இரண்டு பாட்ஷாக்கள் - ஷமிதாப் முன்னோட்டம்

By சங்கர்

சீனி கம் மற்றும் பா போன்ற வித்தியாசமான திரைப்படங்களின் மூலம் பாலிவுட்டில் கொடி கட்டிய தமிழர் இயக்குநர் பால்கி. இவர் ‘ஷமிதாப்’ படத்தை அறிவித்த நாளிலிருந்தே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இப்போது அதன் முன்னோட்டமும் வெளியாகி விட்டது.

இந்தப் படத்திலும் பால்கியோடு அமிதாப் - இளையராஜா-பி.சி.ஸ்ரீ ராம் கூட்டணிதான். உடன் இணைந்திருப்பவர் தனுஷ். தனது முதல் இந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலமாக வட இந்தியப் பார்வையாளர்களின் கவனத்தைச் சட்டென்று ஈர்த்தவர். இவருடன் கமல் ஹாசனின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசனும் கேமரா முன்னால் காலடி எடுத்து வைக்கும் அறிமுகப் படம் இது.

யார் இந்த ஷமிதாப் (Shamithab)? தனுஷ் மற்றும் அமிதாப் ஆகிய இருவரின் பெயரையும் சேர்த்துதான் ஷமிதாப் உருவாக்கப்பட்டுள்ளது. ஊமை நடிகனாக தனுஷ் இப்படத்தில் கதாபாத்திரம் ஏற்றுள்ளார். அவருக்குக் குரல் கொடுப்பவராக அமிதாப் நடிக்கிறார்.

முன்னோட்டத்திலேயே அமிதாப் தனது கதாபாத்திரம் என்னவென்பதை பிரமாதமாக வெளிப்படுத்துகிறார். ஒரு தோல்வியுற்ற கலைஞனாக, குடிகாரனாக விரக்தியைப் பிரமாதமாக வெளிப்படுத்துகிறார் அமிதாப். அமிதாப்புக்கும், தனுஷுக்கும் இடையிலான மோதல்தான் கதை என்பதை முன்னோட்டம் உணர்த்துகிறது.

நடிகனின் திறன்களை மெருகேற்றிக்கொள்ளும் வாய்ப்புள்ள ‘ஆடுகளம்’ போன்ற படங்களிலும், நட்சத்திர பலத்தை உயர்த்திக் கொள்ள ‘ வேலையில்லா பட்டதாரி’ போன்ற படங்களிலும் மாறி மாறி நடித்துத் தனது சாத்தியத்தை அதிகரித்தபடி இருக்கும் தனுஷுக்கு ‘ஷமிதாப்’ இந்திய அளவில் பெரிய உயரத்தை அளிக்கும் என்பதை முன்னோட்டம் கோடிட்டுக் காட்டுகிறது.

அமிதாப்-தனுஷ் இணைந்திருக்கும் இப்படத்தில் பாலிவுட்டின் எப்போதைக்குமான கனவுக்கன்னி ரேகாவும் நடித்துள்ளார். இந்தித் திரையுலகில் வெற்றிகரமான நட்சத்திர ஜோடியாக அக்காலத்தில் அமிதாப்-ரேகா இருந்துள்ளனர். ரேகா பற்றி ‘ஷமிதாப்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசும்போது அமிதாப் வெட்கப்பட்டார்.

இந்தப் படத்தைப் பொறுத்தவரை அமிதாப்பும் ரேகாவும் ஒரு காட்சியில்கூட இணைந்து நடிக்கவில்லை என்பது இயக்குநர் பால்கியின் திரைக்கதை மந்திரம். இரண்டு பேரும் இணைவதற்கு ஏற்ற கதை வந்தால் நடிப்பதற்கு வாய்ப்பிருப்பதாக அமிதாப் இசை வெளியீட்டின்போது தெரிவித்துத் தனது ரசிகர்களை ஆசுவாசப்படுத்தினார்.

அமிதாப்புடன் நடிப்பதற்குக் கடவுளுக்கு நன்றி சொல்லியுள்ளார் தனுஷ். இந்தியில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் தனது ஆசையையும் வெளிப் படுத்தியுள்ளார். தமிழில் தனுஷ் என்ற நடிகனின் மேல் இருக்கும் சுமையும் எதிர்பார்ப்புகளும் இந்தித் திரையுலகில் இல்லாததால் சுதந்திரமாக உணர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் படத்தில் ரோஹித் ஷெட்டி, கரன் ஜோஹர், மகேஷ் பட், அனுராக் பாசு, ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹெரா, ராஜ்குமார் ஹிரானி, கவுரி ஷிண்டே, ஜாவெத் அக்தர், போனி கபூர், ஏக்தா கபூர் எனப் பாலிவுட்டின் பல பிரபலங்களும் கவுரவ வேடம் ஏற்றுள்ளனர். ஷமிதாப் பிப்ரவரி ஆறாம் தேதி இந்தியாவெங்கும் வெளியாகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

59 mins ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்