படம் பேசும்: கறுப்பே அழகு | முதுபெரும் இயக்குநர்

By செய்திப்பிரிவு

கறுப்பே அழகு

கலகக் கதாபாத்திரமோ கலங்க வைக்கும் கதாபாத்திரமோ, நாடகம், திரை இரண்டிலுமே இயல்பான நடிப்பு முத்திரை பதித்துவரும் நந்திதா தாஸின் 45-வது பிறந்தநாள் இன்று. குஜராத் கலவரத்துக்குப் பிறகான அன்றாட வாழ்வின் சிக்கல்களைப் பேசிய ‘ ஃபிராக்’ திரைப்படத்தை இயக்கி மாற்று சினிமா இயக்குநராகவும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். தற்போது சமூக மாற்றத்துக்கான பேச்சாளராகவும், திரைப்பட விழாக்களுக்குச் சிறப்பு அழைப்பாளராகவும் உலகம் சுற்றிக்கொண்டே, தன் குடும்பத்தையும் கவனித்துக்கொள்கிறார். சிவந்த உடல் நிறத்துக்காக ஏங்கும் இந்தியர்களைக் கடுமையாகச் சாடும் நந்திதா “ நிறத்தைவிட வாழ்க்கையே உயர்வானது” என்று ‘ டார்க் இஸ் ஃபியூட்டிஃபுல்’ இயக்கத்துக்காகப் பிரச்சாரம் செய்து வருகிறார். கான் பட விழாவின் ஜூரியாக இங்கே புன்னகைக்கிறார்.

முதுபெரும் இயக்குநர்

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் தனது முதுபெரும் உறுப்பினர் ஒருவரை அழைத்து, அவரது 101-வது பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாடி அசத்தியது. பி.யூ.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம், எம்.கே.தியாகராஜ பாகவதர், பிரேம் நசீர் உட்பட அந்நாளின் உச்ச நட்சத்திரங்களை இயக்கிய மித்ரதாஸ், 93 வயதான தனது மனைவி எலிசபெத் மற்றும் குடும்பத்தாருடன் வந்திருந்தார். அவரைப் பெருமையுடன் வரவேற்று அழைத்து வருகிறார்கள் சங்கத் தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி இருவரும். அப்போது க்ளிக்கியவர் வள்ளியூர் குணா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்