ஜனங்களின் சினிமா கொண்டாட்டம்!

By எம்.கே.மணி

கேரளா - திருவனந்தபுரம் சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 12-ல் தொடங்கியது. கிட்டத்தட்ட 150 படங்கள். ஒன்றிரண்டு அதிமேதாவிப் படங்களுக்கு நடுவே இடைவிடாமல் பார்ப்பதற்கு நல்ல படங்கள் இருந்துகொண்டே இருந்தன. தேர்வுகள் கன கச்சிதம்.

துருக்கியின் நூரி பில்கே செலோன் (Nuri Bilge Ceylon) வந்திருந்தார். அவரது ‘விண்டர் ஸ்லீப்’ (Winter Sleep) திரையிடப்பட்டது. ‘நேரில் பார்க்கும்போது எத்தகைய ஆளுமையைக் காண்கிறோமோ, அவரது பேச்சில் எப்படிப்பட்ட உண்மையை அடைகிறோமோ, அவரது படமும் விரிவும் ஆழமும் கூடி அத்தனை உறுதியோடு இருந்தது. மூன்றேகால் மணி நேரப் படம். மெதுவாய் நகரும். அதில் எவ்வித சலிப்பும் இல்லாமல் ஆழ்ந்திருக்க முடிகிறது என்றால், அதற்குக் காரணம் அதன் ஆன்ம பலம். ஒருபோதும் மறக்கவே முடியாத படம்.

இயக்குநர் கிம் கிடுக்கின் (Kim ki-duk) ‘ஒன் ஆன் ஒன்’ (One on One) இருந்தது. திரும்பிய திக்கெல்லாம் போறவன் வர்றவன் எல்லாம் வன்முறையைப் பற்றி கேள்வி கேட்டு முடுக்கினதாலோ என்னமோ, அலசி ஆராய்ந்து தனது படத்தையே பதிலாய் வைத்திருக்கிறார். ரொம்ப அலட்டிக் கொள்ளாத சிறிய படம். ஆனால் திரையில் இருந்து விழிகளை அகற்றிக் கொள்ள முடிவதில்லை. மனசு பதைபதைப்பதைத் தடுத்துக்கொள்ள முடிவதில்லை.

‘ தி பிரைட் டே’ (The Bright day) என்ற இரானியத் திரைப்படம். அதை உருவாக்கிய ஹொசைன் ஷாஹாபி (Hossein Shahabi) சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதைப் பெற்றது பொருத்தம். ஒரு படத்தைப் பார்க்கிறோமா, தெருவில் நின்று கொண்டிருக்கிறோமா என மயக்கம் தோன்றும் அளவிற்கு, அதை ஜனநாயகப்படுத்தியது எளிமையாய் முடிகிற காரியம் அல்ல.

சிறந்த இயக்குநர் விருது பெற்றது ‘சம்மர்’ Summar என்ற ஜப்பானியப் படம். நான்கு கதாபாத்திரங்கள். அவர்கள் மலையைப் புரட்டவும் இல்லை. நூதனமாய் கதை சொல்லிக்கொண்டு வந்து மொத்தமாய் திணறடிக்கிற யுக்தியை கையாண்டு, அதில் என்னமாய் வெற்றி பெறுகிறார் இயக்குநர்!

பிரான்சின் ‘தி சர்ச்’ (The Search) அற்புதமான ஓர் அரசியல் படம். யுத்தம் துரத்த உலகம் பூராவும் ஓடிக் கொண்டிருக்கிற மக்கள். சிதறிப்போகிற குடும்பங்கள். ஒரு மகன் தன் தாயைக் கண்டடையும்போது படம் முடிந்துவிட்டாலும், இன்றும் தொடர்ந்தவாறு இருக்கிற ஆக்கிரமிப்பின் கோரங்களை யோசிக்காமல் இருக்க முடியவில்லை.

மலையாளத்தில் மூன்று படங்கள் பார்க்க முடிந்தது. முக்கியமாக ‘அலிஃப் ' (Alif). முதலில் நன்றாய் உடுத்தி நிறைவாய் சாப்பிட்டு மரியாதையான ஒரு வாழ்வை வாழ்ந்துகொள்கிறோம், அப்புறம் புனித நூல்கள் என்ன சொல்கின்றன என்பதைப் பார்த்துக் கொள்ளலாம்' என்று நேரடி விமர்சனம் வைக்கிறார் இயக்குநர் என்.கே. முகமது கோயா. (NK Muhamad koya). ‘ஓராள் பொக்கம்', ‘அஸ்தமயம் வரே' என்கிற இரண்டும் ஐயமின்றி புதிய முயற்சிகள்தான்.

‘ரெஃபூகியடோ’(Refugiado) - சிறந்த படத்துக்கான பரிசைப் பெற்றது. நாம் கண்கொண்டு பார்க்கிற சகலமும்தான். குடும்ப வன்முறையின் துல்லியம். அகதிகளாய் தாயும் மகனும் ஓடியவாறு இருக்கிறார்கள். எனினும், இறுதியாய் ஒரு முடிவை எடுக்க, மிக எளிமையான அறிவு போதுமானதாய் இருக்கிறது என்று சட்டென்று முடிகிறது படம். ஆனால், நம் மனதின் ஆழத்தில் சமாதானம் பரவுவதை நிகழ்த்திக் காட்டுகிறார் இயக்குநர்.

சென்னை திரும்புவதற்கு முன் மனசில் நிழலாடுபவை, பார்த்த படங்களின் காட்சிகள் மட்டும் அல்ல... மிகுந்த உற்சாகத்துடனும் களிப்புடனும் விழாவை தங்களுடையதாய் மாற்றிக்கொண்ட ஜனங்கள். அவர்களுடைய முகங்கள். குறிப்பாய் பாசாங்கு இல்லாமல் அரங்குகளை நிறைத்த இள வயதுப் பெண்களின் முகங்கள். அவர்களில் பலரும் வருங்காலத்தில் சிறந்த படங்களை இயக்குவார்கள்!

தொடர்பில் இருக்க: mkmani-sulal.blogspot.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்