் காட்சி நீள்வது எரிச்சலை உண்டாக்கவே செய்கிறது. கூடவே இரட்டை அர்த்த வசனங்களும், முகம் சுளிக்க வைக்கும் செய்கைகளும் இப்படத்தை குடும்பத்துடன் பார்க்க முடியாதபடி செய்கிறது.
ஆரம்பம் முதல் கடைசிவரை அதிகத் தடுமாற்றங்கள் இல்லாமல் காமெடி கலந்து திரைக்கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ். அதையே இன்னும் விறு விறுப்பாக, செறிவுடன், அறி வார்ந்த திருப்பங்களைக் கலந்து கொடுத்திருந்தால் இந்த அறிமுக இயக்குநரைச் சரியாக அடை யாளம் காட்டும் படமாக இது ஆகியிருக்கும்.
இயக்குநர் ஷங்கர் இந்தப் படத்தைப் பார்த்துக் கவரப்பட்டு இதை வெளியிடும் முடிவை எடுத்ததாகச் சொல்கிறார்கள். படத் தின் ஓட்டத்தில் சீரற்ற தன்மையும் சற்றே முகம் சுளிக்கவைக் கும் காட்சிகளும் இருந்தாலும் இளைஞர்களைத் துள்ள வைக் கும் படமாக இருப்பதால் ஷங்கருக்கு இந்த ‘பாய்ஸ்’-ஐ பிடித்திருக்கலாம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago