திரையிசை: மொழி பிரிக்காத உணர்வு 27 - பூவெல்லாம் கேட்டுப் பார்

By எஸ்.எஸ்.வாசன்

மெதுவாக வெளிப்படுத்தும் மென்மையான உணர்வாகவே காதல் விளங்குகிறது. இந்த அம்சத்தின் அடிப்படையில் எழுதப்படும் திரைப் பாடல்களும் அதற்கேற்ற காட்சி அமைப்பும் ரசிகர்களின் உள்ளத்தில் நீண்ட காலம் நிலைத்திருக்கும்.

‘நான் உன்னை எவ்வளவு ஆழமாகக் காதலிக்கிறேன் தெரியுமா’ என்று நேரடியாக காதலியிடம் சொல்லாமல், நம்மைச் சுற்றியுள்ள பூக்கள், வானம். நிலம், மேகம், போன்ற இயற்கை மட்டுமின்றி ஜன்னல் மாதிரியான ஜடப்பொருட்கள்கூட அந்தக் காதலை உனக்கு உணர்த்திக்கொண்டிருக்கின்றன என்ற உணர்வை தத்தம் பாணியில் வெளிப்படுத்தும் தமிழ், இந்திப் பாடல்களைப் பார்ப்போம்.

1982-ம் ஆண்டு வெளிவந்த தேரி கசம் (உன் மீது ஆணை) என்ற இப்படத்தின் இசை அமைப்பாளர் ஆ.டி. பர்மன். பாடலாசிரியர் ஆனந்த பக்ஷி. இப்பாடலைப் பாடியவர் அமீத்குமார்.

பாடல்.

யே ஜமீன் கா ரஹீஹை

ஆஸ்மான் கா ரஹாஹை

சாத் மேரே யே ஜஹான் கா ரஹாஹை

தோஷோக் கலியோன் கே கூங்கட்

ஸர்கனே லகா ஹை

மஸ்த் ஃபூலோன் கி தில் பீ

பொருள்:

இந்த பூமி பாடுகிறது

இந்த ஆகாயம் பாடுகிறது

என்னுடன் இந்த உலகமே பாடுகிறது

எழிலான இந்தப் பூ மொட்டுகள் தங்கள் முக்காடுகளை விலக்கத் தொடங்குகின்றன

(அதைக் கண்ணுறும்)

அழகான மலர்களின் உள்ளங்கள் தடுமாறத் தொடங்குகின்றன

இந்த இளவேனிற் காலத்தின்

மனம் கவரும் பருவம்

பாடத் தொடங்குகிறது

மலை உச்சியில் மேகங்கள் மிக ஆர்வத்துடன் படரத் தொடங்குகின்றன

காதல் வயப்படும் வயது ஒருவேளை

அருகில் வருகின்றன (போலும் என்று)

என் இதயம் இந்த காதல் இதிகாச

கீதத்தைப் பாட தொடங்குகிறது

மறந்து எந்த அழகியாவது

இந்தப் பக்கம் வராமல் இருக்க வேண்டும்

முகத்தைத் திரையிட்டு மூடிக்கொண்ட எந்த அழகியாவது வராமல் இருக்க வேண்டும்

(ஏனெனில்)

இங்கு ஒரு இளைஞன் (தன் காதலை)

பாடிக்கொண்டிருக்கிறான்.

காதல் மெலிதாக, மென்மையாக வெளிப்படும் இந்தப் பாடலைப் போலவே ஜென்டில்மேன் படத்தில் வைரமுத்து எழுதிய தமிழ் பாடலைப் பாருங்கள்.

என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப் பார்

என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப் பார்

என் வீட்டு தென்னங்கீற்றை இப்போதே கேட்டுப் பார்

என் நெஞ்சைச் சொல்லுமே

வாய்ப் பாட்டு பாடும் பெண்ணே மெளனங்கள் கூடாது

வாய் பூட்டுச் சட்டமெல்லாம்

பெண்ணுக்கு ஆகாது

வண்டெல்லாம் சத்தம் போட்டால் பூஞ்சோலை தாங்காது

மொட்டுகள் சத்தம் போட்டால் வண்டுக்கு கேக்காது

ஆடிக்குப் பின்னாலே காவேரி தாங்காது

ஆளான பின்னாலே அல்லிப் பூ மூடாது

ஆசை துடிக்கின்றதோ

உன் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப் பார்

உன் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப் பார்

உன் வீட்டுத் தென்னங்கீற்றை ஒவ்வொன்றாய் கேட்டுப் பார்

என் பேர் சொல்லுமே

சொல்லுக்கும் தெரியாமல்

சொல்லத்தான் வந்தேனே

சொல்லுக்குள் அர்த்தம் போல சொல்லாமல் நின்றேனே

சொல்லுக்கும் அர்த்தத்துக்கும் தூரங்கள் கிடையாது

சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது

சொல்லுக்கும் தெரியாமல் சொல்லத்தான் வந்தேனே

சொல்லுக்குள் அர்த்தம் போல சொல்லாமல் நின்றேனே

சொல்லுக்கும் அர்த்தத்துக்கும் தூரங்கள் கிடையாது

சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்