கலக்கல் ஹாலிவுட்: திவாலான நகரத்தின் வரலாறு!

By திரை பாரதி

ஹாலிவுட்டின் சூப்பர் ஹிட் இயக்குநர்கள் பட்டியலில் பெண்கள் பலருக்கு இடமுண்டு. ஆனால் ‘வொண்டர் வுமன்’ படத்தை இயக்கிய பேட்டி ஜென்கின்ஸ் வெற்றிக்குப் பிறகே மற்ற பெண் இயக்குநர்கள்மீது விளம்பர வெளிச்சம் பாயத் தொடங்கியிருக்கிறது. தற்போது ஹாட் டாபிக் ஆகியிருக்கும் ஹாலிவுட் பெண் இயக்குநர் கேத்ரின் பிகிலோவ்.

‘பாய்ண்ட் பிரேக்’ போன்ற அட்டகாசமான போர்ப் படங்கள், ‘ஸீரோ டார்க் தர்ட்டி’ போன்ற க்ரைம் த்ரில்லர் என விதவிதமான படங்களில் முத்திரை பதித்த இயக்குநர் இவர். ஆண் இயக்குநர்களே கைவைக்கத் தயங்கும் அமெரிக்காவின் வரலாற்றிலிருந்து ஒரு பகீர் பக்கத்தைப் படமாக்கியிருக்கிறார்.

படத்தின் பெயர் ‘டெட்ராய்ட்’. நீங்கள் நினைப்பது சரிதான். அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற தொழில்நகரம் அது. உலக சமுதாயத்துக்கு விதவிதமான கார்களை உற்பத்தி செய்துகொடுத்த இந்த நகரம் தொழில் வளர்ச்சிக்கு எப்படிப் புகழ்பெற்றதோ, அதேபோல இனக் கலவரத்துக்கும் பெயர் பெற்றதுதான். இந்த நகரத்தின் நகராட்சி ஊழியர்களுக்குக் கூடச் சம்பளம் கொடுக்க முடியாமல் 1 லட்சத்து 8 ஆயிரம் கோடி கடனில் சிக்கி திவாலான அமெரிக்க நகரம் இதுதான்.

அப்படிப்பட்ட இந்த நகரத்தின் 12-வது தெருவில் 1967 ஜூலை 25 அன்று தொடங்கிய இனக் கலவரம் டெட்ராய்ட்டை இரண்டு நாட்கள் ஒரு செத்த நகரமாக மாற்றியது. அதற்குக் காரணம் அல்ஜீயர்ஸ் மோட்டல் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம். இந்தச் சம்பவத்தின் பின்னணியையும் சொந்த மக்கள் மீது வெறிநாய்போல் பாய்ந்த ராணுவத்தின் முகத்தையும் ‘டெட்ராய்ட்’ படத்தில் துணிச்சலுடன் வெளிப்படுத்திருக்கிறாராம் கேத்ரின். படம் ஆகஸ்ட் 4-ல் வெளியாகிறது. ஒரு வரலாறு த்ரில்லர் ஆகியிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்