4 விருதுகளை அள்ளிய ருத்ரம் தொடர்: புதிய த்ரில்லர் சீரியலுக்கான விதை

By மகராசன் மோகன்

தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கான (2009 - 2013) சின்னத்திரை தொடர்கள், கலைஞர்களுக்கான விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இதில், 2012-ல் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ருத்ரம்’ தொடர் சிறந்த கதாசிரியர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த பின்னணி இசையமைப்பாளர், சிறந்த தந்திரக் காட்சி (விஷுவல் எஃபெக்ட்) ஆகிய 4 பிரிவுகளில் விருதுகளைப் பெற்றுள்ளது. ஒய்.ஜி.மகேந்திரன், காளிதாஸ், பாரதி, பூவிலங்கு மோகன், குயிலி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த இத்தொடரை ஷாண் இயக்கியிருந்தார். அவருடன் ஒரு நேர்காணல்..

பக்தியில் இருந்து த்ரில்லர்

1990-களின் இறுதியில் புராணத் தொடர்கள் மட்டுமே தொலைக்காட்சிகளில் வந்தன. அந்த காலகட்டத்தில் இந்திரா சவுந்தரராஜனின் ‘மர்ம தேசம்’ த்ரில்லர் தொடர், சின்னத்திரையில் புதுமாதிரி திகில் அனுபவங்களை விதைத்தது. பக்தி என்பதை த்ரில்லர் விஷயமாக முதன்முதலில் மாற்றிக்காட்டிய தொடர் ‘மர்ம தேசம்’ என்று கூறலாம். தனியார் தொலைக்காட்சிகள் வரத்தொடங்கியிருந்த காலகட்டம் அது. அப்போதெல்லாம் படப்பிடிப்புக்கு கோயில்கள் கிடைக்காது. த்ரில்லர் காட்சிகளை உருவாக்க அதிக அவகாசம் தேவைப்படும். இதனால், த்ரில்லர் தொடர்கள் வாரம் ஒருமுறைதான் வரும்.

28ChREL_Rudram 1 Shan ‘ருத்ரம்’ இயக்குநர் ஷாண்

இந்த சூழலில், ‘மர்ம தேசம்’ தொடரை மெகா தொடராக எடுக்க முடியுமா? என்று ஜெயா டிவியில் கேட்டனர். அப்போதுதான், மாயன் காலண்டர் கணக்குப்படி 2012-ல் உலகம் அழியப்போகிறது என்ற பேச்சு எழுந்தது. அதையே மையமாக வைத்து ஒரு மூலக்கதையை உருவாக்கினேன். அதுதான் ‘ருத்ரம்’. நானும், இந்திரா சவுந்தரராஜனும் சேர்ந்து திரைக்கதை அமைத்தோம்.

5டி - ஃபிலிம் லென்ஸ் சீரியல்

எப்போதுமே விஷுவல் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பேன். அந்த வகையில், பயணம், சித்தர், கோயில், மலை என்று ‘ருத்ரம்’ தொடர் பிரம்மாண்டமாக அமைந்தது. ஒரு சினிமா போல எடுத்தோம். ஒரு நந்தி வேண்டும் என்றால்கூட, 250 நந்திகளை மாடல் பார்த்து அதில் இருந்து ஒன்றை உருவாக்கினோம். சின்னத்திரையில் முதன்முறையாக 5டி கேமரா, ஃபிலிம் லென்ஸ் கொண்டு படமாக்கப்பட்ட தொடர் இது.

தற்போது கிடைத்திருக்கும் இந்த விருதுகளை எங்கள் குழுவைச் சேர்ந்த கதாசிரியர் இந்திரா சவுந்தரராஜன், ஒளிப்பதிவாளர் ராஜசேகரன், இசையமைப்பாளர் பால பாரதி, விஷுவல் எபெஃக்ட் அமைத்த மதி, செந்தில் சகோதரர்கள் ஆகியோருக்கு கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கிறோம்.

‘ருத்ரம்’ பாணியில், 3டி-யில் மிரட்டும் ஒரு தொடருக்கான வேலை விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. நானும், இந்திரா சவுந்தரராஜனும் சேர்ந்துதான் அதையும் எழுதுகிறோம். சன் தொலைக்காட்சியில் வரும் ‘மகாலட்சுமி’ தொடரின் கதை, திரைக்கதை வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

28ChREL_Rudram 2 மதி - செந்தில் சகோதரர்கள்

ருத்ரம் தொடரின் தந்திரக் காட்சிக்காக (விஷுவல் எஃபெக்ட்) விருது பெற்றுள்ள பொம்மி அண்ட் பிரெண்ட்ஸ் கிரியேட்டர்ஸை சேர்ந்த மதி, செந்தில் சகோதர்கள் கூறியதாவது:

சின்னத்திரை தொடர்களில் தந்திரக் காட்சிகளுக்காக கொடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விருது இதுதான் என்று நினைக்கிறேன். சர்வதேச அளவிலான ‘ஏசியன் டெலிவிஷன் போஃரெம்’ (ஏடிஎஃப்) 2010-ம் ஆண்டுக்கான ரன்னர் விருதை எங்களது பொம்மி அண்ட் பிரெண்ட்ஸ் கிரியேட்டர்ஸ் நிறுவனம் ஏற்கெனவே வாங்கியுள்ளது.

எம்ஜிஆர், சிவாஜி படங்கள்

தனக்கு எது தேவை என்பதை நன்கு புரிந்துகொண்ட இயக்குநர், அதற்கேற்ற தொழில்நுட்பக் கலைஞரோடு உட்கார்ந்தால், நினைப்பதை திரையில் கொண்டுவந்துவிடலாம். ‘ருத்ரம்’ தொடரிலும் இதுதான் நடந்தது. இன்று டிஜிட்டலில் நாம் செய்வதை எல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே நமது திரையுலகம் செய்துவிட்டது. ஒரு எம்ஜிஆர், இன்னொருஎம்ஜிஆருக்கு கைகொடுப்பார்.

3 சிவாஜிகணேசன்கள் ஒருவரை ஒருவர் சுற்றி வருவார்கள். மிக்சல் கேமரா ஆப்டிக்கல் வைத்தே இதையெல்லாம் காட்டி அசத்தினார்கள். அந்த அளவுக்கு கிரியேட்டிவிடி மிக்க தொழில்நுட்பக் கலைஞர்கள் இருந்தனர். இன்று தொழில்நுட்பம், கருவிகள் நிறைய இருக்கின்றன. தொழில்நுட்பக் கலைஞர்கள் கம்மியாகிவிட்டனர்.

28ChREL_Rudram 4 ‘ருத்ரம்’ தொடரில் ஒய்.ஜி.மகேந்திரன்

‘ருத்ரம்’ தொடருக்குப் பிறகு, அதுபோன்ற விஷுவல் எஃபெக்ட் தொடர்கள் நாலைந்து ஆண்டுகளாக வரவில்லை. சன் தொலைக்காட்சியின் ‘நாகினி’ தொடருக்குப் பிறகு அது மீண்டும் சூடுபிடித்துள்ளது. இப்போது சன் தொலைக்காட்சியின் ‘கங்கா’ தொடரில் விஷுவல் எஃபெக்ட் செய்கிறோம்.

‘குட் டச் ,பேட் டச்’ என்பதை மையமாகக் கொண்டு பொம்மி கதாபாத்திரம் மூலம் குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் தொடர் தயாரிக்கும் வேலையில் இறங்கியுள் ளோம் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்